Latest Updates
-
சனி பகவானின் நட்சத்திரம் செல்லும் செவ்வாய்: செப்டம்பர் இறுதியில் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சொந்த கரன்சி, சொந்த ஏர்போர்ட் கூட இல்லாத உலகின் பணக்கார நாடு - இந்த நாட்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் இருக்காம் -
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா?
இன்றளவும் இந்தியாவில் நடந்தேறிக் கொண்டிருக்கும் 13 கேவலமான நிகழ்வுகள்!
"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்.." என ஒரு பாடல் இருக்கிறது. சற்று இதை மாற்றிக் கொள்வோம். "என்ன ஊழல் இல்லை இந்த திருநாட்டில், உலக எம்.என்.சி கம்பெனிகள் மட்டுமே இயங்கும் நம் நாட்டில்.."
இந்தியா பற்றி பொய்யாக பரப்பப்பட்டு இன்றுவரை உண்மையென நம்பப்படும் 10 விஷயங்கள்!!!
கரியில் இருந்து காற்று வரை ஊழல் செய்தாயிற்று. இனி புதிதாய் ஏதேனும் இயற்கை கனிம பொருள் கண்டறிந்தால் அதில் தான் ஊழல் செய்ய வேண்டும். இளைஞர்களின் அறிவு தட்டிக்கழிக்கப் படுவதால் தான் அவர்கள் வெளிநாடுகளுக்கு படை எடுத்து செல்கின்றனர்.
உலகையே கலக்கிய இந்திய கடத்தல்காரர்கள் பற்றிய திகிலூட்டும் உண்மைகள்!!!
நமது நாட்டில் மற்ற வேலைகளுக்கு பணி ஓய்வு இருப்பது போல அரசியலுக்கும் வந்துவிட்டால், இந்தியாவும் வல்லரசாகும் குறைந்தபட்சம் 2030-லாவது....

காதல் திருமணம்
காதலித்து திருமணம் செய்து கொண்ட கடவுளை காலில் விழுந்து வணங்குவோம். ஆனால், நம் வீட்டில் யாராவது காதலித்தால் கால்களை உடைத்து வீட்டில் உட்கார வைப்போம் என மிரட்டுவோம்.

மாதவிடாய்
இரத்தப் போக்கு ஏற்படும் கடவுளான காமாக்யா தேவி வணங்கும் பண்புடைய நம் நாட்டில் தான், அந்த மூன்று நாட்களில் பெண்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது என்று தடையும் உண்டு. காலங்கள் மாறியும், பாதுகாப்பு உபகரணங்கள் வந்த பிறகும் கூட இந்த தடை நீடிப்பது ஏன்?

ஹீரோ
நாட்டுக்காக உயிர் கொடுத்து காத்த இராணுவ வீரர்களை பற்றி பெருமை அடைவதை விட, தோணி கால்களில் பாதுகாப்பு கவசம் இன்றி இரண்டு பந்துகளுக்கு நின்றதை தான் நாம் பெருமையாக கருதுவோம்.

திரைப்படம்
சமுதயாத்திற்கு நல்லது கூறும்படியான படங்கள் வருவதில்லை என குற்றம் கூறும் நாம், குப்பை படங்களை தான் ஆதரித்து கோடிக்கணக்கான ரூபாய் வருமனாம் அடைய செய்வோம்.

சுத்தம் செய்வோம்
நாட்டை சுத்தம் செய்வோம் என்று ஊர் ஊராக சென்று பிரதமர் திட்டங்கள் பரப்புவார். ஆனால், பொதுவிடங்களில் குப்பை தொட்டிக்கு கூட பூட்டு போட்டு வைக்கும் அவலம் தொடர்கதை. குப்பை தொட்டியிலும் கூட அவ்வளவு திருட்டு நம் நாட்டில்.

உடலுறவு
திருமணமான முதல் நாளே, யார், எவர் என்று தெரியாத நபருடன் உடலுறவுக் கொள்ள, பூ அலங்காரம் செய்து, பால் கொடுத்து அனுப்புவோம். ஆனால், வெளிப்படையாக உடலுறவு பற்றி பேசினால் தேச துரோக குற்றத்தை போல காண்போம்.

எச்சில், சிறுநீர்
எந்த சுவரில் எச்சில் துப்பாதே, குப்பை கொட்டாதே, சிறுநீர் கழிக்காதே, போஸ்டர் ஒட்டாதே என்று வாசகம் எழுதியிருக்கிறதோ அங்கு தான் அனைத்தையும் செய்வோம்.

அவலம்
ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்றவர்கள் கூட தெருவில் வியாபாரம் செய்யும் அவலம் நமது நாட்டில் தான் இருக்கிறது. கிரிக்கெட் தவிர மற்ற எந்த விளையாட்டையும், விளையாட்டாக கூட நாம் ஆதரிப்பது இல்லை.

வேதனை
சிம் கார்டுகள் இலவசம், ஆனால், அரிசி, பருப்பு, உணவு பொருட்கள் விலை அடிக்கடி உயரும். அத்தியாவசிய பொருட்களில் வரி உயர்வும், வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களில் வரியை குறைத்து சலாம் போடுவதும் நமக்கு கை வந்த கலை.

ஊடகம்
23 வருடம் கழித்து உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியை ஊடகம் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு மாதம் முழுக்க கொண்டாடியது. ஆனால், நடந்த அனைத்து உலக கோப்பைகளையும் வென்ற இந்திய கபடி அணியை பற்றி ஒரு நாள் கூட முழுப்பக்க செய்து வராது.

கற்பழிப்பு
கற்பழித்தவன் சில கால சிறை தண்டனைக்கு பிறகு வெளிவந்துவிடுவான். ஆனால், கற்பழிக்கப்பட்ட பெண் தன் வாழ்நாள் முழுவதும் வீட்டிலேயே சிறை கைதியாகி கிடப்பாள்.

அரசு
அனைத்து நாட்டிலும், தனியாரை காட்டிலும் நவீன தொழில்நுட்பத்தில் அரசாங்க மருத்துவம், பள்ளி, கல்லூரிகள் தான் இயங்கும். ஆனால், நம் நாட்டிலும் முற்றிலுமாக தலைகீழ்.

ஆட்சி
மேலாண்மை, சட்ட ஒழுங்கு, மனித கட்டமைப்பு, நகர கட்டமைப்பு, சமூக பராமரிப்பு, சுற்றுசூழல் என அ முதல் ஃ-ன்னா வரை அனைத்தும் கற்று அறிந்த மாவட்ட ஆட்சியர்கள் போதிய அறிவுக் கூர்மை கூட இல்லாத சில அரசியல்வாதிகளுக்கு கீழே வேலை செய்வதும் நமது நாட்டில் தான்.



Click it and Unblock the Notifications
