Latest Updates
-
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உலகின் சில விசித்திரமான தன்மை கொண்டுள்ள குழந்தைகள்!
விசிதிரங்களுக்கு குறைவில்லாத நமது உலகில், சில விசித்திரங்கள் ஆச்சரியம், வியப்பை அளித்தாலும், சிலவன மனதிற்கு மிகுதியான வேதனைகளை அளிக்கின்றன.
எக்ஸ் மென் போன்ற படங்களில் நாம் சில விசித்திரமான மனிதர்களை கற்பனையாக பார்த்திருப்போம். ஆனால், நிஜத்திலும் அப்படி பட்டவர்களை பார்ப்பது அரிது எனினும், அந்த வினோதம் வலி மிகுந்ததாக இருப்பது வருத்தத்திற்குரியது.
அதிலும், அவர்கள் சிறு குழந்தைகள் என்பது மிகவும் வேதனையானது. சில அரிய மருத்துவ குறைபாட்டாலும், தீர்வு கண்டறிய முடியாத தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் சிலர் இருக்கிறார்கள்....

கேசிடி ஹாப்பர்!
கேசிடி ஹாப்பர்-க்கு பிறக்கும் போது கண்கள் மற்றும் மூக்கு இருக்கவில்லை. அதிர்ச்சி மற்றும் குழப்பமடைந்த மருத்துவர்கள், செயற்கை முறையில் கண்கள் மற்றும் மூக்கை உண்டாக்கினர். தற்சமயம் இவர் தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு, வேலை செய்து வருகிறார்.

கப்பி வில்லியம்ஸ்!
கப்பி வில்லியம்ஸ்-க்கு வயது அதிகரிப்பதில் கோளாறு. நான்கு வருடங்களுக்கு ஒரு வயது ஏறும் வகையில் தான் இவரது வளர்ச்சி இருந்து வருகிறது. இதனால், இவரது வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நிகராக இவரால் வளரவும் செயல்படவும் முடிவதில்லை. மருத்துவத்தில் இப்படிப்பட்ட கோளாறுகள் ஏற்படுவது மிகவும் அரிதானது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பான் க்சியான்ஹாங்!
பான் க்சியான்ஹாங் குணப்படுத்த முடியாது அரிய சரும பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். இந்த பாதிப்பால் இவரது சருமம் எப்போதும் வறட்சிவும், அரிப்பும் எடுக்கும் தன்மையுடன் தான் இருக்கும். இது மிக வலிமிகுந்த பாதிப்பாகும். இந்த அரிய வகை பாதிப்பை குணப்படுத்த மருத்துவர்கள் பரிசோதனைகள் செய்து வருகின்றனர்.

தீபக் குமார் பஸ்வான்!
இந்தியாவை சேர்ந்த இந்த சிறுவனுக்கு கூடுதலான ஒட்டுண்ணி கை, கால்கள் இருந்தன. பலவகையில் மிகவும் சிரமப்பட்டு வந்த இந்த சிறுவனுக்கு, இவரது 8 வயதில் கூடுதலாக இருந்த கை, கால்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக நீக்கப்பட்டது.

ரிச்சர்ட் சாண்ட்ராக்!
ரிச்சர்ட் சாண்ட்ராக், "லிட்டில் ஹெர்குலஸ்" என்று பிரபலமாக அழைக்கப்படுகிறார். உலகின் வலிமையான சிறுவன் என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவர் தற்போது சினிமாக்களில் ஸ்டான்ட் மேனாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபூ வென்க்யூ!
சாதாரண மனிதர்களோடு ஒப்பிடுகையில் ஃபூ வென்க்யூ-க்கு மூன்று கூடுதல் முதுகெலும்பு அடுக்கு இருக்கின்றன! இதனால் கூடுதல் உயரமாக இருப்பினும், இது வலிமிகுந்தது ஆகும். கூடுதலாக இருக்கும் முதுகெலும்புகளை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ள இவர் தயாராகி வருகிறார்.

லூ ஹோ!
லூ ஹோ தான் உலகின் எடை அதிகமான குழந்தை ஆவார். இவரது எடை 132 பவுண்டுகள் ஆகும். இவரது வயது வெறும் மூன்று தான். தற்சமயம் எடை குறைப்பு சிறப்பு வகுப்புகளில் இவர் பங்கேற்று வருகிறார்.



Click it and Unblock the Notifications
