அம்மாடியோவ்! ஒரு ஐ லவ் யூ-க்கு 13 கோடியா??? இது எங்கப்பு!

Posted By:
Subscribe to Boldsky

அதிகப்படியாக தனது காதலை வெளிப்படுத்த எவ்வளவு செலவு செய்வார்கள், ரோஜா, கிரீட்டிங் கார்ட், கிப்ட் என ஓர் நடுத்தர காதலன் ஐந்து ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை செலவு செய்வான்.

சற்று உயர்தட்டு தரத்தில் வாழ்க்கையை நடத்தும் இளைஞனாக இருந்தால் தங்கம், வைரம் என பல ஆயிரங்களில் இருந்து சில லட்சங்கள் வரை செலவு செய்யலாம்.

ஆனால், ஒரு ஐ லவ் யூ சொல்ல 13 கோடி ரூபாய் என்றால்... சொல்லும் போது சிலருக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால், இது உண்மை. ஆம், ஒரு ஐ லவ் யூ-வுக்கு ஓர் அழகான ப்ரோபோசல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, மிக ஆடம்பரமான முறையில் செட்டப் ஏற்பாடு செய்திருக்கிறது ஒரு வைர நகை உற்பத்தி செய்யும் நிறுவனம்.

அப்படி என்ன தான் 13 கோடிகளுக்கு செய்கிறார்கள் என இனிப் பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைர நகை உற்பத்தியாளர்கள்!

வைர நகை உற்பத்தியாளர்கள்!

ஜேன் சீமோர் தெளிவான நீல வைர மோதிரம் எனும் மோதிரத்தை தயாரித்த உலக வைர நகை உற்பத்தியாளர்கள் தான் இந்த 2 மில்லியன் டாலர் (13 கோடி) டின்னர் ஏற்பாட்டை செய்துள்ளனர்.

இரண்டே பேர்!

இரண்டே பேர்!

தங்கள் காதலை மீண்டும் பரிமாறிக் கொள்ள, மிக விலை உயர்ந்த இந்த வைர மோதிரத்தை அழகுமிகு காதல் இரம்மியமான காட்சியை உண்டாக்கி பரிசளித்து ஆச்சரியமூட்ட இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

வானம், கடல், நிலம்!

வானம், கடல், நிலம்!

வானத்தில் பறந்து, கடலில் மிதந்து, நிலத்தின் நடந்து ஓர் அட்டகாசமான ஏற்பாடு அது. அனைத்தும் முடிந்த பிறகு சிங்கப்பூரின் பிரபல சே'லா வி (Ce' La Vi) எனும் ரெஸ்டாரண்ட்-ல் டின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விலை உயர்ந்த வைர மோதிரத்தை வாங்கிய நபருக்கு.

அப்படி என்ன இருந்தது???

அப்படி என்ன இருந்தது???

இந்த ஆடம்பரமான நிகழ்வு மொத்தம் 8 மணி நேரம் நடந்தது. ஏறத்தாழ 10,000 புது ரோஜாக்கள் கொண்ட அலங்காரம், 18 கோர்ஸ் டின்னர், 44 - 55 வருட பழமையான ஒயின், 2.08 காரட் ஃபேன்சி விவிட் நீல நிற வைர மோதிரம் (இதன் விலை தான் 13 கோடி) போன்றவை இந்த நிகழ்வில் இடம் பெற்றிருந்தன.

சிறப்பம்சங்கள்!

சிறப்பம்சங்கள்!

8 மணிநேர நிகழ்வில் 45 நிமிடங்கள் ஹெலிகாப்டர் பயணத்தின் மூலம் சிங்கப்பூரின் அழகை வட்டமடித்து காண்பித்துள்ளனர். இதை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஓர் உல்லாச பயணம். கடைசியாக சே'லா வி (Ce' La Vi) ரெஸ்டாரண்ட்-ன் டாப் மாடியில் நகரத்தை 360 டிகிரி பார்வையில் பார்க்கும் வண்ணம் 10,000 ரோஜாக்களின் அலங்காரத்திற்கு நடுவே அமர்ந்து பார்க்கும் இரம்மியமான காட்சி!

விவிட் மோதிரத்தின் சிறப்பு!

விவிட் மோதிரத்தின் சிறப்பு!

இந்த 2.08 காரட் விவிட் நீல நிற வைர மோதிரம், 18 காரட் கோல்ட் பிளேட்டட் பிளாட்டினம் மோதிரத்தில் பதிக்கப்பட்டுள்ளது. இந்த மோதிரத்தை சரியாக கட் செய்யவே ஒரு வருடம் எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விலை உயர்ந்த டின்னர்!

விலை உயர்ந்த டின்னர்!

உலகிலேயே இது தான் விலை உயர்ந்த டின்னர் என உலக வைர (World Of Diamonds Groups) உற்பத்தியாளர் நிறுவனத்தின் டைரக்டர் கரன் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

One I Love You Cost Rs 13 Crores

You cant believe this but it is true. Yes, One I Love You Cost Rs 13 Crores, take a look on here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter