Latest Updates
-
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும்
சிகிச்சை என்ற பெயரில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அளிக்கப்படும் சித்திரவதைகள்!
தன் பாலின நபரையே ஜோடியாக தேர்ந்தெடுக்கும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சிகிச்சை என்ற பெயரில் சித்திரவதைக்கு ஆளாக்குகின்றனர்.
சிகிச்சை என்ற பெயரில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் சித்திரவதைகளை தனது புகைப்படங்கள் மூலம் வெளியுலகிற்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளார் புகைப்படக் கலைஞர்.
paolaparedes எனும் புகைப்பட சீரீஸ்ல் அந்த சித்திரவதைகள் காட்டப்பட்டுள்ளன...
All Image Courtesy: paolaparedes.com

கழிவறையில் கைகளை முக்குதல்!
வெறும் கைகளால் கழிவறை மொத்தமும் சுத்தம் செய்ய வைத்தல். குளியலறையில் இருக்கும் அழுக்கு மற்றும் கொட்டிய முடிகளை கைகளால் எடுக்க வேண்டும்.

விசித்திர குளியல் தெரபி!
கேதலிக் இசையை மணி நேரங்கள் கேட்க வேண்டும். அதன் பிறகு நான்கிலிருந்து ஏழு நிமிடங்களுக்குள் குளித்து முடித்து விட வேண்டும்.

சிகிச்சை என்ற பெயரில் கற்பழிப்பு!
மேலும், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சிகிச்சை என்ற பெயரில் ஆண் ஊழியர்களால் கற்பழிக்கவும் படுகிறார்கள்.

பெண்மை உணர்வித்தல்!
ஷார்ட் ஸ்கர்ட், ஹைஹீல்ஸ், மேக்கப் என பெண்மையை உணர வைக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.

பேச தடை!
பேசுவதற்கு தடை விதித்தும் பேசினால். அவர்கள் அதிக சப்தம் வாய்ந்த தெய்வீக பாடல்கள் கேட்க வேண்டும். இரண்டு கைகளும் அகல விரித்து அதில் வலு அதிகமான புத்தகங்கள் சுமக்க செய்வார்கள். முட்டியிட்டு தான் அமர வேண்டும்.

உண்ணாவிட்டால் உதை!
இந்த சித்திரவதை தாங்காமல், பிடிக்காமல் யாரேனும் சாப்பிடாமல் இருந்தால், அவர்களை உதைக்கவும் செய்கிறார்கள்.

மேக்கப் பயிற்சி!
ஒவ்வொரு நாளும் காலை எழுந்ததும் கண்ணாடி முன் நின்று அலங்காரம் செய்துக் கொள்ள வேண்டும். அதுவும், ஒரு பெண் போல முழுமையாக.

க்ளோரின், கழிவறை நீர்!
நீருடன், க்ளோரின், கழிவறை நீர் போன்றவை கலந்து கசப்பான காபி என குடிக்க அளிக்கின்றனர்.

உறக்கமற்ற இரவுகள்!
தாங்கள் இப்படி இருப்பதால் மதிப்பற்றவர்கள் என அவர்கள் உணர, பெற்றோருக்கு பாரமாக இருப்பதை உணர உறங்காமல் இரவுகளை கழிக்க வேண்டும். இது சித்திரவதைகளுக்கு எல்லாம் மேல் உச்சகட்டமாக இருக்கிறது.

டிவி கேபிள் ஒயர் அடி!
ஒவ்வொரு நிமிடமும் யாரேனும் ஒருவருக்கு டிவி கேபிள் ஒயர் மூலம் அடிக்கும் தண்டனை அளிக்கப்படுகிறது.

சுத்தம் செய்தல்!
பல மணிநேரங்கள் தரைகளை சுத்தம் செய்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்த தரை சுத்தமாக இருந்தாலும் துடைத்துக் கொண்டே தான் இருக்க வேண்டும்.

குளியலறையில் கட்டிப் போடுதல்!
அவர்கள் இதில் இருந்து வெளிவரும் வரை, பல இரவுகளை குளியலறையில் ஒரு கையிற்றால் கட்டிவைத்து தனிமையில் இருக்க வைக்கிறார்கள்.

தீய உணவுகள் அளித்தல்!
தரமற்ற உணவுகளை கொடுத்து சாப்பிட வைக்கிறார்கள். அருகே அமர்ந்திருக்கும் நபரிடம் பேச கூடாது.

உடற்பயிற்சி!
ஆண் ஊழியர் கூறும் வரை கடுமையான உடற்பயிற்சிகள் செய்துக் கொண்டே இருக்க வேண்டும். எவ்வளவு வலி எடுத்தாலும்.

இது ஒரு மருத்துவமனையில் அல்ல...
இது உலகில் எங்கோ ஒரு இடத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மருத்துவமனை என நினைத்துவிட வேண்டாம். எக்குவடோர-ல் மட்டுமே இது போல 200 க்கும் மேற்பட்ட மையங்கள் இருக்கின்றனவாம். லெஸ்பியன், கே, மாற்று பாலினத்தை சேர்ந்தவர்களை இங்கே அனுமதிக்கின்றனர்.



Click it and Unblock the Notifications
