உங்க பெயரோட முதல் எழுத்து உங்கள பத்தி என்ன சொல்லுதுன்னு தெரிஞ்சுக்கணுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொருவருக்கும் தங்களது குணங்களைப் பற்றி கூறும் விஷயங்களை தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கும். ஒருவரது குணாதிசயங்களை தோற்றம் மட்டுமின்றி, பெயரின் முதல் எழுத்துக்கள் மற்றும் ராசிகளும் கூறும். அந்த வகையில் உங்களுக்கு துலாம் ராசியாக இருந்து, பெயரின் முதல் எழுத்து "T" அல்லது "R" என்றால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

Does Your Name Start With “T” or “R”? The Meaning Behind These Letters

இந்த ராசியில் பிறந்தவர்கள் மிகவும் அமைதியானவராகவும், தனிமையை விரும்பாதவராகவும் இருப்பர். எந்நேரமும் தன்னுடன் யாரேனும் இருக்க வேண்டுமென விரும்புவார்கள் மற்றும் மிகவும் நேர்மையானவர்களாக இருப்பர்.

இதுப்போன்று பல சுவாரஸ்யமான குணாதிசயங்கள், துலாம் ராசியில் பிறந்து, பெயரின் ஆரம்பத்தில் "T" அல்லது "R" எழுத்தைக் கொண்டவர்களுக்கு உள்ளது. அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்துப் படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிக நண்பர்களை கொண்டவர்கள்

அதிக நண்பர்களை கொண்டவர்கள்

துலாம் ராசியில் பிறந்து, அவர்களது பெயரின் முதல் எழுத்து T அல்லது R என்ற எழுத்துக்களில் அவர்கள் சமூகத்தோடு ஒன்றிணைந்து பழகும் சுபாவம் கொண்டராக இருப்பர். அவர்களுக்கு நண்பர் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். நண்பர்களை அதிகமாக கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணமும், நண்பர்களுடன் நேரம் செலவிடுவதை விரும்புபவர்களாகவும் இருக்க விரும்புவர்.

மற்றவர்களை கவரும் தோற்றம்

மற்றவர்களை கவரும் தோற்றம்

நம்மை பார்ப்பவர்களை கவரும் விதமான தோற்றத்தை கொண்டிருக்க வேண்டுமென்ற எண்ணம் இவர்களுக்கு சற்று அதிகம். மற்றவர்களுடன் அன்பானவராகவும், உற்சாகத்துடனும் பழகுபவராக இருப்பர். அறிவாலியாக இருக்கும் இவர்கள், மூளைக்கு வேலை தரக்கூடிய வேலைக்களில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர்களாக விளங்குவர்.

சுத்தம்

சுத்தம்

எந்தவொரு வேலையை செய்தாலும் அதை முறையாக சரியாக செய்யவேண்டுமென நினைப்பவர்கள் இவர்கள். மறுபுறம், இசையின் மீது அதீத ஈடுபாடு கொண்டவராகவும், குழந்தைகளுடன் சுலபமாக பழகும் குணமுடையவராகவும் இருப்பர்.

நாகரீகமிக்கவர்கள்

நாகரீகமிக்கவர்கள்

வயதில் மூத்தவர்களை மதிப்பதில் இருந்து மற்றவர்களுக்கு மரியாதை செலுத்தி பக்குவத்தோடு நடந்து கொள்ளும் குணமுடையவர்கள். வீட்டில் தங்குவதையே விரும்புபவர்களான இவர்கள், வெளியில் தங்குவதை அவ்வளவாக விரும்பமாட்டார்கள். இது தவிர, விளையாட்டு, கலை போன்றவற்றில் ஆர்வமிக்கவர்களாக விளங்குவர்.

மெலிந்த உருவம் கொண்டவர்கள்

மெலிந்த உருவம் கொண்டவர்கள்

துலாம் ராசியில் பிறந்து, T அல்லது R என்ற எழுத்தில் உங்களது பெயர்கள் தொடங்கினால், அவர்கள் பெரும்பாலும், உயரமான, மெலிந்த தோற்றத்தை கொண்டிருப்பார்கள். வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு செல்வதை விரும்புகவர்களான இவர்கள், வாழ்க்கையை சுவாரஸ்மாக கொண்டு செல்ல விரும்புவர். மேலும், தனது துணைக்கு சிறந்த வாழ்க்கை துணையாக இருப்பர்.

இனிமையான குரலுக்கு சொந்தக்காரர்

இனிமையான குரலுக்கு சொந்தக்காரர்

"T" அல்லது "R" என்ற எழுத்துக்களில் பெயரின் தொடக்க எழுத்தை கொண்டவர்கள், இனிமையான குரலுக்கு சொந்தக்காரர்களாக இருப்பர். குறிப்பாக வாழ்க்கையில் எந்தவொரு சூழலிலும், சிரித்துக்கொண்டே பிரச்னையை சரி செய்வதில் வல்லவராக விளங்குவர்.

மனதளவில் வலிமையானவர்

மனதளவில் வலிமையானவர்

வாழ்க்கையில் முன்னேற தேவையான பல விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வமிக்கவர்களாக இருக்கும் இவர்கள், மனதளவில் வலிமை மிக்கவர்களாக விளங்குவர். இவர்களது வெகுளித்தனமும், பிறருக்கு உதவும் குணமும் மற்றவரை கவரும் குணங்களாக அமையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Does Your Name Start With “T” or “R”? The Meaning Behind These Letters

If you are a Libran and your name starts with these initials, that is “T” or “R”, then there are a few personality traits that can define such people. Read on...