Latest Updates
-
1 சௌ சௌ காயும், 5 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
நோட்டா பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்கள்!
நோட்டா என்பது வேட்பாளர்கள் யாரையும் வாக்காளர்களுக்கு பிடிக்கவில்லை என்பதை தெரிவிக்க பயன்படும் வாய்ப்பாகும். இந்த தேர்வை வாக்கு பாட்டிலில் சேர்க்க வேண்டி சுப்ரீம் கோர்ட்டிடம் கடந்த 2009-ம் ஆண்டு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி கடந்த 2013-ம் ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த நோட்டா வசதி தமிழகத்தில் முதன் முறையாக ஏற்காடு இடைத்தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டது. நோட்டா பொத்தான் இளஞ்சிவப்பு நிறத்தில் வேட்பாளர் பட்டியலில் கடைசி இடத்தில் இடம்பெற்றிருக்கும்....

நோட்டா என்றால் என்ன?
சுப்ரீம்கோர்ட் 2013 செப்டம்பர்-27 தேதி வாக்காளர்களுக்கு மேலுள்ள வேட்பாளர்கள் யாரையும் பிடிக்கவில்லை என்பதை தெரிவிக்க நோட்டாவை (NOTA - None Of The Above) தேர்வு செய்ய வாக்காளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென கூறி. வாக்களிக்கும் தாள் மற்றும் இயந்திரத்திலும் நோட்டாவை சேர்க்க உத்தரவிட்டது.

நோட்டா அளிப்பது எப்படி?
ஓட்டளிக்கும் இயந்திரத்தில் வேட்பாளர்கள் பட்டியலின் கடைசியில் வாக்கு சீட்டு மேல் "X" இட்டுள்ளது போல ஓர் சின்னம் இருக்கும். அதை அழுத்த வேண்டும். இந்த ஓட்டை தேர்வு செய்ய தேர்தல் அதிகாரிகளிடம் நீங்கள் ஒப்புதல் வாங்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

முதன் முதலில் எப்போது நோட்டா அமலாக்கம் ஆனது?
சட்டசபை தேர்தலில் தான் முதன் முதலில் நோட்டா சேர்க்கப்பட்டது. முதலில் இதன் எண்ணிக்கை குறைவாக தான் பதிவானது.
சத்தீஸ்கர்-ல் 3.56 லட்சம்
டெல்லியில் 50,000
மத்திய பிரதேசத்தில் 5.9 லட்சம் மற்றும்
ராஜஸ்தான்-ல் 5.67 லட்சம் நோட்டா வாக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

49-O
எந்த வேட்பாளர்களையும் தங்களுக்கு பிடிக்கவில்லை என தெரிவிக்க நோட்டாவிற்கு முன்னர் 49-O என்ற வாய்ப்பு இருந்தது. இந்த வாக்கை அளிக்க வாக்காளர்கள் தனியாக ஓர் ஓட்டுப் பெட்டியில் வாக்களிக்கும் முறையும் இருந்தது.

49-O
தேர்தல் விதிகள், 1961 நடத்தை பிரிவு 49 (ஓ) கீழ், படிவம் 17 A படி எந்த ஒரு வாக்காளரும் தங்களது அதிருப்தியை தெரிவிக்க 49-O பயன்பாட்டில் இருந்தது. இதில் தேர்தல் அதிகாரி கையொப்பம் இடுவார்.

நோட்டாவின் வித்தியாசம் என்ன?
ஓர் சீனியர் தேர்தல் கமிஷன் அதிகாரி, "நோட்டா வெறும் கணக்குக் கொள்வதற்கு மட்டுமே பயன்படும். அதிகளவில் நோட்டா பதிவானாலும் அதற்கு அடுத்து எந்த வேட்பாளர் அதிக ஓட்டுகள் பெற்றுள்ளாரோ அவர் தான் வெற்றியாளர் என அறிவிக்கப்படும் என" கூறியுள்ளார்.

நோட்டாவிற்கு ஏன் மதிப்பில்லை?
நோட்டா வாக்காளர்களின் கருத்தையும், வேட்பாளர்களின் மதிப்பையும் அறிந்துக் கொள்ளவே பயன்படும். இதை வைத்து கட்சிகள் வேட்பாளரின் தரத்தை அறிந்துக் கொள்ளலாம்.

நோட்டாவிற்கு ஏன் மதிப்பில்லை?
மேலும், இந்திய சட்டப்புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் பேச்சுரிமை மற்றும் கருத்து சுதந்தரத்தின் கீழ், வேட்பாளர்களை பிடிக்கவில்லை எனில், வாக்காளர்கள் அதை வெளிபடுத்த அவர்களுக்கான ஓர் வாய்ப்பாக நோட்டா செயற்படும்.

நோட்டா உள்ள மற்ற நாடுகள்
கொலம்பியா, உக்ரைன், பிரேசில், பங்களாதேஷ், பின்லாந்த், ஸ்பெயின், ஸ்வீடன், பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளில் நோட்டா வாக்களிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications