சீயான்-க்கு என்ன அர்த்தம்-னு உங்களுக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

சீயான் என்றாலே நமக்கு விக்ரம் நினைப்பு தான் வரும். விக்ரமுக்கு சீயான் அடைமொழியாக காரணமாக இருந்தது, அவரது திரை வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்த பாலா இயக்கிய "சேது" திரைப்படம் தான்.

இந்த படம் முழுக்க விக்ரமை அனைத்து கதாபாத்திரங்களும் பேச்சுக்கு, பேச்சு சீயான், சீயான் என்று தான் அழைக்கும். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தான் விக்ரம், "சீயான்" விக்ரமாக மாறினார். இதற்கு பின்னர் என்ன நடந்தது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.

ஆனால், இந்த சீயான் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என விக்ரமின் ரசிகர்களே பலர் அறிந்திருக்கு வாய்ப்பில்லை...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரமலைக்கள்ளர்!

பிரமலைக்கள்ளர்!

பிரமலைக்கள்ளர்களில் 'தாத்தா' மற்றும் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை சீயான் என்று அழைக்கும் வழக்கம் இருந்துல்லாது.

ஸ்ரீ ஆயர்!

ஸ்ரீ ஆயர்!

சீயான் என்பது உண்மை சொல்லல்ல. இது திரிந்து வந்த சொல்லாகும். இதற்கு தனி அர்த்தமும் இருக்கிறது. அதாவது மழவராகிய கோவலரை 'ஸ்ரீ ஆயர்' என அழைக்கும் வழக்கம் இருந்தது.

விளக்கம்!

விளக்கம்!

ஸ்ரீ என்றால் திரு தமிழில் திரு; ஆயர் என்றால் கோவலர்கள் என்று பொருள். இது தான் ஸ்ரீ ஆயர் என்பதற்கு பொருள்!

திரிந்து வந்த சொல்!

திரிந்து வந்த சொல்!

'ஸ்ரீ ஆயர்'------>'சீ ஆயர்'------>சிய்யான்------>சீயான்., என ஸ்ரீ ஆயரின் இருந்து சீயான் என இந்த சொல் திரிந்து வந்துள்ளது. இப்பெயரையே பிரமலைக்கள்ளர்கள் சீயான் என பயன்படுத்துகின்றனர்.

உசிலம்பட்டி தமிழ் வழக்கு!

உசிலம்பட்டி தமிழ் வழக்கு!

உசிலம்பட்டி பேச்சு வழக்கிலும் "சீயான்" என்ற சொல்லுக்கு தாத்தா என்ற பொருள் விளங்கி வருவதாக சில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What is the Meaning of Name "Chiyaan"?

What is the Meaning of Name "Chiyaan"? read here in tamil
Story first published: Monday, September 19, 2016, 11:11 [IST]
Subscribe Newsletter