ஒரு தடவைக்கு ரெண்டு தடவை உத்து பார்க்க வைக்கும் அசத்தல் போட்டோ கலக்ஷன்!

Subscribe to Boldsky
ஒரு தடவைக்கு ரெண்டு தடவை உத்து பார்க்க வைக்கும் அசத்தல் போட்டோ கலக்ஷன்!- வீடியோ

வீக்கென்ட் மந்தமா இருக்கா? இன்னும் உங்க நாள் ஸ்டார்ட் ஆகலையா... கவலைய விடுங்க... இந்த படங்கள ஒரு தடவைக்கு ரெண்டு தடவை உத்து பாருங்க... உங்க நாள் செம்மையா ஸ்டார்ட் ஆயிடும். எல்லாத்துக்கும் நேரம் தான் காரணம். என்ன தான் நாம் முயற்சிப் பண்ணாலும் எந்த செயலா இருந்தாலும், அந்தந்த நேரங்காலத்துல தான் அமையும்...ன்னு... வீட்டுல இருக்க பெரியவங்க பல தடவை சொல்லியிருப்பாங்க. நீங்களும் கேட்டுருப்பீங்க.

இதோ! அப்படி சரியான நேரத்துல கிளிக் பண்ண அசத்தல் படங்கள் தான் இவை. நாமளா பிளான் பண்ணிப் பண்ணாலும் இப்படியான போட்டோஸ் அமையாதுன்னா பார்த்துக்கங்களேன். சிலர் சொல்வாங்க... எல்லாத்துக்கும் லக் வேண்டும்... அப்பத்தான் நடக்கும்ன்னு ஒருவேளை இந்த படங்கள் கூட லக்குல நடந்திருக்கலாம். சரி வாங்க நேரத்தை வீணடிக்காம போட்டோஸ் பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தீயணைப்பு வீரர்

தீயணைப்பு வீரர்

பெரூ நாட்டில் நடந்த ஒரு விபத்தின் போது தீயணைப்பு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு தீயணைப்புப் படை வீரர். இது ஒரு சிறந்த க்ளிக் ஆகும். தங்கள் உயிரை பணயம் வைத்து, பிறர் உயிரை காக்கும் சிறந்த துறை தீயணைப்புத் துறை. இவர்களை தான் உண்மையான ஹீரோ என சொல்ல வேண்டும்.

வண்டு

வண்டு

பூக்கள் மீது காதல் கொண்ட தேன் பருகும் வண்டொன்று, சூரியனை பரிசளிக்க தூக்கி செல்லும் காட்சி. காணக் கிடைக்காத அற்புதமான காட்சி இது. இந்த படத்தை க்ளிக் செய்த நபருக்கு பெரிய சபாஷ் போட வேண்டும். இது ஒரு கவித்துவமான புகைப்படமாகும்.

தேவதை

தேவதை

தேவதை... தேவதை.... அவளொரு தேவதை... என இந்த படத்தைக் கண்டவுன் மனதுக்குள் பாடல் வரிகள் ஒலிக்க துவங்கிவிடுகிறது. சிறகுகள் இருந்தால் தான் தேவதையா? இதோ அவளிடம் சிறகுகளும் இருக்கிறது... என க்ளிக் செய்து காண்பித்துள்ளார் இந்த புகைப்படக் காரர். அடடே! ஆச்சரியக்குறி!!! என பார்த்திபன் போல சொல்ல வைக்கிறது!

துணி துவைக்கும் அம்மா

துணி துவைக்கும் அம்மா

அம்மா ஒருவர் சாதாரணமாக துணி துவைக்கும் காட்சி. அதை தான் அந்த புகைப்படக் கலைஞர் பலமுறை தொடர்ந்து புகைப்படம் எடுத்து வந்துள்ளார். ஆனால், ஒரு ரேண்டம் கிளிக்கில் அம்மா துணியை உதறி காயப்போடுவது ஏதோ ஒரு நபர் போன்ற பிம்பத்தை அளித்துள்ளது.

அய்யோ பாவம்!

அய்யோ பாவம்!

நமக்கெலாம் ஒரு சோதனைன்னா அந்த ஆண்டவன்கிட்ட போவோம்... அந்த ஆண்டவனுக்கே ஒரு சோதனைன்னா...? பசங்களுக்கு டவுட்டுன்னா உதவி கேட்டு டீச்சர்க்கிட்ட போவாங்க... அந்த டீச்சரே ஹெல்புன்னு கேட்டா... ஓ மை காட்!

கழுகார்!

கழுகார்!

இவரு தான் கழுகார் போல... எவன்டா அது என்கிட்டே பர்மிஷன் கேட்காம என்ன படம் பிடிக்கிறது என அசலாட்டு லுக்கில் பார்க்கும் கழுகு. தனது ஐ போன் மூலம் இந்த படத்தை க்ளிக்கியுள்ளார் அந்த புகைப்படக் கலைஞர். காத்திருந்த க்ளிக்கிய படம் போல...

ஷிட்!

ஷிட்!

ஆங்கிலத்தில் ஒரு வாக்கியப் பயன்பாடு இருக்கிறது. கோபத்திலோ, எதிர்பாராத வகையில் ஏதேனும் நடக்கும் போதோ ஹோலி ஷிட் என்பார்கள். ஒருவேளை இதுதான் அந்த ஹோலி ஷிட்டோ. நேரடியாக சூரிய ஒளி, கழிவறையில் விழும் காட்சி. ஆனா, ஒரு டவுட்டு. அந்த இடத்துலயும் தன்னோட கிரியேட்டிவ் வர்க் காண்பிச்சிருக்க அந்த கலைஞர பாராட்டியே ஆகணும்.

இசை!

இசை!

திரும்ப அதே பார்த்திபன் மொமன்ட். ஒரு ஸ்வீட் ஸ்டாலே ஸ்வீட் சாப்பிடுகிறதே.. என்பது போல... இசை கேட்க உதவும் ஹெட்செட்டே இசை அமைப்பு உருவில் சுருண்டு இருப்பது ஜஸ்ட் லைக் தட் அமேஸிங்!

அடேய்!

அடேய்!

நம்ம ஊர்ல எல்லாம் மணல் தான் இப்படி லாரியில திருடிட்டு போவாங்க.. நீங்க என்னடா சூரியனையே களவாண்டு போறீங்க....? இப்படி கிளிக்க வெறும் கண்கள் மட்டும் இருந்தால் போதாது. கொஞ்சம் தலைக்குள் க்ரியேடிவ் யோசனைகளும், சிந்தனைகளும் இருக்க வேண்டும்.

அப்பா!

அப்பா!

அப்பான்னா சும்மா இல்லடா...! இவரு தான் இந்த தசாப்தத்தின் சூப்பர் டாடி! பேஸ்பால் பேட் பறந்து வந்து தாக்கவிருந்த தனது மகனை பிராக்ஷன் ஆப் செகண்டுல எப்படி காப்பாற்றியிருக்கிராறு... தன் இரத்தம் அல்லவா.... சும்மாவா!

நோ கமெண்ட்ஸ்!

நோ கமெண்ட்ஸ்!

பொசுக்குன்னு இந்த படத்தை பார்த்து உங்குக்கு இசை தலைவர் நியாபகம் வந்தா அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது. இது வெறும் ஒரே வரிசையில் இருக்கும் 14 விண்ட்மில்களின் புகைப்படம் மட்டுமே. உங்களுக்கு அந்த இசை தலைவர் நியாபகம் வரல தானே? ஹ்ம்ம்!!!

கோயின்சிடன்ட்!

கோயின்சிடன்ட்!

இதுக்கு பேரு தான் கோயின்சிடன்ட் போல! வானவில்லும், மின்னலும் கலவி காதல் கொண்ட நேரத்தில், நிறுத்தி நிதானமா ஃப்ளாஷ் போடமா.. டக்குன்னு க்ளிக்கி தள்ளிய சூப்பர் போட்டோகிராபர்!

இது பாவம் மை சன்!

இது பாவம் மை சன்!

அந்த தாடி வெச்ச தாத்தா என்ன பாவம் பண்ணாரு உங்களுக்கு? இப்படி அவருக்கு தெரியாம க்ளிக் பண்ணி, உலகமே அவர பார்த்து சிரிக்க வெச்சுட்டீங்களே...? இது நிஜமாவே பாவம் மை சன். கொஞ்சம் யோசிச்சு எடுத்திருக்கலாமேன்னு சொல்ல தோணுது. ஆனா, அந்த போட்டோகிராபர் ஏற்கனவே நல்ல யோசிச்சு தான் எடுத்திருக்கார்.

தட் தியேட்டர் சீட் மொமன்ட்

தட் தியேட்டர் சீட் மொமன்ட்

இந்த மொமென்ட் நாம எல்லாருமே தியேட்டர்ல ஃபீல் பண்ணியிருப்போம். திடீர்ன்னு பின்னாடி இருந்து ஒருத்தன் சீட் மேல கால் வெச்சு எத்துவன். செம்மா காண்டு மொமன்ட். இது தியேட்டர்ல நடந்தா பரவாயில்ல. இதோ! டிவி சீனுக்கும், ரியாலிட்டிக்கும் மேட்ச் ஆகுது பாருங்களேன்! குசும்புக் கார பயபுள்ள.

வாடி ராசாத்தி!

வாடி ராசாத்தி!

எத்தன நாள் கோபம் போல காதலி மேல... காலம் பூரா வெச்சு செய்ய செம்மையான க்ளிக் இது. நல்ல வேளையா அந்த பொண்ணோட முகம் தெரியிற மாதிரி வேற எந்த படமும் வெளிவரல. வந்திருந்தா... நம்மாளுங்க மீம் டெம்பிளேட்டா யூஸ் பணியிருப்பாங்க...

டவல்!

டவல்!

இது பாலாடையோ.. மேலாடையோ அல்ல... பீராடை என்பதை தெள்ளத்தெளிவாக கூறிக் கொள்கிறோம். இது ஒரு சிறந்த பிரீஸ் தி மொமன்ட் க்ளிக். பீர் ஏதோ டவல் கொண்டு அந்த நபரின் தலை மேல் போர்த்துவது போல பொங்கி வழியும் தருணத்தை நொடி தவறாமல் க்ளிக் செய்துள்ளார் புகைப்படக் கலைஞர்.

தம்பி பறக்குறாப்புல

தம்பி பறக்குறாப்புல

அட! தம்பி ஏதோ காத்துல பறக்கிறார்ன்னு நெனச்சிடாதேங்க... இதுவும் ட்ரிக் ஷாட் தான். ஆனாலும்! கரக்டா கிளிக்கிய ஷாட்.

பிளாக் அன்ட் ஒயிட்

பிளாக் அன்ட் ஒயிட்

சம்மர் ஹாலிடேஸ் முழுக்க ஷர்ட் போடாம விளையாடிட்டு இருந்தா ஒருவேளை இப்படி ஆகலாம். ஆனா, இது அந்த சீனில்ல.... நம்ம பிளாக் டிக்காஷன் அண்ணனுக்கு அந்தப்புல ஒரு ஒயிட் பால் அக்கா உட்கார்ந்திட்டு இருக்காங்க....

சோஷியல் மீடியா

சோஷியல் மீடியா

நாம சோஷியல் மீடியாவுல பார்க்குற, படிக்கிற முக்கால்வாசி பிரேக்கிங் நியூஸ், உங்களுக்கு தெரியுமா? செய்திகள் எல்லாமே இந்த வகையிரா செய்திகள் தான். பார்க்க கத்தியில குத்துன மாதிரி இருக்கும். ஆனால், இந்த லேடி குனிஞ்சு நிக்கிற வேற இடத்துல.. அந்த ஆள் கத்திய நீட்டிட்டு இருக்க இடம் வேற.

லாஸ்ட்

லாஸ்ட்

டக்குன்னு பார்த்தா அவதார் படத்துல வர விசித்திர விலங்கு போல இருக்குல... கண்டிப்பா இந்த தொகுப்புல நீங்க பார்த்த பல படங்கள் உங்கள ரெப்ரெஷ் ஆக்கியிருக்கும். வீக்கென்ட் என்ஜாய் பண்ணுங்க! எந்த விஷயமா இருந்தாலும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை யோசிங்க. முதல் பார்வை தவறா கூட இருக்கலாம். ஏன் புரியாம கூட இருக்கலாம். நல்ல தெளிவான, உண்மையான பதில் கிடைக்கணும்னா ஒரு தடவைக்கு ரெண்டு தடவை யோசிக்கிறது தப்பில்லையே...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Perfectly Timed Photos That Will Mess With Your Head

    Perfectly Timed Photos That Will Mess With Your Head
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more