கரடி பொம்மைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட அதிசய மருத்துவமனை!

Posted By:
Subscribe to Boldsky

எப்போதுமே விளையாட்டு, பொம்மை என தனி உலகத்தில் இருக்கும் குழந்தைகளின் மனநிலையை கச்சிதமாக புரிந்து கொண்டவர்கள் இப்போது வித்யாச முயற்சியை செயல்படுத்தியிருக்கிறார்கள்.

மருத்துவமனை என்றாலே குழந்தைகள் பலர் பயந்து அழுவர். தங்களுடைய உடல் நலத்திற்கு தான் என்றாலும், தினமும் தருகின்ற கசப்பு மருந்து வலி தரும் ஊசி போன்றவற்றை நினைத்து பயந்து அழும் குழந்தைகளுக்காகவும் , மருத்துவமனை குறித்த பயத்தை போக்குவதற்காக துபாயில் டெடிபியர் மருத்துவமனை திறக்கப்பட்டிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தைகள் உலகம் :

குழந்தைகள் உலகம் :

பொதுவாக குழந்தைகளுக்கு பொம்மை என்றால் மிகவும் பிடிக்கும். குழந்தைகளின் உலகில் பொம்மை முக்கிய அங்கம் என்று கூட சொல்லலாம். காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கும் வரை பொம்மையை தன்னோடே வைத்திருப்பது அதற்கு குளிப்பாட்டுவது, ஊட்டுவது என தன்னுடைய உடன்பிறப்பை போல மிகவும் ப்ரியத்துடன் பராமரிப்பார்கள். அவ்வளவு நெருக்கமாக இருந்த பொம்மை திடீரென கிழிந்து விட்டால் அவ்வளவு தான் குழந்தைகள் மனநிலையைப் பற்றி சொல்லவே தேவையில்லை.

செல்லத்திற்கு அடி :

செல்லத்திற்கு அடி :

பொம்மைகள் பெரும்பாலும் பஞ்சு அடைக்கப்பட்டு துணியால் தைக்கப்பட்டதாகத்தான் இருக்கும். கிழிந்தவுடன் குழந்தைகள் மனதில் தன் செல்லத்திற்கு அடிப்பட்டுவிட்டது என்று கவலை கொள்வார்கள், அழுது அடம்பிடிப்பார்கள்.

டெடி பியர் ஹாஸ்பிடல் :

டெடி பியர் ஹாஸ்பிடல் :

அவர்களது இந்த உளவியலை கச்சதிமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த துபாய் அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதாவது குழந்தைகளுக்காக, குழந்தைகளின் பொம்மைகளுக்காக டெடிபியர் ஹாஸ்பிடல் ஒன்றை திறந்திருக்கிறார்கள். இங்கே குழந்தைகள் தங்களுடைய டெடி பியர் உள்ளிட்ட பொம்மைகளை கொண்டு வந்து சிகிச்சை பெற்று வீட்டிற்கு செல்லலாம்.

Image Courtesy

பொம்மைக்கு ஆப்ரேஷன் :

பொம்மைக்கு ஆப்ரேஷன் :

மருத்துமனை குறித்த பயமும் இதனால் போய்விடும் என்று சொல்கிறார்கள் துபாய் அரசாங்கத்தினர். குழந்தைகள் கொண்டு வரும் பொம்மையை முதல் மருத்துவர் பரிசோதிப்பார். பின்னர், சில டெஸ்ட்டுகள், ஸ்கேன் போன்றவற்றை பரிந்துரைப்பார் அதற்கு பிறகு பொம்மைக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்ட அறுவை சிகிச்சை செய்கிறார்கள்( கிழிந்த பகுதியை தைக்கிறார்கள்) எல்லாம் முடிந்ததும் பொம்மைக்கு சரியாகவிட்டது என்று அனுப்பிவிடுவார்களாம்.

Image Courtesy

பெரிய குழந்தைகளுக்கு வகுப்புகள் :

பெரிய குழந்தைகளுக்கு வகுப்புகள் :

இங்கே சின்ன குழந்தைகள் மட்டுமின்றி பள்ளி செல்லும் வயதுடைய பெரிய குழந்தைகளும் வருகிறார்கள். அவர்களுக்கு இப்படியான போலி சிகிச்சைகள் இல்லாமல் மருத்துவம் மற்றும் மருந்துகள் குறித்த கதைகள் சொல்லப்படுகிறது. நிறைய வகுப்புகளும் எடுக்கிறார்கள்.

Image Courtesy

பழக்க வழக்கம் :

பழக்க வழக்கம் :

குழந்தைகளுக்கு சர்டிபிக்கேட்களும் வழங்கப்படுவதால் பலரும் ஸ்போர்டிவ்வாக எடுத்துக் கொள்கிறார்கள்.

இதனால் குழந்தைகளுக்கு மருத்துவமனை குறித்த பயத்தை போக்குவதுடன், ஆரோக்கியமாக இருப்பது பற்றிய நல்ல பழக்க வழக்கங்கள் பற்றியும் எளிதாக குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க முடிகிறது என்கிறார்கள் டெடி பியர் மருத்துவர்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Dubai government opens teddy bear hospital

Dubai government opens teddy bear hospital