உங்களைப் பற்றி உங்களுக்கே சொல்லும் ‘தொப்புள்’

Posted By: Volga
Subscribe to Boldsky

எதிர்காலம் குறித்த எதிர்ப்பார்ப்பு எல்லாருக்கும் கூடுதலாகவே இருக்கும். நாளை என்ன நடக்கப் போகிறது. நாளை நாம் எப்படியிருப்போம் என்ற யோசனை எல்லாருக்குமே இருக்கிறது. இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் நாம் சந்திக்கப்போகும் நபர் அல்லது நம்முடனே இருக்கும் நபரைப் பற்றிய குணநலன்கள் முன்கூடியே தெரிந்தால் எப்படியிருக்கும்.

மற்றவர்களைப் பற்றி நீங்கள் ஆராய்வதை விட இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்ன தெரியுமா? 'குறும்படம்'. ஆம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இதனை குறும்படம் என்றால் தான் சட்டென புரிகிறது. நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரிந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்குமல்லவா?

Navel Tells About Your Personality

இதோடு, நீங்கள் செய்திடும் தவறுகளையும், உங்களின் எந்த செயலால் மற்றவர்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிந்து அதனை மாற்ற முடியும். இதற்கு உங்களைப் பற்றி உங்களுக்கே முழுமையாக தெரிய வேண்டியது அவசியம். பாலூட்டிகளான அனைத்து உயிரினங்களுக்கும் தொப்புள் கண்டிப்பாக இருக்கும். ஒருவரின் தொப்புளைக் கொண்டு அவருடைய குணநலன்களை எடை போடலாம் எப்படி என்று தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

பல்ஜாக இருக்கும் தொப்புள் பொதுவாக குழந்தைகளுக்கு அதிகமிருக்கும். பெரும்பாலானோருக்குவளர வளர நார்மலாகிவிடும். சிலருக்கு மட்டும் அப்படியே இருக்கும். இப்படி தொப்புள் பல்ஜாக இருப்பவர்கள் குழந்தை மனதுடையவராக எதற்கெடுத்தாலும் சட்டென உணர்ச்சிவசப்படுபவராக இருப்பார்கள்.

அதோடு தன்னை முதன்மைபடுத்த வேண்டும் என்று நிறைய விரும்புவீர்கள்.குழுவினோரோடு நட்பு பாரட்டுவதும் உண்டு. ஆரோக்கியத்தின் அடிப்படையில் பார்த்தால் இவர்களுக்கு ஹெரன்யா பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

Image Courtesy

 #2

#2

ஷேலோ (Shallow)வாக இருந்தால் நீங்கள் மிகவும் தைரியமானவர் என்று அர்த்தம். போட்டி மனப்பான்மை உங்களுக்கு அதிகமுண்டு.எல்லாவற்றிலும் கச்சிதமாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பீர்கள்.

எல்லாரிடத்திலும் உங்கள் அதிகாரத்தை செலுத்த தயங்க மாட்டீர்கள். எடை தொடர்பான பிரச்சனை உங்களுக்கு தொடரும்.

#3

#3

தொப்புள் ஓவல் வடிவத்தில் இருந்தால் உங்களுக்கு தலைமைப் பண்பு அதிகமிருக்கும். பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதில் நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள். டாமினேட்டிங் கேரக்டராக இருந்தாலும் அது பிறரை வழி நடத்திச் செல்வதாகவே இருக்கும்.

அதீத கற்பனை வளம் உங்களுக்கு இருக்கும். மருத்துவ ரீதியாக பார்த்தால் இவர்களுக்கு மைக்ரேன் தலைவலி வர அதிக வாய்புகள் உண்டு, அதே சமயம் எலும்பு தொடர்பான பிரச்சனைகளும் வரும்.

Image Courtesy

#4

#4

Hour-glass எனப்படுகிற சற்று நீளமான தொப்புள் இருந்தால் எல்லாராலும் விரும்பப்படுகிற நபராக இருப்பீர்கள்.உங்களது பேச்சுத் திறமை அபாரமாக இருக்கும் வார்த்தைகளை கொண்டே சாதித்து விடும் ஆற்றல் உங்களிடம் உண்டு. கலைகளின் மீது தீராப் பற்று உங்களுக்கு இருக்கும்.

Image Courtesy

#5

#5

வட்ட வடிவில் இருந்தால் நீங்கள் அமைதியையும் தனிமையையும் அதிகம் விரும்பும் நபராக இருப்பீர்கள்.இயற்கை மீது உங்களுக்கு தீராக் காதல் இருக்கும்.

அதே சமயம் ஆன்மீகத்திலும் உங்களுக்கு நாட்டம் அதிகமிருக்கும். பணம் விஷயத்தில் உங்களுக்கு எப்போதுமே ஒரு பயம் இருந்து கொண்டேயிருக்கும். யாரையும் முதலில் நம்புவதற்கு ஏன் பேசுவதற்கு கூட தயங்குவீர்கள்.

Image Courtesy

 #6

#6

Bow-Tie வடிவத்தில் இருந்தால் நீங்கள் படிப்பில் படுஆர்வமாக இருப்பீர்கள். பெருங்கனவுகள், அசாத்தியமான கனவுகள் உங்களுக்கு இருக்கும். போராட்ட குணம் உடைய நீங்கள் சின்ன சின்ன சங்கடங்களுக்கு கூட சோர்ந்து போவீர்கள்.

தன்னம்பிக்கையுடன் உங்கள் இலக்கை அடையும் வரை போராடுவது அவசியமாகும்.

Image Courtesy

#7

#7

சிறிய அதே சமயம் ஃப்ளாட்டான தொப்புள் இருந்தால் உங்களுக்கு க்ரியேட்டிவிட்டி அதிகமிருக்கும்.எத்தகைய பிரச்சனைகளை சந்தித்தாலும் எதிர்நீச்சல் போட்டு மீண்டு வரும் நபராக நீங்கள் இருப்பீர்கள்.

பகுத்தாராய்ந்து முடிவெடுக்கும் தன்மை உங்களுக்கு அதிகம். அதே சமயம் பயமின்றி எந்த ஒரு முடிவையும் எடு்க்க தயங்கமாட்டீர்கள்.

#8

#8

தொப்புள் மேல் நோக்கி இருந்தால் எல்லாராலும் விரும்பப்படுகிற நபராக நீங்கள் இருப்பீர்கள். தன்னடக்கத்துடன் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வீர்கள். அவ்வளவு எளிதாக உணர்சிவசப்படமாட்டீர்கள்.

உங்களுக்கு அடிக்கடி சருமப் பிரச்சனைகள் ஏற்படும். அதே சமயம் கிட்னி தொடர்பான தொந்தரவுகளும் இருக்கும்.

#9

#9

தொப்புள் கீழ் நோக்கி இருந்தால் உங்களிடம் அதிகப்படியான பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும். அடிக்கடி கோபப்படுவதும் அதனால் பல விளைவுகளை சந்திப்பதும் உண்டு. பிறரை ஊக்கப்படுத்தும் விஷயங்களில் நீங்கள் நிறைய கவனம் செலுத்துவீர்கள்.

தன்னம்பிக்கை சார்ந்த விஷயங்கள் பலவற்றிலும் உங்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Navel Tells About Your Personality

Navel Tells About Your Personality