இலையுதிர் காலத்தில் உலகம் - அற்புதமான புகைப்படத் தொகுப்பு!

Subscribe to Boldsky

காயங்களும் அழகானவை என்பதன் வெளிபாடு தான் இலையுதிர் காலமா அல்லது தோல்விக்கு பின் ஓர் எழுச்சி காத்திருக்கிறது, மனம் தளர்ந்து விடாதே என்பதை மனிதருக்கு உணர்த்த தான் இந்த இலையுதிர் காலமா. காலங்களில் இலையுதிர் காலம் ஒரு கவிதை. காய்ந்து, உதிர்ந்த அந்த இலைகளில் இருக்கும் கவிதை புகைப்படக் கலைஞர்களுக்கு தான் தெரியும்.

அதனால் தானே என்னவோ, மாஸ்கோவை சேர்ந்த கிறிஸ்டினா மகீவா எனும் புகைப்பட கலைஞர் உலகெங்கிலும் இருக்கும் பல்வேறு இடங்களுக்கு சென்று தனது மூன்றாம் கண்ணான கேமராவை பயன்படுத்தி, இலையுதிர் காலத்தின் அழகை அலேக்காக கேப்ட்சர் செய்து வந்துள்ளார்.

பச்சை இலைகள் இரம்மியமானது தான். ஆனால், இந்த இலையுதிர் காலம் ஒரு விதமான வித்தியாச உணர்வை அளிக்க கூடியது. அடிப்பட்ட பழம் தான் இனிக்கும் என்பது போல, உளியின் அடிவாங்கிய கல் தான் சிலையாகும் என்பது போல, இலைகள் உதிர்ந்த இந்த இலையுதிர் காலமும் தரம் உயர்ந்தது தான்...

All Image Credits: Kristina Makeeva

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மரணம்!

மரணம்!

Photo Place: லண்டன்

AF (Autumn Fact) #01: இலையுதிர் காலத்தை (Autumn) மரணத்தின் பரப்பபான மரணம் என்றும் கவியரசர்கள் புகழ்ந்து எழுதுகிறார்கள்.

கருவளம்!

கருவளம்!

Photo Place: சுவிட்சர்லாந்து

AF #02: இலையுதிர் காலத்தில் ஆண், பெண் இருவர் மத்தியிலும் டெஸ்டோஸ்டிரோன் சுரப்பி அளவு அதிகரிக்கிறது என அறிவியல் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒருவேளை இலையுதிர் காலத்தில் பகல் நேரம் குறைவாக இருப்பதால் இப்படி நடக்கிறதோ?

முக்கியமான காலம்!

முக்கியமான காலம்!

Photo Place: மாஸ்கோ

AF #03: பண்டையக் காலம் முதலே இலையுதிர் காலம் மிகவும் முக்கியமான காலமாக கருதப்பட்டுள்ளது. குளிர், இருட்டு அதிகமாக இறக்கும் இலையுதிர் காலத்தில் தான் வருடத்தின் முக்கியமான நாட்களாக கருதியுள்ளனர். இந்த காலத்தில் கடவுளை தொழும் நிகழ்வுகள் பல சமூகத்தில் அதிகமாக காணப்படுகிறது.

பூசணிக்காய்!

பூசணிக்காய்!

Photo Place: மாஸ்கோ

AF #04: இலையுதிர் காலத்தில் அதிகமாக அறுவடை செய்யப்படும் உணவாக திகழ்ந்து வருகிறது பூசணிக்காய்.

ஆண்மை!

ஆண்மை!

Photo Place: லண்டன்

AF #05: இலையுதிர் காலத்தில் அதிகமான விளைச்சல் காணும் பூசணி, செக்சுவல் ஆரோக்கியத்திற்கு அதிகமாக உதவுகிறது. ஆய்வுகளின் படி பார்த்தல். ஒரு துண்டு பூசணிக்காய் உட்கொள்வதால் 20% வரை ஆணுறுப்பிற்கு இரத்த ஓட்டும் அதிகமாக செல்கிறது என கூற[ப்படுகிறது.

ரொமான்ஸ்!

ரொமான்ஸ்!

Photo Place: Caucasus

AF #06: ஆராய்ச்சியாளர்கள்., பிற காலங்களுடன் ஒப்பிடுகையில் இலையுதிர் காலத்தில் ஆண்கள் தங்கள் துணையுடன் மிகவும் ரொமான்டிக்காக பழகுகிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

ஈர்ப்பு!

ஈர்ப்பு!

Photo Place: லண்டன்

AF #07: இதர காலங்களுடன் ஒப்பிடுகையில், பெண்கள் இலையுதிர் காலத்தில் தான் அதிக ஈர்ப்புடனும், கவர்ச்சியாகவும் இருப்பதாக ஆண்கள் கருதுகிறார்கள். இதற்கு கான்ட்ராஸ்ட் எப்பெக்ட் என்ற தியரியும் இருக்கிறது. குளிர் காலத்தில் பெண்கள் எப்போதும் அதிக கவர்ச்சியுடன் இருப்பார்களாம்.

பறவைகள்!

பறவைகள்!

Photo Place: மாஸ்கோ

AF #08: பெரும்பாலான பறவைகள் குளிர் காலத்திற்கான தங்களது இடம் பெயரும் பயணத்தை இலையுதிர் காலத்திலேயே துவங்கிவிடுகின்றன. ஏறத்தாழ 11,000 மைல் தூரம் கடந்தும் சில பறவைகள் இடம் பெயர்கின்றன.

அமெரிக்கா - பிரிட்டிஷ்!

அமெரிக்கா - பிரிட்டிஷ்!

Photo Place: மாஸ்கோ

AF #09: அமெரிக்காவில் இலையுதிர் காலத்தை Fall எனவும், பிரிட்டிஷ்ல் இலையுதிர் காலத்தை Autumn என்றும் அழைக்கிறார்கள். வார்த்தை அளவில் வேறுப்பட்டு காணப்பட்டாலும். இந்த காலத்தை தான் இவர்கள் அறுவடை காலமாக வைத்துள்ளனர்.

இலையுதிர் காலம்?

இலையுதிர் காலம்?

Photo Place: லண்டன்

AF #10: பூமத்தியரேகையல் நிலநடுக்கோடு மற்றும் மத்திய பகுதியில் வாழும் மக்களுக்கு இலையுதிர் காலமே இல்லை. இந்த பகுதியில் இலையுதிர் காலம் தோன்றுவதில்லை என்பதால் இவர்கள் இப்படி ஒன்றை அனுபவித்திருக்க வாய்ப்பில்லை.

கூந்தல்!

கூந்தல்!

Photo Place: லண்டன்

AF #11: ஸ்வீடிஷ் ஆய்வு ஒன்றில், இலையுதிர் காலத்தில் தான் பெண்களுக்கு அதிகமாக கூந்தல் உதிர்கிறது என கண்டறியப்பட்டுள்ளது. இது காலநிலை மாற்றத்தால் உடல் செல்களில் உண்டாகும் தாக்கத்தின் காரணமாக ஏற்படுகிறது என கூறுகிறார்கள்.

விந்தணு!

விந்தணு!

Photo Place: லண்டன்

AF #12: ஆண்களுக்கு வெயில் காலத்தில் விந்தணு எண்ணிக்கை, வலிமை குறையும் என்றும். அதுவே இலையுதிர் காலம் மற்றும் குளிர் காலத்தில் அதிகரிக்கிறது என்றும் கூறப்படுகிறது.

ஃபேஸ்புக்குலயுமா?

ஃபேஸ்புக்குலயுமா?

Photo Place: லண்டன்

AF #13: ஃபேஸ்புக் வைத்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில். நிஜத்தில் மட்டுமல்ல, ஃபேஸ்புக்கிலும் இலையுதிர் காலத்தில் ரொமான்ஸ் அதிகமாக இருப்பதை உணர முடிகிறது. இதர காலங்களை காட்டிலும். இலையுதிர் காலத்தின் போது நிறைய ஃபேஸ்புக் பயனாளிகள் சிங்கிள் ஸ்டேட்ஸ்ல் இருந்து இன்- ரிலேஷன்ஷிப் ஸ்டேட்ஸ்-க்கு மாறுகிறார்களாம்.

விலங்குகளும்...

விலங்குகளும்...

Photo Place: லண்டன்

AF #14: மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகள் மத்தியிலும் இந்த இலையுதிர் காலத்தின் போது ரொமான்ஸ் அதிகரிக்கிறது. விலங்குகளின் பாலுறுப்பு சுரப்பியின்மை மீண்டும் இலையுதிர் காலத்தில் மறு கிளர்ச்சி அடைகிறது என அறியப்பட்டுள்ளது. இதனால் இலையுதிர் காலத்தில் தான் அதிக விலங்குகள் இனபெருக்க செயலில் ஈடுபடுகின்றனவாம்.

உடல் எடை!

உடல் எடை!

Photo Place: லண்டன்

AF #15: இலையுதிர் காலத்தில் பகல் நேரம் குறைவாக இருப்பதால், சூரியன் மூலம் கிடைக்கும் வைட்டமின் டி குறைபாடு இந்த காலத்தில் ஏற்படுவதாலும், உடல் எடை கொஞ்சம் அதிகரிக்க காரணமாக இருக்கிறதாம். வைட்டமின் டி குறைவதால், உடலில் கொழுப்பில் இருந்து சக்தியாக மாறும் செயற்திறன் பாதிக்கப்பட்டு உடலில் அதிக கொழுப்பு தேங்க காரணமாகிறதாம்.

நூறு வயது!

நூறு வயது!

Photo Place: லண்டன்

AF #16: இலையுதிர் காலத்தில் பிறக்கும் குழந்தைகள், மற்ற மாதங்கள் அல்லது காலங்களில் பிறக்கும் குழந்தைகளை காட்டிலும் அதிக வயது வாழ்வதாக கூறப்படுகிறது.

விளையாட்டு!

விளையாட்டு!

Photo Place: மாஸ்கோ

AF #17: விளையாட்டு வீரர்கள் பலர் இலையுதிர் காலம் அல்லது குளிர் காலத்தில் பிறந்தவர்களாக தான் இருக்கிறார்கள் என ஒரு சர்வே மூலம் கண்டறிந்துள்ளனர்.

குட் லக்!

குட் லக்!

Photo Place: மாஸ்கோ

AF #18: உலகின் சில பகுதிகளில் இலையுதிர் காலத்தில், மரத்தில் இருந்து விழும் இலையை கீழே விழாமல் பிடித்துவிட்டால் அடுத்த வருடத்தில் வரும் இலையுதிர் கால மாதம் லக்காக அமையும் என கருதுகிறார்கள். இதை ஒரு மூட நம்பிக்கையாக பின்பற்றுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    How Autumn Looks Around The World?

    How Autumn Looks Around The World?
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more