Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
இந்தியர்களை முட்டாளாக்கிய, தந்திரமாக பரப்பப்பட்ட 12 பொய்கள்!!!
கோட்சே காந்தியை சுட்டுக் கொன்றதற்கு சில வினாடிகளுக்கு முந்தைய புகைப்படம், மூன்று தலை நாகம், இந்திய தேசிய கீதம் தான் உலகின் சிறந்தது என்ற நெட்டில் பரப்பப்பட்ட பல செய்திகள் அப்பட்டமான பொய்.
இன்டர்நெட் என்பது ஓர் பெரிய மாயை. உண்மையைவிட பல மடங்கு பொய்யும் புரட்டும் நிறைந்த உலகம் ஆன்லைன். இங்கு மட்டும் தான் சிவனும் பார்வதியும் பிறந்த புகைப்படம் காட்டி உண்மை என்று கூறி பரப்பப்படும்.
கோட்சே காந்தியை சுட்டுக் கொன்றதற்கு சில வினாடிகளுக்கு முந்தைய புகைப்படம், மூன்று தலை நாகம், இந்திய தேசிய கீதம் தான் உலகின் சிறந்தது என்ற நெட்டில் பரப்பப்பட்ட பல செய்திகள் அப்பட்டமான பொய்.
இதை எல்லாம் அறியும் போது நெட்டில் உலாவி வரும் 70% தகவல்கள் பொய் தான் என்பது உங்களுக்கு தெரியவரும். மீதமுள்ள 30% தகவல்களை நீங்கள் தான் தேடி படித்து தெரிந்துக் கொள்ள வேண்டும்.
நம்மை வந்து சேரும் தகவல்கள் பலவன பொய்யாக தான் இருக்கிறது. சரி இனி இந்தியர்களை முட்டாளாக்கிய தந்திரமாக பரப்பப்பட்ட 15 பொய்கள் பற்றி காணலாம்...

காந்தியை கோட்சே சுட்ட புகைப்படம்
காந்தியை கோட்சே சுடுவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் ஏன்டா பெயரில் ஓர் புகைப்படம் நெட்டில் அடிக்கடி பரவும். இது முற்றிலும் பொய்யானது. 1963-ம் ஆண்டு "Nine hours to Rama" என்ற படத்தில் ஜெர்மன் நடிகர் கோட்சேவாக நடித்த போது எடுத்த புகைப்படம் அது.
Image Source

மூன்று தலை நாகம்
அவ்வப்போது நேற்று, இரண்டு நாட்களுக்கு முன்பு என இந்தியாவின் பல இடங்களில் எடுக்கப்பட்டதாக பகிரப்படும் மூன்று தலை நாகத்தின் படம் இது. போட்டோஷாப் அறிந்த நபர்களுக்கு மட்டுமே தெரியும் இது அப்பட்டமான பொய் என்று.
Image Source

ஒரே பிரசவத்தில் 11 குழந்தைகள்
இந்த படத்தையும் நீங்கள் பரவலாக நெட்டில் கண்டிருக்கலாம். ஒரே பிரசவத்தில் 11 குழந்தைகளை ஈன்றெடுத்து இந்திய பெண் சாதனை என்று. இது அப்பட்டமான பொய். கடந்த 11/11/11 அன்று சூரத்தில் உள்ள செஞ்சுரி மருத்துவமனையில் பிறந்த 11 குழந்தைகளின் புகைப்படம் இது.
Image Source

மிகப்பெரிய எலும்புக்கூடு
இந்தியா மற்றும் வங்காள தேசத்திலும் கூட இந்த புகைப்படம் அதிகமாக பரவியது. பூமிக்கு அடியில் கிடைத்த பெரிய மனித எலும்புக்கூடு என்று கூறப்பட்டது. ஆனால், இது worth1000.com என்ற இணையத்தில் புகைப்பட எடிட்டிங் போட்டியில் பங்கெடுத்த புகைப்படம் என்பது தான் உண்மை.
Image Source

தீபாவளி தினத்தில் இந்தியா
சமூக இனையத்தில் மிகவும் பிரபலம் இந்த புகைப்படம். ஒவ்வொரு தீபாவளி நாளன்றும் நாசா இந்த புகைப்படத்தை வானில் இருந்து எடுத்தது என்று கூறுவார்கள். இது வெறும் புரளி. இதை புரளி என்று நாசாவும் ஊர்ஜிதம் செய்தது.
Image Source

உலகின் சிறந்த தேசிய கீதம் ஜன கன மன
வாட்ஸ்-அப், மின்னஞ்சல், முகநூல் என பல இடங்களில் உலகின் சிறந்த தேசிய கீதம் ஜன கன மன என்று யுனெஸ்கோ அறிவித்தது என்ற செய்தி இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது சுற்றறிக்கை போல வந்துவிடும். இது முற்றிலுமான பொய் என யுனெஸ்கோ அறிவித்துவிட்டது.
Image Source

கேரளாவில் மனிதனை விழுங்கிய மலைப்பாம்பு
இந்த மலைப்பாம்பு கேரளாவில் மது அருந்திவிட்டு படுத்திருந்த மனிதனை விழுங்கிவிட்டது என்று கூறி பரப்பி வந்தார்கள். ஆனால், இதே புகைப்படம் இந்தோனேசியா, சீனா, மலேசிய, தென்னாப்பிரிக்கா போன்ற பகுதிகளிலும் பரப்பப்பட்டுள்ளது. இது உண்மையில் ஒருமுறை மலைப்பாம்பு மான் ஒன்றை முழுதாக விழுங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்.

பிளாஸ்டிக் குர்குர்ரே
குர்குர்ரேவை யாரும் சாப்பிட வேண்டாம் அதில் பிளாஸ்டிக் கலப்படம் உள்ளது, பாருங்கள் எப்படி உருகுகிறது என்று இந்த படம் பகிரப்படும். ஆனால், குர்குர்ரேவில் சோளம் மற்றும் மசாலாப் பொருட்கள் தான் கலக்கப்படுகிறது இது போலியான புகைப்படம் என குர்குர்ரே நிறுவன மேலாண்மை துறையில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Image Source

பெப்சி, மாசா, ப்ரூட்டியில் எச்.ஐ.வி வைரஸ்
இது மிகவும் கொடுமையான பொய். டெல்லி போலிஸ் தான் இப்படி ஓர் அறிக்கையை வெளியிட்டது என பரப்பப்பட்ட பொய் இது. பெப்சி, ப்ரூட்டி, மாசாவில் ஓர் ஊழியரில் இரத்தம் கலந்துவிட்டது. அவர் ஓர் எச்.ஐ.வி நோயாளி. எனவே, அவற்றை பருகுவதை நிறுத்துங்கள் என்று கூறி பரப்பினர். ஆனால், இது பொய்யான தகவல் என டெல்லி காவல்துறையே கூறிவிட்டது.

அனுமானின் கதாயுதம்
சமீபக் காலமாக இந்த அனுமானின் கதாயுதம் நெட்டில் உலாவி வருகிறது. கேட்டால் இது இலங்கையில் பூமிக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்டது என கதை கூறுவார்கள். இது அப்பட்டமான பொய். உண்மையில், கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 நாள் அனுமான் ஜெயந்தி அன்று இந்தூர் பகுதியில் நிறுவப்பட்ட அனுமன் சிலையில் வைக்கப்பட்ட கதாயுதம் தான் இது.

சுவிஸ் பேன்க் வெளியிட்ட கருப்பு பண பட்டியல்
இந்திய அரசியல்வாதிகள் யார், யார் எத்தனை ஆயிரம் கொடிகள் சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்திருக்கிறார்கள் என பட்டியல் வெளியாகி உள்ளது என்று இந்த படம் பரப்பப்பட்டது. இதுவும் பொய் தான். சுவிஸ் கோட் 0041, இந்த புகைப்படத்தில் 0044 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மேனேஜர் கையொப்பம் வலதுப்பக்கம் உள்ளது. ஐரோப்பிய வழக்கத்தின் படி அவர்கள் இடதுபக்கம் தான் கையொப்பம் இடுவார்கள்.

யோ யோ ஹனி சிங் மரணம்
யோ யோ ஹனி சிங் மட்டுமின்றி, ஜான் சீனா, கேன் என்று பல பிரபலங்கள் நெடில் பல முறை இறந்துள்ளனர். ஆனால், நன்கு வளர்ந்து வந்த நேரத்தில் அவர் இறந்துவிட்டார் என்று நெட்டில் பொய்யாக பரப்பப்பட்டது. இதை ட்விட்டர் மூலம் யோ யோ ஹனி சிங் மறுத்து தெரிவித்தார்.



Click it and Unblock the Notifications
