கனவுகள் பற்றிய 7 அசாதாரண உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

கனவில் வரும் சம்பவங்கள், காணும் பொருட்களை வைத்து நாம் எதிர்கொள்ளவிருக்கும் விஷயங்கள் குறித்து அறியலாம், எதிர்காலம் பற்றி அறியலாம் என பல விஷயங்கள் நாம் முன்னர் அறிந்திருப்போம்.

REM எனப்படும் உறக்கத்தின் ஆழ்ந்த நிலையில் தான் கனவுகள் பிறக்கின்றன. ஆனால், கனவுகள் காணும் போது வேறு என்னவெல்லாம் நடக்கின்றன, நம் வாழ்நாளில் கனவுகள் எவ்வளவு பெரிய பங்கு கொண்டிருக்கிறது என நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய 7 உண்மைகள் இவை...

Dream facts

#1 குறட்டை விட்டு கொண்டே கனவு காண முடியாது. அதாவது, குறட்டையும், கனவும் ஒரே நேரத்தில் வராது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

#2 நமது வாழ்வில் கால்வாசி நாட்கள் நாம் தூங்கியே கழிக்கிறோம். அதில் நான்கில் ஒரு பங்கு கனவு காண்கிறோம். 100 வயது வரை வாழ்ந்தால் சராசரியாக 6 மணி நேரம் கனவு கண்டிருப்போம். இதில், பெரும்பாலான உறங்கி எழும் போது மறந்திருப்போம்.

#3 சராசரியாக ஒரு மனிதன் ஆண்டுக்கு 1460 கனவுகள் காண்கிறான்.

#4 ஒவ்வொரு 90 நிமிடத்திற்கு ஒருமுறை அனைவரும் கனவு காண வாய்ப்புகள் உண்டு. அதிகபட்சமாக ஒரு நபரின் கனவு 30 நிமிடங்கள் வரை நீளலாம். பெரும்பாலும் அதிகாலை கனவுகள் தான் அதிக நேரம் வருமாம்.

#5 #Oneirolagy என்பது கனவுகள் சார்ந்த படிப்பு பிரிவாகும். அறிவியல் சார்ந்த படிப்பு பிரிவில் ஒன்றாக இது காணப்படுகிறது. இது கிரேக்க மொழியில் இருந்து உருவாக்கப்பட்ட வார்த்தை ஆகும்.

#6 மேற்கு ஆப்பிரிக்காவில் ஒரு குழுவினர் கனவை மிக சீரியஸான ஒன்றாக பார்க்கிறார்கள். வேறு ஒரு ஆண் மனைவியின் கனவில் ரொமான்டிக் அல்லது பாலியல் சார்ந்த கனவில் வந்தால் அவன் மீது நடவடிக்கை எடுக்க கோருகிறார்கள்.

#7 ராபிட் ஐ மூவ் மெண்ட் (REM) உறக்கத்தின் போதிலான இந்த நிலையில் தான் கனவுகள் வரும். இந்த நிலையில் மூளையில் அதிக இரத்த ஓட்டம் இருக்குமாம். இந்த நேரத்தில் ஆண், பெண்களுக்கு உச்ச உணர்வு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.

Read more about: pulse
English summary

Interesting Facts to Know About Dreams

Dream is a common thing. But you definitely doesn't know about these dreams facts. Check it out.
Story first published: Saturday, August 26, 2017, 14:12 [IST]
Subscribe Newsletter