கலர்ஃபுல் திருவோணம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

Posted By:
Subscribe to Boldsky

மலையாள மக்களால் விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையானது ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 10 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் முப்பத்து முக்கோடி தேவர்களும் அதிசயப்படும்படியும், பொறாமை கொள்ளும் வகையிலும் நல்லாட்சி செய்தார் மகாபலி மன்னர்.

Celebration of Onam festival

மக்களின் மனம் கோணாமலும் கேட்பவர்களுக்கு வாரி வழங்கியும் பொற்கால ஆட்சி நடத்தி வந்தவர் தன் மக்களை பார்க்க வருவதை விழாவாக கொண்டாடுகின்றனர் மக்கள்.நாளை திருவோணம் விமர்சையாக கொண்டாடப்படயிருக்கிறது. அதற்கு முன்னால் ஓணம் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வரலாறு :

வரலாறு :

குள்ளமான வாமனனாக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு பூலோகம் வந்தார். தானம் கேட்பதற்காக கொடை வள்ளலாம் மகாபலியிடம் சென்றார்.தனக்கு மூன்றடி நிலம் தேவைப்படுவதாக கூறினார். குள்ளமான உருவத்துடன் வந்த வாமனனை மகாபலி விழுந்து வணங்கினார். ‘மூன்றடி நிலம்தானே.. தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்' என்றார்.

Image Courtesy

மூன்றாவது அடி :

மூன்றாவது அடி :

ஒரு பாதத்தை பூமியிலும் இன்னொரு பாதத்தை ஆகாயத்திலும் வைத்தார். ‘மூன்றடி கொடுப்பதாக சொன்னாய். இரண்டு அடி அளந்துவிட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது?' என்றார்.

‘உலகையை அளக்கும் பரந்தாமனே. உங்களுக்கு என்னையே தருகிறேன். மூன்றாவது அடியை என் தலையில் வைத்து அளந்துகொள்ளுங்கள்' என்று சொல்லி சிரம் தாழ்த்தி நின்றார் மகாபலி.

ஐதீகம் :

ஐதீகம் :

கொடை வள்ளலாக திகழும் மகாபலியின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கமாறு அருள் பாலித்தார் மகாவிஷ்ணு . அவரிடம் நாட்டு மக்களை பிரிவது கஷ்டமாக இருக்கிறது.

ஆண்டுதோறும் ஒரு நாளில் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி, தன் நாட்டு மக்கள் வளமாக, சந்தோஷமாக இருக்கிறார்களா என்று பார்க்க ஆண்டுதோறும் ஓணப் பண்டிகையின்போது மகாபலி பூவுலகுக்கு வருவதாக ஐதீகம்.

அதனால்தான், அவரை வரவேற்கும் விதமாக 10 நாள் பண்டிகையாக ஓணத்தை கொண்டாடுகின்றனர்.

Image Courtesy

பூக்கோலம் :

பூக்கோலம் :

ஓணம் பண்டிகையின் முக்கிய அம்சமே, மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகக் ஒவ்வோர் வீட்டு வாசலிலும் போடப்படும் ‘அத்தப்பூ' என்ற பூக்கோலம் ஆகும். முதல் நாள் ஒரேவகையான பூக்கள், இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்றெனத் தொடர்ந்து 10-ம் நாள், பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். 10-ம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும்.

ஓண சாத்யா :

ஓண சாத்யா :

அறுசுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான ‘ஓண சாத்யா' என்ற உணவு தயாரிக்கப்படுகிறது. புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், ரசம், மோர், தோரன், சர்க்கரைப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பப்படம், காய வறுத்தது, ஊறுகாய் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்குப் படைக்கப்படும்.

Image Courtesy

இஞ்சிக்கறி :

இஞ்சிக்கறி :

பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெறுகிறது. இந்த உணவு எளிதில் ஜீரணம் ஆவதற்காக ‘இஞ்சிக்கறி', ‘இஞ்சிப்புளி' ஆகியவற்றை உணவுடன் எடுத்துக்கொள்வர்.

Image Courtesy

மகாபலியை வரவேற்கும் பாடல் :

மகாபலியை வரவேற்கும் பாடல் :

புலிக்களி நடனம் சுமார் 200 வருடங்களுக்கு முன், மன்னன் ராம வர்ம சக்தன் தம்புரான் என்ற மன்னனால் ஓணம் விழாவில் தொடங்கிவைக்கப்பட்டதாகும்.

கறுப்பு, மஞ்சள், சிவப்பு வர்ணம் பூசி, இசை ஒலிக்கேற்ப ஒருவித தாளத்துடன் புலி வேடமிட்டு ஆடுவர்.

ஓணம் பண்டிகைக் காலங்களில் பெண்கள் மகிழ்வோடு ஆடும் நடனம், ‘கைகொட்டுக்களி.' கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து பாடல்களைப் பாடியபடி ஆடுவர்.

பெரும்பாலும் கைகொட்டுக்களி பாடல்கள் மன்னன் மகாபலியைக் குறித்தும், அவரை வரவேற்பதாகவும் அமையும்.

Image Courtesy

யானைத் திருவிழா :

யானைத் திருவிழா :

10-ம் நாளான திருவோணத்தன்று, யானைகளை விலையுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும் பூத்தோரணங்களாலும் அலங்கரித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர். யானைகளுக்குச் சிறப்பு உணவுகளும் படைக்கப்படும்.

Image Courtesy

நேரியல் புடவை :

நேரியல் புடவை :

இளம்பெண்கள் ஓணம் பண்டிகை தினத்தன்று தங்கள் பாரம்பரிய உடையான தங்கநிற ஜரிகையுடன் கூடிய இளம்மஞ்சள் நிற புத்தாடை அணிந்து பண்டிகையை கொண்டாடுவர்.

கேரள பாரம்பரிய உடையான சந்தன நிற சரிகைக் கைத்தறிப் புடவைகள் கேரளாவின் பாலராமபுரத்திலிருந்து தயாராகி உலகம் முழுதும் விற்பனையாகத் தொடங்கின.

இந்த வெண்மை நிற ஆடை, மக்கள் தங்கள் இதயத்தை தூய்மையாக வைத்திருப்பதை உணர்த்தக் கூடிய வகையில் உடுத்தப்படுவதாகும்.

Image Courtesy

 சமுதாய விழா :

சமுதாய விழா :

ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி அனைத்து மதத்தினரும், சமுதாயத்தினரும் ஒன்றுகூடி மகிழும் தேசிய விழாவாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

கயிறு இழுத்தல், களறி, பாரம்பர்ய நடனப் போட்டிகள் என பண்டிகையின் 10 நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த விளையாட்டுகளில் கலந்து கொள்வர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, life, pulse, festival, onam
English summary

Celebration of Onam festival

Celebration of Onam festival
Story first published: Sunday, September 3, 2017, 12:17 [IST]
Subscribe Newsletter