Latest Updates
-
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 5 வழிகளில் யார் வேண்டுமானலும் ஒரே நாளில் கோடீஸ்வரனாக முடியும்!
இந்த ஐந்து வழிகளில் தான் நீங்கள் ஒரே நாளில் கோடீஸ்வரனாக முடியும்
நோகாம நோம்பு கும்பிட விருப்படும் நபரா? உட்கார்ந்த இடத்திலேயே லட்சாதிபதி ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? ஆகலாம்! தாரளமாக உட்கார்ந்த இடத்திலேயே யார் வேண்டுமானாலும் இந்த ஐந்து வழிகளில் கோடீஸ்வரர் ஆகலாம்.

ஆனால், உங்கள் பக்கம் கொஞ்சம் லக் இருக்க வேண்டும். கையில் கொஞ்சமாவது பணம் இருக்க வேண்டும். இவை இரண்டும் உங்கள் பக்கம் இருந்தால் நீங்களும் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகலாம்!
நான் உழைத்து தான் சம்பாதிப்பேன்... நான் ஒரு பெரும் உழைப்பாளி என்பவர்கள்.. நேரத்தை பொன் போன்று எனனுபவராக நீங்கள் இருந்தால்... சாரி சார்... இந்த கட்டுரை உங்களுக்கானது அல்ல... நீங்கள் உங்கள் வேலையை தொடரலாம்...

#1
லாட்டரி! தமிழகத்தில் தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் இன்றளவும் அண்டை மாநிலங்களில் படுஜோராக விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது லாட்டரி சீட்டு வியாபாரம். ஒருவேளை உங்கள் பக்கம் அஷ்ட லட்சுமிகளும் உட்கார்ந்திருந்தால் நீங்களும் இதன் மூலம் கோடீஸ்வரர் ஆகலாம்.

#2
"கோன்பனேகா குரோர்பதி" உங்கள் மூளையில் ஜி.கே கொஞ்சம் எக்செஸாக இருந்தால். நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி! மீண்டும் அந்த தொலைக்காட்சி நிறுவனம் அந்த நிகழ்ச்சியை துவங்கினால், நீங்கள் அதில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்றால் ஐ.டி அது இது என பிடித்தது போக உங்கள் கைகளில் லட்சங்கள் ஒரே நாளில் புரளும்!

#3
இந்த வாய்ப்பு பெரும்பாலும் பெண்களுக்கும், கோடியில் ஒரு ஆணுக்கும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. வெரி சிம்பிள்! கோடீஸ்வர மணமகன் / மணமகளை திருமணம் செய்து கொண்டால் அடுத்த நொடியே நீங்களும் கோடீஸ்வரர் தான்!

#4
சூது! போக்கர் எனப்படும் சூது விளையாட்டில் நீங்கள் கில்லியாக இருந்தால். உங்கள் பக்கம் லக் பாய் போட்டு படுத்திருந்தால் யார் வேண்டுமானாலும் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகலாம்.
அதற்கு ஒரு சிறந்த எடுத்துககட்டாக திகழும் நபர் டேன் பில்செரியன் (Dan Bilzerian) இவர் ஒரு முழுநேர சூதாட்ட வல்லுநர் என்றே கூறலாம்.
இதன் மூலம் பெரும் கோடீஸ்வரர் ஆகி இப்போது பூலோகத்தில் ஒரு சொர்க்கலோக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

#5
பரம்பரை சொத்து! இதற்கு நீங்கள் கஷ்டப்பட வேண்டும் என்றில்லை. உங்கள் முன்னோர்கள், மூதாதையர்கள் கஷ்டப்பட்டிருந்தால் போதும். இது அவரவர் தலைவிது பொருத்தது.
ஒருவேளை அந்த நபரின் மூதாதையரும் நோகாமல் நோம்பு கும்பிட நினைத்திருந்தால்... இந்த ஒரு நாள் கோடீஸ்வரர் வாய்ப்பு கிட்ட வாய்ப்பே இல்லை!



Click it and Unblock the Notifications
