இனி நீங்களும் ஆகலாம் ரியல் அயன் மேன் - அசத்தல் இளைஞரின் வியப்பூட்டும் கண்டுபிடிப்பு!

Posted By:
Subscribe to Boldsky

மார்வல் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ அயன் மேன். இது ஹாலிவுட் திரைப்படமாக முதல் பாகம் கடந்த 2008-ல் வெளியானது. எதிர்பாராத அளவில் பெரும் வெற்றிபெற்ற இந்த திரைப்படம் பெரும் ரசிகர் பட்டாளத்தை தன் பக்கம் ஈர்ததிழுத்தது.

இப்படி ஒரு டெக்னாலஜி யார் கண்டுபிடிப்பார், யாரால் அயன் மேன் ஆகமுடியும் போன்ற கேள்விகளுக்கு விடையளித்து, அயன் மேன் ஹீரோவையே ஆசைக் கொள்ளும் அளவிற்கு ஒரு அயன் மேன் சூட் தயாரித்துள்ளார் ஒரு பிரிட்டிஷ் கண்டுபிடிப்பாளர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தி ரியல் அயன்மேன்!

தி ரியல் அயன்மேன்!

ஏறத்தாழ ஒருவருடம் இதற்காக உழைத்து இந்த ரியல் அயன்மேன் கருவியை உருவாக்கியுள்ளார் ரிச்சர்ட் ப்ரௌனி எனும் இந்த கண்டுபிடிப்பாளர்.

இந்த கருவியில் சிறிய அளவிலான ஜெட் என்ஜின்களும், வை-பை கணக்ஷன் மற்றும் பயனாளி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல உதவும் வகையில் டிஸ்ப்ளே போன்றவை இடம் பெற்றுள்ளன.

Image Courtesy

பாராட்டுதலுக்குரியது!

ரிச்சர்ட்-ன் இந்த கண்டுபிடிப்பு உண்மையிலேயே பாராட்டுதலுக்குரியது. இந்த கருவி காற்றில் மணிக்கு 161 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரிச்சர்ட் கூறுகையில்...

ரிச்சர்ட் கூறுகையில்...

இது குறித்து ரியல் அயன்மேன் கருவியை கண்டுபிடித்துள்ள ரிச்சர்ட் கூறுகையில்," இந்த அயன் மேன் சூட்டை மிகவும் பாதுகாப்பானதாக தான் உருவாக்கியுள்ளேன்.

இதற்கான உலகத்தர ஏவியேஷன் காப்பீடு அளிப்பவர்களிடம் இந்த கருவிக்கான காப்பீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக ரிச்சர்ட் கூறியுள்ளார்.

Image Courtesy

டயடலஸ்!

டயடலஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த கருவியின் சோதனை தயாரிப்பு வேலைகள் வரும் வாரத்தில் இருந்து துவங்கும் என கூறப்படுகிறது. வரும் ஆறு மாதங்களில் இந்த கருவி குறித்து ஆழமான ஆய்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ரிச்சர்ட் கூறியுள்ளார். மேலும், இந்த கருவியில் பல கூடுதல் விஷயங்கள் சேர்க்க ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

விற்பனை விலை!

விற்பனை விலை!

ஏறத்தாழ $20,000 முதல் $2,50,000 அமெரிக்க டாலர்கள் வரை இந்த அயன்மேன் கருவியின் விலை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த கருவியை வாங்குபவர்களுக்கு பறக்கும் நேர்த்தி குறித்து கற்பிக்கப்படும் என்றும், அந்த செலவும் இத்துடன் இணையும் என கூறுகின்றனர்.

Image Courtesy

ரெடியா?!

ரெடியா?!

அயன்மேன் ரசிகர்கள் இப்போதே பெரும் குஷியில் இருக்கிறார்கள். இது சந்தைக்கு வந்தால் நிஜமாகவே தலைகால் புரியாமல் பறக்க தான் போகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Even Robert Downey Jr. Will Love to Wear His Iron Man Suit!

Even Robert Downey Jr. Will Love to Wear His Iron Man Suit!
Story first published: Monday, April 10, 2017, 15:20 [IST]
Subscribe Newsletter