உலகில் உள்ள பயங்கரமான சில இடங்கள்!

By Babu

பேய் கதைகள் கேட்பது அனைவருக்குமே பிடிக்கும். அப்படி கேட்ட பேய் கதைகள் அவ்வளவு எளிதில் நம் மனதை விட்டு நீங்காது. ஏன், சில நேரங்களில் தூங்க கூட முடியாது.

இந்தியாவில் உள்ள பயத்தை உண்டாக்கும் சில ஆவி நடமாடும் இடங்கள்!!!

அம்மாதிரி இக்கட்டுரையில் நம்மை பயமுறுத்தும் மோசமான மற்றும் பேய்கள் நிறைந்த சில இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஏனெனில் இந்த இடங்களில் சில கொடூரமான செயல்களும், பேய்களும் இருப்பதாக அங்குள்ளோர் தெரிவித்துள்ளனர்.

ஆழ்கடலில் மூழ்கிய பண்டையக் காலத்து அற்புத நகரங்கள்!!!

இங்கு அப்படி உலகில் உள்ள சில பயங்கரமான இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐலா டி லாஸ் முனேகாஸ்

ஐலா டி லாஸ் முனேகாஸ்

உலகிலேயே பார்த்ததும் பயத்தை உண்டாக்கும் ஒரு தீவு என்றால் அது மெக்ஸிகோ நகரத்திற்கு தெற்கில் உள்ள ஐலா டி லாஸ் முனேகாஸ் தான். ஏனெனில் இந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு மரத்திலும், வீட்டு கதவிலும் பல்வேறு வடிவிலான பொம்மைகள் தொங்கவிடப்பட்டிருப்பதைக் காணலாம். இதைப் பார்க்கும் போதே ஏதோ இங்கு உள்ளது போல் கட்டாயம் தோன்றும். மேலும் இப்பகுதிக்கு அருகில் உள்ளோரிடம் இதைப் பற்றி கேட்டால், இரவில் அச்சத்தைஏற்படுத்தும் வகையில் பயங்கரமாக கூச்சலிடும் சப்தம் கேட்பதாக கூறுகின்றனர்.

Image Courtesy

டெட்மேனின் தீவு

டெட்மேனின் தீவு

கனடாவின் பிரிட்டிஷ் கொலாம்பியாவில் உள்ள வாக்கூவர் துறைமுகத்தில் அமைந்திருப்பது தான் இந்த டென்மேனின் தீவு. இந்த தீவானது 1888 மற்றும் 1892 க்கு இடைப்பட்ட காலத்தில் மயானமாக பயன்படுத்தப்பட்டது. சின்னம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பகுதியில் தான் அடக்கம் செய்யப்பட்டார்கள். பின் கனடாவின் கடற்படையினரால் கையாண்டு, இப்பகுதியில் அவர்களது போலீசார் தங்கி வேலை செய்யும் போது, அங்கு புதைக்கப்பட்டவர்களின் கூச்சல் மற்றும் அவர்களது எலும்புகளின் சப்தம் கேட்பதாக கூறுகின்றனர்.

Image Courtesy

ஓகினாவா தீவு

ஓகினாவா தீவு

ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்திருப்பது தான் ஓகினாவா தீவு. இந்த தீவில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் முழுமையாக கட்டப்படாத நிலையில், அப்பகுதியில் உள்ள கெட்ட சக்தி தடுக்கிறது. இதனால் இப்பகுதியில் நிறைய மர்மமான விஷயங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகின்றன. அதில் ஒன்று, வகுப்பாசிரியை ஒருவர் பள்ளியில் இருந்த சிறுவன் தன்னிடம் இருந்த பொம்மையை திடீரென்று வெளியே தூக்கி எறிந்தான். ஏன் என்று கேட்டால், வெளியே உள்ள சிறுவன் கேட்பதாக கூறினான். ஆனால் வெளியே அப்படி யாரும் இல்லையாம்.

Image Courtesy

அல்காட்ராஸ் தீவு

அல்காட்ராஸ் தீவு

சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவில் அல்காட்ராஸ் தீவு உள்ளது. இந்த தீவில் உலக புகழ்பெற்ற அல்காட்ராஸ் சிறை உள்ளது. இந்த சிறையில் உள்ள அறைகளின் கதவுகள் திடீரென்று திறந்து மூடுமாம். மேலும் இங்கு ஒளிரும் கண்களையுடைய மனிதன் தன் பார்வையால் அங்கு வருவோரின் கழுத்தை நெரிப்பதாக கூறப்படுகிறது.

Image Courtesy

வைய்ட் தீவு

வைய்ட் தீவு

இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்த வைய்ட் தீவு. இதுவும் உலகில் உள்ள அமானுஷ்யம் நிறைந்த இடங்களுள் ஒன்று. இப்பகுதியில் உள்ள ஹோட்டல்கள், மருத்துவமனைகள், வீடுகள், அலுவலகங்கள் என கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் நூற்றுக்கணக்கான ஆவிகள் இருப்பதாக கூறப்படுகிறது. எப்போதும் நம் கண்ணுக்கு தெரியாமல் நம்மை ஒருவர் பின்தொடர்வது போல் இருந்தால் எப்படி இருக்கும்?

Image Courtesy

காரெஜிடார் தீவு

காரெஜிடார் தீவு

இந்த தீவு பிலிப்பைன்ஸில் உள்ள மனிலா விரிகுடாவின் நுழைவாயிலில் அமைந்துள்ளது. இரண்டாம் உல போரின் போது, இந்த தீவு அமெரிக்கர்களால் கைப்பற்றப்பட்டது மற்றம் இந்த தீவில் உள்ள ஏராளமான மக்கள் இவர்களிடம் சிறைப்பட்டிருப்பதற்கு பதிலாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கொண்டனராம். அதுவும் ஒரே நேரத்தில் 3000-த்திற்கும் மேற்பட்டோர் மனிட்டா சுரங்கத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Image Courtesy

 நோர்போக் தீவு

நோர்போக் தீவு

இந்த சிறிய தீவானது பசிபிக் பெருங்கடல் மற்றும் ஆஸ்திரேலியாவின் வெளி பிராந்தியங்களின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. இந்த இடமானது "hell on earth" என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இங்கு கைதிகள் மிகுந்த கொடுமை, கற்பழிப்பு மற்றும் கொலை செய்யப்படுவார்களாம். அதுமட்டுமின்றி இங்கு கைதிகளை நிர்வாணமாக பட்டினியோடு இறக்கவிடுவார்களாம். இம்மாதிரியான இடம் ஆவி இருக்கும் இடத்தை விட கொடுமையானது தான்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion