For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முற்பிறவியை பற்றி புட்டுப்புட்டு வைத்த 4 வயது டெல்லி சிறுமி, அதிர்ந்து போன உலக ஆய்வாளர்கள்!

தனது முற்பிறவி பற்றி கூறி காந்தியின் கவனம் ஈர்த்த, உலக ஆய்வாளர்களின் கவனத்தை இந்தியா பக்கம் திருப்பிய சாந்தி.

|

ஒரு மனிதனனுக்கு ஏழு பிறவி இருக்கிறது. இந்த ஏழு பிறவிகள் முடித்து அவனது கர்மாவின் கணக்குப்படி அவன் சொர்க்கம் அல்லது நரகம் செல்கிறான் என நாம் பல இடங்களில் படித்திருப்போம். பலர் கூறி கேட்டிருப்போம்.

"இந்த அறிவியல் யுகத்தில் இத்தெல்லாம் நம்பும்படியா இருக்கிறது?" என்ற கேள்வியை தான் நாம் அனைவரும் எழுப்புவோம்.

ஆனால், இந்தியாவில் டெல்லியை சேர்ந்த சாந்தி என்ற பெண், மதுராவை சேர்ந்த ஒரு பெண்ணின் மறுபிறவி என விசராணை அறிக்கையே அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் அந்த காந்தி அமைத்து அனுப்பிய விசாரணை குழுவால்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யார் இந்த சாந்தி?

யார் இந்த சாந்தி?

சாந்தி டெல்லியை சேர்ந்த பெண். 11.11.1926 அன்று பிறந்தவர். நான்கு வயது வரை இயல்பாக எல்லா குழந்தைகளை போல விளையாடிக் கொண்டிருந்தார் சாந்தி. ஆனால், அதற்கு பிறகு தான் அவரது வாழ்வில் ஒரு புயல் வீசியது.

மதுராவை சேர்ந்தவள் நான்...

மதுராவை சேர்ந்தவள் நான்...

சாந்தி தனது நான்காம் வயதில் திடீரென ஒரு நாள், தனது சொந்த வீடு மதுராவில் இருக்கிறது. நான் மதுராவை சேர்ந்தவள் என கூறி பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதை ஆரம்பத்தில் பெற்றோர்கள் அதட்டி, இப்படி பேச வேண்டாம் என கூறி சாந்தியை கண்டித்தனர்.

MOST READ: மாதவிடாய் ஏற்பட்ட மாணவிக்கு சமயோசிதமாய் சிந்தித்து உதவிய சக மாணவன் - ரியல் ஹீரோ!

கணவர் பெயர் கேதார்நாத்...

கணவர் பெயர் கேதார்நாத்...

ஒருமுறை சாந்தி அவரது பள்ளி ஆசிரியர்களிடம், தனது கணவர் பெயர் கேதார்நாத், எனது பெயர் லுக்கி தேவி என்றும் கூறினார். இப்படி ஒவ்வொரு தகவலாக கூறி தன்னை சுற்றி இருந்தவர்களை திகைக்க வைத்தார் சாந்தி.

Image Source

9 ஆண்டுகளுக்கு முன் மரணம்...

9 ஆண்டுகளுக்கு முன் மரணம்...

எல்லாவற்றுக்கும் மேலாக ஒன்பது வருடங்களுக்கு முன்னர் தனது மகன் பிறந்த பத்தாவது நாளில் தான் மரணம் அடைந்துவிட்டதாக கூறி பேரதிர்ச்சியை அளித்தார் சாந்தி.

விசாரணை....

விசாரணை....

சாந்தி இப்படி ஒவ்வொரு தகவலையும் நேர்த்தியாக, நடந்தப்படியே கூறுவதை வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் குழந்தை சாந்தி கூறியது அனைத்தும் உண்மை. அப்படிப்பட்ட சம்பவங்கள் மதுராவில் நடந்தது கண்டறியப்பட்டது.

காந்தியின் பார்வைக்கு சென்றது...

காந்தியின் பார்வைக்கு சென்றது...

சாந்தி பற்றிய எல்லா விவரங்களும் காந்தியின் கவனத்திற்கு சென்றது. காந்தி, சாந்தி பற்றி முழுமையாக விசாரிக்க குழு ஒன்றையும் அமைத்தார். விசாரணை குழுவோடு சாந்தி, அவரது பெற்றோர் மதுரா சென்றனர்.

MOST READ: வெளிய போறதுக்கு முன்னாடி இதெல்லாம் செக் பண்ண மாட்டிங்களா?

அடையாளம் காட்டிய சாந்தி....

அடையாளம் காட்டிய சாந்தி....

மதுராவிற்கு சென்று அனைத்தையும் அடையாளம் காட்டினார் சாந்தி. விசாரணையின் முடிவில் சாந்தி கூறிய அனைத்தும் உண்மை தான் என்றும், சாந்தி லுக்கி தேவியின் மறுபிறவி தான் என்றும் அறிக்கை அளித்தது விசாரணை குழு.

திருமணம் செய்துக் கொள்ளவில்லை...

திருமணம் செய்துக் கொள்ளவில்லை...

தனது வாழ்நாள் முழுவதும் சாந்தி தேவி திருமணம் செய்துக் கொள்ள வில்லை. இயான் ஸ்டீவன் முதல் மறுபிறவி பற்றி ஆய்வு செய்து வந்த பலர் சாந்தியை குறித்து ஆராய்ச்சி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Delhi Women Shanthi and Her Reincarnation

Delhi Women Shanthi and Her Reincarnation
Desktop Bottom Promotion