For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரவு வேளைகளில் நாய்கள் கார், பைக்குகளை அதிகமாக துரத்துவதன் காரணம் இதுதான்?

|

ஷிப்ட் வேலைகளுக்கு சென்று விட்டு நள்ளிரவில் வீடு திரும்பும் பெரும்பாலானவர்கள் இந்த அருமையான தருணத்தை சந்தித்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

சற்று வேகமாக அல்லது சப்தமாக வண்டியை ஒட்டிக் கொண்டு வந்தாலும், தெருவில் இருக்கும் அத்தனை நாய்களும் ஒன்று கூடி துரத்தும். இது ஏன் என்று என்றாவது நீங்கள் யோசித்ததுண்டா?

தினம், தினம் இரவு பயந்து ஓடியிருப்போம். அதே நாய்கள் காலை வேளையில் நாம் எத்தனை வேகமாக சென்றாலும் ஒன்றும் செய்யாது, பவ்வியமாக சாலையில் நடந்துக் கொண்டிருக்கும். இதற்கு என்ன தான் காரணம்?

இதற்கு காரணம் இது தான் இணையத்தில் பலர் கூறிய பதில்களில் சிலவன உங்கள் பார்வைக்கு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எல்லை பாதுகாப்பு!

எல்லை பாதுகாப்பு!

மனிதர்களாகிய நாம் எப்படி நமக்கு என்று தனி எல்லை வைத்திருக்கின்றோமோ அதே போல தான் நாய்களும்.

நாய்கள் தங்கள் எல்லையை மரம், போஸ்ட் கம்பம், கார்கள் / வாகனங்கள் மீது சிறுநீர் கழித்து தங்கள் எல்லையை குறித்து வைதுக்கொள்ளுமாம்.

இதை தாண்டி, வேறு சில புதியதாக ஏதேனும் வாகனம் மீது வேறு நாயின் சிறுநீர் வாடை கண்டுகொண்டால், வேறு பகுதி நாய் தங்கள் பகுதிக்கும் நுழைவதாக கருதியும் நாய்கள் துரத்துகின்றன என தீபக் ஃபியோலக் என்பவர் பதில் கூறியுள்ளார்.

உள்ளுணர்வு!

உள்ளுணர்வு!

நாய்களுக்கு உள்ளுணர்வுகள் அதிகம். வேகமாக செல்லும் வாகனங்கள் நாய்களின் உள்ளுணர்வுகளை தூண்டுவதால், நாய்கள் அந்த வாகனங்களை துரத்தும் குணம் கொண்டுள்ளது. இதே மெதுவாக செல்லும் வாகனங்களை நாய்கள் துரத்துவது இல்லை.

மேலும், வாகனங்களால் விபத்து அல்லது வேறு அபாயம் நேரிட்ட அனுபவம் இருந்தாலும் நாய்கள் வாகனங்களை துரத்தும் குணம் கொள்ளளலாம் என ரிஷப் மஷும்தர் என்பவர் கூறியுள்ளார்.

வீட்டு நாய் vs தெரு நாய்!

வீட்டு நாய் vs தெரு நாய்!

வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு நாம் குட்டியாக இருக்கும் போதிலிருந்தே அனைத்தையும் பயிற்றுவித்து வளர்க்கிறோம்.

அதே தெரு நாய்கள் அப்படி கிடையாது. அதனால் தான் வீட்டு நாய்கள் சாலையில் வாகனங்கள் சென்றால் துரத்துவதில்லை, தெருநாய்கள் துரத்துகின்றன என மார்டின் என்பவர் கூறியுள்ளார்.

கவனிப்பு!

கவனிப்பு!

ராஜேஷ் என்பவர் தான் தினம், தினம் இந்த சம்பவத்தை எதிர்கொள்பவன். இதனால் ஒரு சில விஷயங்களை கவனிக்க துவங்கினேன். அதில் நாய்கள் வாகனங்களை துரத்துவதற்கான காரணங்கள் என தான் கண்டறிந்த மூன்று விஷயங்கள் பற்றி கூறியுள்ளார்...

விஷயம் #1

விஷயம் #1

இரவு நேரம்! இரவு நேரத்தில் மட்டும் நாய்கள் வாகனங்களை அதிகம் துரத்துவதற்கு காரணம், வாகனத்தின் அதிக ஒளி (ஹெட்லைட்), வ்ர்ரூம் என சப்தம் எழுப்பிக் கொண்டு வருவது, வேகமாக வருவது போன்றவை நாய்கள் மோப்பம் பிடித்து யோசித்து அட்டாக் செய்யாமல், உடனே அட்டாக் செய்ய காரணமாக இருக்கிறது.

விஷயம் #2

விஷயம் #2

வாகனத்தின் இரைச்சல். சில வாகனங்கள் அதிக இரைச்சல் கொண்டிருக்கும். சிலர் தங்கள் சைலன்சறை மாற்றி அமைத்து, சப்தம் அதிகமாக வைத்துக் கொள்வார்கள். இதுபோன்ற வாகனங்களை நாய்கள் அதிகமாக துரத்துகின்றன.

விஷயம் #3

விஷயம் #3

மனித அச்ச உணர்வு! நாய்கள் உணர்வுகளை கண்காணிக்க கூடியவை. ஒருவரது உடல் அசைவு, அச்சத்தை வைத்தே அவை ஒருவரை அட்டாக் செய்ய முனைகின்றன.

நீங்கள் நாய்களை கண்ணோடு நேராக பார்த்தல் குரைக்குமே தவிர துரத்தாது. இதே நீங்கள் பயந்து செயல்படுவதை உணர்ந்தால் துரத்த ஆரம்பிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why do dogs bark and run after vehicles in the night time?

Why do dogs bark and run after vehicles in the night time? take a look on here.
Story first published: Tuesday, September 20, 2016, 11:21 [IST]
Desktop Bottom Promotion