"என் கருவில் வளர்வது குழந்தை இயேசு; எமினம் தான் என் குழந்தையின் தந்தை" - டீனேஜ் பெண்!

Posted By:
Subscribe to Boldsky

உலகில் பல வினோதமான நபர்கள் அவ்வப்போது கான்ட்ரவர்ஸியான செய்திகளை வெளியிடுவது, உலகை சற்று உலுக்கி பார்ப்பது அவ்வப்போது நடக்கும் சம்பவம் தான்.

ஆனால், என் குழந்தையின் தந்தை பிரபல பாடகர் எமினம், என் கருவில் வளர்வது குழந்தை இயேசு என்று கூறுவது எல்லாம் பார்க்கும் போது இந்த பெண் உலக ஊடகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்ப பார்கிறார் என்ற எண்ணம் தான் அனைவரின் மனத்திலும் தோன்றும்.

ஆனால், இந்த பெண் இப்படி கூறுவதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. இந்த டீனேஜ் பெண்ணை குறித்து அவரது அம்மாவே பல விஷயங்களை வெளிபடுத்தியுள்ளார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹேலி!

ஹேலி!

ஹேலி 19 வயது டீனேஜ் பெண். திடீரென இவரது வயிர் எடை கூடியது போல பெரிதாக ஆரம்பித்தது. வயிறு பகுதி மட்டும் சற்றே உப்பியது போல காட்சியளிக்க ஆரம்பித்தது. இதை அறிந்து இவரிடம் கேள்வி கேட்டால், தான் கருத்தரித்து இருப்பதாகவும். தன் கருவில் வளர்வது குழந்தை இயேசு என்றும் இவர் கூறுகிறார்.

கிறிஸ்டி!

கிறிஸ்டி!

ஆனால், இதை முற்றிலுமாக மறுத்து, ஹேலியின் தாய் கிறிஸ்டி. ஹேலி மன சிதைவு ஏற்பட்டது போல நடந்துக் கொள்ளும் நபர், அடிக்கடி பொய் கூறி திரிகிறார், இவர் கூறுவதை யாரும் நம்ப வேண்டும் என கூறுகிறார். ஹேலி கூறுவதை கிறிஸ்டி மட்டுமல்ல, நண்பர்கள், இவரது சர்ச் உறுபினர்கள் என யாரும் நம்ப தயாராக இல்லை.

எமினம் தான் தந்தை!

எமினம் தான் தந்தை!

சில காலத்திற்கு முன்னர், தான் அம்மா ஆகவிருப்பதாகவும், பிறக்க போகும் தன் குழந்தைக்கு தந்தை பிரபல பாடகர் எமினம் தான் என்றும் பொய் கூறி இருக்கிறார் என கிறிஸ்டி கூறுகிறார்.

ஹேலி கருத்து!

ஹேலி கருத்து!

"என் குடும்பம், என் நண்பர்கள், எனது போதகர்கள் யாரும் தான் கருத்தரித்து இருப்பதை நம்பவில்லை. ஆனால், எனக்கு தெரியும் இது இயேசு தான் என்று. நான் மற்றவர்களை பற்றி கவலைப்பட போவதில்லை. " என ஹேலி கூறுகிறார்.

மீட்பர்!

மீட்பர்!

மேலும், "மருத்துவர்கள் கூறுவதை கூட நான் நம்ப தயாராக இல்லை. நான் என் குழந்தையை பெற்றெடுப்பேன். யாராலும் இதை தடுக்க முடியாது, இவர் என் மீட்பர்" என ஹேலி கூறி வருகிறார்.

டிவி நிகழ்ச்சி!

டிவி நிகழ்ச்சி!

ஹேலி டாக்டர் ஃபில் எனும் நிகழ்ச்சியில் தனக்கு "Paranoid schizophrenia" எனும் பாதிப்பு இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். Paranoid schizophrenia என்பது ஒருவிதமான மன சிதைவு அல்லது கற்பனையை உண்மை என நம்பும் வகையிலான கோளாறு ஆகும்.

ஹேலியின் அன்னை கிறிஸ்டியும், மற்றவர்களிடம், தன் மகள் கூறுவதை ஊக்குவிக்க வேண்டாம். அவளை காப்பாற்ற உதவுங்கள் என மன்றாடி கொட்டுக் கொண்டுள்ளார்.

நிஜமாகவே ஹேலிக்கு என்ன தான் ஆனது, அவர் ஏன் இப்படி பேசுகிறார் என்பதை அடுத்த வரவிருக்கும் டாக்டர் ஃபில் நிகழ்ச்சியில் தான் அறிய முடியும். சில பரிசோதனைகளுக்கு பிறகு முடிவுகள் தெரியவரும் என கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Teenager Claims She’s Pregnant With Baby Jesus

Teenager Claims She’s Pregnant With Baby Jesus
Please Wait while comments are loading...
Subscribe Newsletter