மனைவிக்கு தெரியாமல் 60 குழந்தைகளுக்கு தந்தையான கணவன்!

Posted By:
Subscribe to Boldsky

விந்தணு தானம் (Semen / Sperm Donation) என்பது உலகிளவில் பெருகி வருகிறது. உலகெங்கிலும் ஆண்மை குறைபாடு மெல்ல, மெல்ல அதிகரித்து வருவதால், இரத்த தானம், தாய் பால் தானம் போல, விந்தணு தானமும் செய்யப்பட்டு வருகிறது. சிலர் தங்கள் விந்தை பணத்திற்கும் விற்கிறார்கள்.

பெண்கள் மத்தியில் எப்படி தாய் பால் சுரக்கவில்லை என்றால் தானம் பெறப்படுகிறதோ, அப்படி தான் ஆரோக்கியமான விந்து இல்லாதிருக்கும் ஆண்கள் விந்து தானம் பெற்று பிள்ளை பெறுகிறார்கள்.

Man Become Father for 60 Kids, Without Knowing His Wife!

இது சில நாடுகளில் சாதாரணமாகவும், சில நாடுகளில் மிகவும் விசித்திரமாகவும் காணப்படுகின்றன. இது சில இடங்களில் குற்ற செயலாகவும் நடந்து வருகிறது. அதை நாம் குற்றம் 23 படத்தின் மூலமாக பார்த்துள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இங்கிலாந்து!

இங்கிலாந்து!

இங்கிலாந்தில் விந்தணு தானம் என்பது மிகவும் சாதாரணம். கடந்த வருடங்களாக இந்த விந்தணு தானம் மூலம் குழந்தை பெறுவோர் எண்ணிக்கை மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது என ஒரு சர்வே மூலம் அறியப்படுகிறது.

60 குழந்தைகளுக்கு அப்பா!

60 குழந்தைகளுக்கு அப்பா!

விந்தணு தானம் செய்ய முன்னதாக ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். ரிஜிஸ்டர் செய்யாமல் விந்தணு தானம் செய்தல், அதன் மூலம் குழந்தை பெறுவது இல்லீகல் ஆகும். இப்படி தான் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு ஆண், தனது மனைவிக்கு தெரியாமல் இல்லீகலாக விந்தணு தானம் செய்து 60 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார்.

இன்னும் 7...

இன்னும் 7...

இதுவரை பிறந்த 60 குழந்தைகள் இல்லாமல், இன்னும் 7 பேர், இந்த ஆணின் விந்து தானம் மூலம் குழந்தை பெறவிருக்கிரார்கள். முறையாக ரிஜிஸ்டர் செய்த விந்தணு தானம் மூலம் குழந்தை பெற சில இலட்சங்கள் சிகிச்சைக்கு செலவாகிறது.

ஆனால், ரிஜிஸ்டர் செய்யாத நபர் மூலமாக விந்து தானம் பெற்று குழந்தை பெற சில ஆயிரங்கள் மட்டுமே செலவாகிறது என அறியப்படுகிறது.. இந்த ஒரு காரணத்தால் இங்கிலாந்தில் பலர் இல்லீகலாக விந்து தானம் செய்து வருகிறார்கள்.

ஃபேஸ்புக் க்ரூப்!

ஃபேஸ்புக் க்ரூப்!

முறையாக விந்தணு தானம் செய்யாத நபர்கள், தங்களுக்கு என தனி ஃபேஸ்புக் க்ரூப் துவங்கி, அதன் மூலமாக விந்து தானம் வேண்டுவோரை தொடர்பு கொண்டு, மறை முகமாக விந்து தானம் செய்து பணம் ஈட்டி வருகிறார்கள்.

இதனால், முறையாக விந்தணு தானம்செய்து குழந்தை பெறுவோரின் எண்ணிக்கை காட்டிலும், முறையில்லாத வகையில் விந்தணு தானம் பெற்று குழந்தை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Man Become Father for 60 Kids, Without Knowing His Wife!

Man Become Father for 60 Kids, Without Knowing His Wife!
Subscribe Newsletter