ரஷ்ய அதிபர் புடின் இரத்தத்தில் குளிக்கிறாரா? ஏன்? எதற்காக?

Posted By:
Subscribe to Boldsky

ரஷ்ய அதிபர் புடினை சுற்றி பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. அவருக்கு பல உயிர்கள் இருக்கிறது, மரணமே இல்லை போன்றவை உலகளவில் பரவிய பிரபல புரளிகள், சர்ச்சைகள்.

ஆனால், சமீபத்தில் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் ரஷ்ய அதிபர் புடின் மருத்துவ நலன்களுக்காக அரியவகை மான்களின் ரத்தம் எடுத்து, குளித்து வருகிறார் என ஒரு தகவல் வைரலாக பரவியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மான் ரத்த குளியல்!

மான் ரத்த குளியல்!

அல்தாய் மலைகளில் வாழ்வதாக அறியப்படும் அரியவகை மாரல் மான்களின் கொம்புகளை வெட்டி, அதன் ரத்தம் எடுத்து குளியலுக்கு பயன்படுத்தி வருவதாக ஒரு தகவல் ஓரிரு வாரங்களுக்கு முன் வெளியாகியிருந்தது.

மருத்துவர் அலெக்சாண்டர்!

மருத்துவர் அலெக்சாண்டர்!

டாக்டர் அலெக்சாண்டர் சூய்கோ என்பவரது ஆலோசனையின் பெயரில் தான் புடின் மான் ரத்த குளியல் செயலில் ஈடுபட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இது, உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நலன்கள்!

நலன்கள்!

இப்போது ரஷ்ய அதிபர் புடினுக்கு 64 வயதாகிறது. மான் ரத்த குளியலில் ஈடுபடுவதால் உடலுக்கு பல நலன்கள் ஏற்படுகிறது என கூறப்படுகிறது.

உடல் எலும்பு, தசை, பற்கள் மற்றும் கண் பார்வை சார்ந்த கோளாறுகள் போன்றவை குணமாக இது உதவும் எனவும் கூறுகின்றனர்.

முதுகுதண்டு

முதுகுதண்டு

இது மட்டுமின்றி, ஆஸ்துமா, முதுகுதண்டு, மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளுக்கும் இது சிறந்த தீர்வளிக்கிறது என கூறுகின்றனர்.

பயன்பாடு!

பயன்பாடு!

முதலில் மாரல் வகை மான்களின் கொம்புகளை வெட்டி ரத்தத்தை வடிகட்டுகிறார்கள். முக்கியமாக இவர்கள் தேர்ந்தெடுப்பது சிவப்பு மான்கள்.

வடிகட்டிய ரத்தத்தை கொதிக்க வைத்து, அதை குளிக்கும் நீரில் கலந்து குளிக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது.

காட்டுமிராண்டித் தனம்!

காட்டுமிராண்டித் தனம்!

வனவிலங்கு ஆர்வலர்கள், மிருகங்களை வேட்டையாடிக் கொள்வதே பாவம். மருத்துவ நலன் என்ற கூறி, அவற்றை துன்புறுத்தி, ரத்தம் எடுத்து குளிப்பது என்பது காட்டுமிராண்டி செயல் என கருத்துகள் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is Putin Bathing in Blood?

Is Putin Bathing in Blood?
Subscribe Newsletter