Latest Updates
-
நாளை நடக்கும் எம நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தலைவிதி மாறும், செல்வம் பெருகும்.. -
உங்களுக்கு வெற்றி, பணம் குவியணுமா? அப்ப சாணக்கியர் கூறும் இந்த 4 காலை பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
முட்டையும், குடைமிளகாயும் இருந்தா.. ஒருடைம் இத ட்ரை பண்ணுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க.. -
ஜூலை 15-ல் குரு அஸ்தமனமாவதால் இந்த 5 ராசிக்கு பண மழை பொழியும், பதவி உயர்வு கிட்டும்! -
சிக்கன் மலாய் கபாப் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
சீரக நீர் Vs சியா விதை நீர் - இவற்றில் உடல் எடையை குறைக்க சிறந்தது எது? -
12 ஆண்டுகள் கழித்து ஜூலை 16-ல் உருவாகும் 'குரு ஆதித்ய ராஜயோகம்': இந்த 6 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்க போகுது! -
மணமணக்கும்.. ஆட்டுக்குடல் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்படப் போறாங்களாம்
20 சின்ன வெங்காயம் இருந்தா இந்த கேரளா உள்ளி தீயலை செய்யுங்க - 1 மாசம் வைச்சு சாப்பிடலாம்
Kerala Ulli Theeyal recipe in Tamil: மதியம் உங்கள் வீட்டில் சமைக்க காய்கறி எதுவும் இல்லையா? சிம்பிளா சமையலை முடிக்கணுமா? உங்கள் வீட்டில் 20 சின்ன வெங்காயம் இருக்கா? அப்படியானால் அந்த சின்ன வெங்காயத்தை வைத்து கேரளா ஸ்டைல் உள்ளி தீயல் முயற்சி செய்து பாருங்கள். இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும்.

இந்த உள்ளி தீயலை ஒருமுறை செய்து விட்டால், பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த குழம்பை சில வாரங்கள் வரை கூட வைத்து சாப்பிடலாம். அவ்வளவு சுவையாக இருக்கும். இந்த குழம்பை சூடான சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து, அப்பளத்துடன் சாப்பிடும் போது, சுவை வேற லெவலில் இருக்கும். இது கேரளாவில் மிகவும் பிரபலமான ஒரு உணவாகும்.
உங்களுக்கு கேரளா ஸ்டைல் உள்ளி தீயலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா உள்ளி தீயல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- சின்ன வெங்காயம் - 20
- புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
- தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
- துருவிய தேங்காய் - 1/2 கப்
- மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
- தனியாத்தூள் - 2 ஸ்பூன்
- மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
தாளிக்க:
- தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- வெந்தயம் - 1/4 ஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- வர மிளகாய் - 1
செய்முறை:
- புளியை 1 கப் வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து, அதன் சாற்றைப் பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
- சின்ன வெங்காயத்தைக் கழுவித் தோல் நீக்கிக் கொள்ளவும். பின்னர் அதை இரண்டாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, அதில் துருவிய தேங்காய் மற்றும் 5 சின்ன வெங்காயங்களைச் சேர்த்து வறுக்கவும்.
- தேங்காய் பொன்னிறமாக மாறி, வாசனை வரும்வரை வறுக்க வேண்டும். தேங்காயை தீய விடமால் பார்த்துக் கொள்ளுங்கள்.
- அடுப்பின் தீயை மிதமான அளவில் வைத்திருக்கவும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தனியா தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். அவற்றின் பச்சை வாசனை நீங்கும் வரை ஒரு நிமிடம் நன்கு கிளறிவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும். கலவை முழுமையாக ஆறிய பிறகு, அதை ஒரு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். பின்னர் கடுகு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துப் பொரியவிடவும்.
- பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும்வரை வதக்கவும். இதனுடன் புளிக்கரைசலையும், தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும்.
- வெங்காயம் நன்கு வேகும்வரை குழம்பைக் கொதிக்கவிடவும். வெங்காயம் வெந்த பிறகு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்க்கவும். குழம்பின் சுவையைச் சரிபார்க்கவும், புளிப்பு அதிகமாக இருந்தால் இருந்தால், தேவைக்கேற்பக் கூடுதல் மிளகாய்த்தூள் மற்றும் தனியாதூளைச் சேர்க்கவும். குழம்பு கெட்டியாகி, எண்ணெய் பிரிந்து வரும்வரை நன்கு கொதிக்கவிடவும்.
- இந்த குழம்பு நேரம் செல்லச் செல்ல மேலும் கெட்டியாகும். எனவே, பரிமாறுவதற்கு முன் சிறிது தண்ணீர் சேர்த்து அதன் பதத்தை சரிசெய்து, கொதிக்க விடவும்.
- இந்த குழம்பு குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைத்தால் பல வாரங்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும்.



Click it and Unblock the Notifications