For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  உலகையே உலுக்கிய சிறுமியின் ஒற்றை புகைப்படம்!

  |

  எப்போ தண்ணிய பாட்டில்ல தண்ணிய அடச்சு விக்க ஆரம்பிச்சாங்களோ அப்போயிருந்த தண்ணீ பஞ்சம் ஆரம்பிச்சிடுச்சுங்க என்று அறம் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும்.

  அந்த வார்த்தைகளின் வீரியும் அப்போது உங்களுக்கு புரிந்ததா என்று தெரியவில்லை இந்தக் கட்டுரையில் உங்களுக்கு புரியும் என்று நம்புகிறோம்.

  உயிரினங்கள் வாழ்வதற்கு அத்தியவசிய தேவையாக இருப்பது தண்ணீர் தான். அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் குழாயில் தண்ணீர் மெதுவாக வந்தாலே டென்ஷனாகும் நமக்கு குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் பலரும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று ஏனோ புரிவதில்லை.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  தண்ணீர் பஞ்சம் :

  தண்ணீர் பஞ்சம் :

  இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் தண்ணீர் பஞ்சத்தின் வீரியம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

  காசு கொடுத்தா தண்ணி வந்துரும்.... பாட்டில் வாங்கிக்கலாம் என்று நீங்கள் அசட்டையாக இருப்பது எல்லாம் இன்னும் சில காலங்களுக்கு மட்டுமே...

  தமிழகத்தில்.... :

  தமிழகத்தில்.... :

  அந்த தண்ணீரும் இல்லையென்றால் ஒரு மடக்கு தண்ணீரை குடிக்க பிரயத்தனப்பட வேண்டும் அதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை வந்தால்....

  இது ஒன்றும் கற்பனைக்கதையல்ல... இதோ அர்ஜெண்டீனாவில் ஆரம்பித்துவிட்டது. இதே சூழல் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

   அர்ஜெண்டீனா :

  அர்ஜெண்டீனா :

  தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் மிகக் கடுமையான வெப்பம் நிலவுகிறது. மிகச் சாதாரணமாக, பகல் நேரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தொட்டுவிடுகிறது வெயில். வறட்சியும் பஞ்சமும் மக்களைப் பெரிய அளவில் பாதித்துள்ளன.

  Image Courtesy

   பழங்குடி இன மக்கள் :

  பழங்குடி இன மக்கள் :

  அர்ஜெண்டீனாவின் பூர்வகுடிகளான பியா குவாரனி (Mbya Guarani) எனும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் இங்கே நிறைய பேர் வசிக்கிறார்கள். வறுமையின் காரணமாக இங்கே குழந்தைகள் பிச்சையெடுப்பது சர்வ சாதரணமாக பார்க்க முடியும்.

  Image Courtesy

  பத்திரிக்கையாளர் :

  பத்திரிக்கையாளர் :

  இந்நிலையில் அர்ஜென்டினாவின் பொஸாடஸ் எனும் பகுதியில் பத்திரிக்கையாளர் ஒருவர் எடுத்த புகைப்படம் தான் உலகையே உலுக்கியிருக்கிறது.

  உள்நாட்டு பத்திரிக்கையில் பணியாற்றும் அந்த நபர் சிக்னலில் நின்று கொண்டிருக்கும் போது எடுத்தப்புகைப்படம் உலகையே உலுக்கபபோகிறது என்பதை அவரால் கற்பனை கூட செய்து பார்த்திருக்க முடியாது.

  Image Courtesy

   புகைப்படம் :

  புகைப்படம் :

  ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருத்தி, கடும் வறட்சி காரணமாக குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்.

  இந்நிலையில் சாலையின் நடுவே தேங்கியிருந்த நீரை குடிக்கும் வகையில் மண்டியிட்டு குனிந்து கீழே தரையில் தேங்கியிருக்கும் அந்த நீரைக் குடிக்கிறார்.

  Image Courtesy

  பற்றி எரியும் போது.... :

  பற்றி எரியும் போது.... :

  சில துளி நீருக்காக ஒரு குழந்தை செய்யும் போராட்டத்தை பிரதிபலிக்கும் அந்த புகைப்படத்தை தான் அந்த பத்திரிக்கையாளர் பதிவு செய்திருக்கிறார். ஆன்லைனில் வைரலாகப் பரவிவருகிறது.

  இதனை யுனிசெஃப் ஊழியர் ஒருவர் மொத்த நாடும் பற்றி எரியும் நேரத்தில், தனக்கான நீரை நிலத்தில் தேடுகிறாள் இந்தச் சிறுமி என்ற அடைமொழியுடன் பேஸ்புக் பக்கத்தில் பகிர சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

  Image Courtesy

  நாளை நமக்கு :

  நாளை நமக்கு :

  பார்ப்பவர்களை அதிர்ச்சியூட்டும் அதே சமயம் இது போன்ற சம்பவம் நாளை நம் கண்ணெதிரே ஏன் நமக்கே கூட ஏற்படலாம் என்ற காலம் வெகு தொலைவில் இல்லை என்று பெரும் வருத்தத்தை உண்டாக்கியிருக்கிறது இந்த புகைப்படம் என்று சமூக வலைதளங்களில் பலரும் கனத்த மனதுடன் பகிர்ந்து வருகிறார்கள்.

  தாகத்திற்கான மருந்து :

  தாகத்திற்கான மருந்து :

  நிலைமை கைமீறிச் செல்வதற்கு முன்னதாக இதிலிருந்து தப்பிப்பதற்கான.... தற்காத்து கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுக்கவேண்டியது மிகவும் அவசியம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

  கட்டுரையின் துவக்கத்தில் சொன்ன அதே அறம் திரைப்படத்தில் இந்த வசனமும்.

  தாகமெடுத்து சாகுறது தடுக்குறதுக்கு இந்த உலகத்துல என்னம்மா மருந்திருக்கு?

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  HeartBreaking Image Of a Little Girl

  HeartBreaking Image Of a Little Girl
  Story first published: Thursday, December 21, 2017, 10:30 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more