Latest Updates
-
இறந்தவர்களின் மூக்கு மற்றும் காதில் ஏன் பஞ்சு வைக்கப்படுகிறது? கருட புராணம் சொல்லும் ரகசியம் என்ன தெரியுமா? -
மக்கள் நீண்ட ஆயுளோடு வாழும் டாப் 10 நாடுகள் - இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
மகாளய அமாவாசைக்கு கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவலை எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பாருங்க.. -
செட்டிநாடு சைவ மீன் குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - ஒரிஜினல் மீன் குழம்பே தோத்துரும் -
World Sight Day 2026: சுகர் இருக்கா? அப்ப கண் பிரச்சனையை அசால்ட்டா விடாதீங்க.. எச்சரிக்கும் கண் டாக்டர்! -
துலாம் ராசியில் வக்ரமாகும் புதன்: அக்டோபர் இறுதியில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
முதல் உலகப்போரின் ஹீரோவாக விளங்கிய நாய் - அந்த நாய் அப்படி என்ன செய்தது தெரியுமா? -
2 உருளைக்கிழங்கும், 2 கப் கோதுமை மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
அக்டோபர் 08 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது!
"ஹாட்ரிக்" என்ற வார்த்தை எப்படி உருவானது என்று உங்களுக்கு தெரியுமா?
"ஹாட்ரிக்" என்ற வார்த்தை எப்படி உருவானது என்று உங்களுக்கு தெரியுமா?
நேற்று கொல்கத்தா, ஈடன் கார்டனில் இந்தியா - ஆஸி., அணிகளுக்கு இடையே நடந்த சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய அணி சிறப்பான முறையில் வெற்றிப்பெற்றது.
இந்த வெற்றிக்கு விராத்தின் 92 ரன்கள், புவனேஷ் குமார் எடுத்த டாப் ஆர்டர் விக்கெட்கள் மற்றும் குல்தீப் யாதவின் ஹாட்ரிக் போன்றவை முக்கிய காரணம்.

கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து மூன்று முறை சிக்ஸ், ஃபோர், விக்கெட் எடுத்தாலும், புட்பால், ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் தொடர்ந்து மூன்று முறை கோல் அடித்தாலும் ஹாட்ரிக் என அதை பெருமைப்படுத்தி கூறுவர். எளிதாக யாராலும் நிகழ்த்த முடியாத இது ஒரு சாதனையாகவே காணப்படுகிறது.
சரி, இதை ஏன் ஹாட்ரிக் என கூறுகிறோம். தொடர்ந்து மூன்று முறை ஒரு செயலை செய்து முடிப்பதற்கும் Hat- Trick என்ற வார்த்தைக்கும் எப்படி பொருள் காணப்படுகிறது என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா?

எச்.எச். ஸ்டீபன்சன்!
உலகில் முதல் முறை இந்த ஹாட்ரிக் என்ற வார்த்தை உருவாக காரணமாக இருந்தவர் இங்கிலாந்தை சேர்ந்த எச்.எச். ஸ்டீபன்சன் எனும் கிரிக்கெட் விளையாட்டு வீரர். 1858ல் தான் முதல் முறை இந்த ஹாட்ரிக் நிகழ்வு நடந்தது.

ஹாட்ரிக் விக்கெட்!
ஷெபீல்ட்-ல் இருக்கும் ஹைட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் ஆல் இங்கிலாந்து அணிக்கும், சவுத் யார்க்ஷீர் அணிக்கும் இடையே போட்டி நடந்தது. அப்போது எச்.எச். ஸ்டீபன்சன் தொடர்ந்து மூன்று முறை விக்கெட் வீழ்த்தினார்.

வரலாற்றில் முதல் முறை!
கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை இப்படி ஒரு சாதனை நிகழ்வை நிகழ்த்திய எச்.எச்.ஸ்டீபன்சனை பாராட்டி, அன்று அந்த போட்டியை காண வந்தவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகையை (வருமானம்) திரட்டி, தொப்பி (Hat) ஒன்றை பரிசாக அளித்தனர். இதுவே, ஹாட்ரிக் என்ற வார்த்தை உருவாக காரணமாகி போனது.
Image Courtesy:store.ecb.co.uk

பின்னாட்களில்!
பின்னாட்களில் பிற போட்டிகளிலும் தொடர்ந்து மூன்று முறை கோல் அல்லது ஸ்கோர் செய்யும் போது இந்த ஹாட்ரிக் என்ற வார்த்தையை பின்பற்ற துவங்கினர். இப்படி தான் ஹாட்ரிக் என்ற வார்த்தை பிறந்தது.

மலிங்கா!
இலங்கை பந்துவீச்சாளர் மலிங்கா மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்து தனி சாதனை புரிந்துள்ளார். மேலும், தொடர்ந்து நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகள் எடுத்த ஒரே பந்து வீச்சாளர் என்ற பெருமையும், சாதனையும் இவரையே சேரும்.

வாசிம் அக்ரம்!
1999ல் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் வெறும் 9 நாட்கள் இடைவேளையில் (6 March 1999 மற்றும் 14 March 1999) இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை புரிந்துள்ளார் உலகின் தலைசிறந்த வேக பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம்.



Click it and Unblock the Notifications
