ஏலியன் பெண்ணை திருமணம் செய்து 100 குழந்தைகள் பெற்றேன் - அமெரிக்க முதியவர் அதிர்ச்சி!

Posted By:
Subscribe to Boldsky

ஏலியனை கண்டதாக நாம் பல வீடியோ பதிவுகள், செய்தி கட்டுரைகள் கண்டுள்ளோம். ஏலியன் நமது உலகிக்கு வந்தால் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை பல ஹாலிவுட் திரைப்படங்கள் காண்பித்துள்ளன.

சில அகழ்வாராய்ச்சியாளர்கள் எகிப்து, நாஸ்கா (Nazca) வரிகள் மற்றும் உலகின் சில விசித்திரமான கட்டுமானங்கள் போன்றவை ஏலியன்கள் ஏற்கனவே பூமிக்கி வந்து சென்ற தடையங்களாக இருக்கலாம் என கூறியுள்ளனர்.

ஆனால், யார் ஒருவரும் தான் ஏலியனை காதலித்தேன், திருமணம் செய்துக் கொண்டேன், பிள்ளைகள் பெற்றுக் கொண்டேன் என கூறியதில்லை. மேலும், வேற்றுகிரகம் சென்று குடும்பம் நடத்தினோம் என்று கூறுவதெல்லாம் ஹாலிவுட் கதாசிரியர்களுக்கு நல்ல ஐடியாக்களை கொடுக்கும் போல.

சரி, யார் இந்த நபர்? இவர் கூறும் விந்தையான கதைதான் என்ன?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நியூ மெர்சி!

நியூ மெர்சி!

இவர் பெயர் டேவிட் ஹக்கின்ஸ். இவருக்கு வயது 79. அமெரிக்காவினி நியூ மெர்சி மாகாணத்தில் வசித்து வரும் இந்த முதியவர், தான் ஏலியன் பெண்ணை திருமணம் செய்துக் கொண்டேன் என்றும். எங்களுக்கு நூறு குழந்தைகள் பிறந்தது என்றும் கூறி பேட்டி அளித்துள்ளார்.

ஜார்ஜியா!

ஜார்ஜியா!

தான் சிறுவயதில் பெற்றோருடன் ஜார்ஜியாவில் வசித்து வந்தேன் என்றும். எட்டு வயதிருக்கும் போதே தனக்கும், ஏலியன் பெண்ணுக்கும் தொடர்பு உண்டானது என்றும் கூறியுள்ளார் முதியவர் டேவிட் ஹக்கின்ஸ்.

ஆண்மை இழப்பு!

ஆண்மை இழப்பு!

மேலும், தனக்கு 17 வயதிருக்கும் போது ஆண்மை இழப்பு ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார். அந்த ஏலியன் பெண்ணை தான் கிரசெண்ட் என்றே அழைத்து வந்தேன். அவள் என்னை விண்வெளிக்கு அழைத்து சென்றாள். அங்கு தான் நாங்கள் வாழ்ந்து வந்தோம் என்றும் தான் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார் டேவிட் ஹக்கின்ஸ்.

நூறு குழந்தைகள்!

நூறு குழந்தைகள்!

விண்வெளியில் நாங்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக எங்களுக்கு நூறு குழந்தைகள் பிறந்தார்கள் என்றும் கூறியுள்ளார் டேவிட். ஏலியன் பெண்ணுடன் தான் வாழ்ந்த வாழ்க்கையை எடுத்திரைக்கும் வகையில் இவர் ஓவியங்கள் பல தீட்டியுள்ளார்.

ஓவியங்கள்!

ஓவியங்கள்!

ஒரு வேற்று கிரகத்தில் வாழ்ந்து வந்தது போலவும், அங்கே ஏலியன்கள் வாழ்ந்து வருவது போலவும். அந்த கிரகத்தில் ஒரே ஒரு புவியை சேர்ந்த மனிதன் வாழ்ந்து வருவதாகவும். அங்கே ஒரு பெண் ஏலியன் மற்றும் சில ஏலியன் குழந்தைகள் இருப்பது போல பல ஓவியங்களை வரைந்துள்ளார் டேவிட் ஹக்கின்ஸ்.

மேலும், அந்த ஓவியங்களில் தாங்கள் வாழ்ந்தவிதம் மற்றும், தாங்கள் சென்ற இடங்கள் இவையென சில ஓவியங்களை சுட்டிக் காட்டுகிறார் டேவிட் ஹக்கின்ஸ்.

யாரும் நம்ப வேண்டாம்...

யாரும் நம்ப வேண்டாம்...

நான் கூறும் இவை சிலருக்கு வேடிக்கையாக இருக்கலாம். இதை நான் யாரும் நம்ப வேண்டும் என்பதற்காக கூறவில்லை. ஆனால், நான் சொல்வது அனைத்தும் உண்மை. என்ன நடந்தது என்பது எனக்கு மட்டுமே தெரியும். இதை யாருக்கும் நிரூபிக்கக் வேண்டும் என்ற கட்டாயம் எனக்கில்லை என்று டேவிட் ஹக்கின்ஸ் கூறியுள்ளார்.

ஆவணப்படம்!

ஆவணப்படம்!

டேவிட் கூறும் இந்த தகவல்களை வைத்து ஒரு செய்தி நிறுவனம் ஆவணப்படம் எடுக்க முயற்சித்து வருகிறது. இனி, அந்த ஆவணப்படம் வெளியாகும் போதுதான். டேவிட் கூறும் இந்த ஏலியன் கதை உண்மையா? பொய்யா? இதன் பின்னணியில் இருக்கும் விஷயங்கள் என்னென்ன என்பது குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும்.

மாயத் தோற்றம்!

மாயத் தோற்றம்!

இந்த கதையை கேட்கும் சிலர் ஒருவேளை டேவிட் ஹக்கின்ஸ் எனும் இந்த அமெரிக்க முதியவர் Hallucinations எனும் மாயத் தோற்றத்திற்குள் சிக்கித் தவித்து வருகிறார். இது போன்ற நிகழ்வுகள் நடக்க வாய்ப்பே இல்லை என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

கற்பனை!

கற்பனை!

டேவிட் ஹக்கின்ஸ்-ன் ஓவியங்களை காணும் போது அவர் சிறந்த கலைஞராகவே தெரிகிறார். ஒருவேளை ஆண்மை இல்லாத வாழ்க்கை சம்பவமும், ஓவியராக அவரது கற்பனை திறனும் கலந்த வெளிப்பாடாக இந்த ஓவியங்களும், அவர் கூறும் கதையாக இருக்குமோ என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

An Old American Says He Married Alien and Has 100 Children!

An Old American Says He Married Alien and Has 100 Children!