சாயக்கழிவு நீரை உரமாக பயன்படுத்தலாம் தெரியுமா!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைக்கு இயற்கை மீதான மதிப்பு பலருக்கும் அதிகரித்து வருகிறது. ஆர்கானிக் பொருட்கள் மீது தனி ஈடுபாடே வந்திருக்கிறது. அதன்படி உணப்பொருட்களைத் தாண்டி நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களில் ஆர்கானிக் என்ற சொல் அடிப்பட்டால் உடனடியாக வாங்கிடும் பழக்கம் நம்மிடையே அதிகமிருக்கிறது.

அந்த வகையில் இப்போது சந்தையில் களம்மிறங்கியிருக்கும் பொருள் இயற்கை ஆடை!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இந்தியாவில் சிந்தடிக் :

இந்தியாவில் சிந்தடிக் :

ஆரம்ப காலத்தில் இந்தியர்கள் உடையாக பயன்படுத்தியவற்றால் எந்த தீங்கும் விளையாது. 1856 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் சிந்தடிக் மற்றும் டாக்ஸிக் வேதிப்பொருட்களால் ஆன ஆடைகளை பயன்படுத்த துவங்கினர்.

வேலையை உதறிய இயற்கை ஆர்வலர் :

வேலையை உதறிய இயற்கை ஆர்வலர் :

பாரம்பர்யம் மீது இருந்த ஆர்வத்தினால் பன்னாட்டு நிறுவனத்தில் தான் பார்த்த வேலையை விட்டுவிட்டு முழுமையாக ஆயுர்வேத ஆடை ஆராய்ச்சியில் இறங்கினார் கேரளாவைச் சேர்ந்த சுஜித். இவரும் இயற்கை ஆர்வலரான குமாரும் இணைந்து இயற்கையான முறையில் ஆயுர்வேத ஆடைகளை தயாரித்து வருகின்றனர்.

தயாரிப்பு முறை :

தயாரிப்பு முறை :

இந்த இயற்கை ஆயுர்வேத உடைகள் துளசி,மஞ்சள்,கடுக்காய்,செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய்,வெங்காயத் தாழ், மாதுளை, மாட்டுக் கோமயம், பூந்திக்கொட்டை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. காய்கறிகள், இலை, தழைகள், மரப்பட்டைகள், பழங்களில் இருந்து வண்ணம் எடுக்கிறார்கள்.

கழிவு நீர் உரம்! :

கழிவு நீர் உரம்! :

இவ்வகை ஆடைகள் உடலுக்குக் குளிர்ச்சி தருகின்றன. மனதிற்கும் இதமாக இருக்கும் தவிர, சரும நோய்களுக்கு மருந்தாகவும் இருக்கும்.

முக்கியமாக இந்த ஆடைகளால் எவ்வித சுற்றுச்சூழல் பாதிப்புகளும் இல்லை. தயாரிக்கும்போது வெளியாகும் கழிவுகள் மற்றும் தண்ணீரை விவசாயத்திற்கு உரமாகப் பயன்படுத்துகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

kerala introduces Organic clothes that do not harm to the environment

kerala introduces Organic clothes that do not harm to the environment
Story first published: Wednesday, August 23, 2017, 18:10 [IST]
Subscribe Newsletter