கர்ப்பிணிப்பெண்ணுக்கு போலீஸ் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

Posted By:
Subscribe to Boldsky

நம்முடைய நினைவுகளை சிறைபடுத்தி வைக்கும் ஆற்றல் புகைப்படங்களுக்கு உண்டு. வாழ்க்கையில் நடக்கும் இனிமையான தருணங்களை, மறக்க விரும்பாத தருணங்களை எல்லாம் புகைப்படமாக எடுத்து வைத்துக் கொள்வோம்.

இன்றைக்கு போட்டோ ஷூட் எடுப்பது என்பது மிகவும் சகஜமாகிவிட்டது. அப்படி சமீபத்தில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் ஒன்று வைரலாய் பரவியதோடு பலரையும் உணர்சிவசப்பட்டு கண்ணீர் சிந்த வைத்திருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கருவில் குழந்தை :

கருவில் குழந்தை :

அமெரிக்காவின் க்ரீன்வைலைச் சார்ந்த போலீஸ் ஆஃபிசர் ஆலன் ஜேக்கப் மனைவியுடன் காலையில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்கச் சென்றிருக்கிறார்.

கருவில் வளரும் தன்னுடைய குழந்தையை பார்த்த பரவசத்துடன் வேலைக்குச் செல்ல மனைவி மட்டும் வீட்டிற்கு திரும்பியிருக்கிறார்.

காத்திருந்த சேதி :

காத்திருந்த சேதி :

சிறிது நேரத்தில் ஆலனின் மனைவி மெஹனுக்கு ஒரு போன் கால் வருகிறது. அதில், உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு சொல்லப்படுகிறது.

இவரும் பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓட அங்கே கணவர் இறந்துவிட்டார் என்ற தகவல் மட்டுமே இவருக்காக காத்திருக்கிறது.

போட்டோ ஷூட் :

போட்டோ ஷூட் :

சில மாதங்கள் கழித்து நிறைமாத கர்பிணியாக இருந்த மெஹன் தன்னுடைய கணவருக்கு, பணியின் போதே உயிர் நீத்த வீரரை கௌரவப்படுத்தும் விதமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.

மெஹனுடைய தோழி ஜெஸ்ஸீ அலெக்ஸ் என்பவர் மெட்டர்னட்டி போட்டோ ஷூட் எடுக்க விரும்புகிறார். சுமார் ஆறு மணி நேரங்கள் 600 படங்கள் எடுத்த அந்த போட்டோஷூட் தான் நம் மனதை கனக்கச் செய்திருக்கிறது.

மெஹனுடன் போலீஸ் :

மெஹனுடன் போலீஸ் :

அந்த போட்டோஷூட்டிற்கு மெஹனின் கணவர் ஆலனுடன் பணியாற்றிய அனைத்து போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். அந்த போலீஸ் அதிகாரிகள், அவர்களுக்கு துணைபுரிந்த போலீஸ் நாய் எல்லாரும் போஸ் கொடுத்திருந்தனர்.

ஆலன் பயன்படுத்திய பேட்ரோல் கார்,பேட்ஜ்,யூனிஃபார்ம் உட்பட எல்லாமே போட்டோஷூட்டில் வைக்கப்பட்டிருந்தது.

நினைவுகள் :

நினைவுகள் :

மெஹரின் குழந்தைகளுக்கு தந்தையின் நினைவை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக வந்திருந்த அதிகாரிகளை ஆலென் குறித்த நினைவுகளை கடிதம் எழுதித்தருமாறு கேட்டிருக்கிறார்.

அவர்களும் ஆலனுடனான அவர்களது நினைவுகளை பகிர்ந்திருக்கிறார்கள்.

Image Source -j.ellex.photography

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, pulse
English summary

Emotional Maternity photo shoot which goes viral

Emotional Maternity photo shoot which goes viral
Story first published: Thursday, September 14, 2017, 17:37 [IST]
Subscribe Newsletter