நிலவை பற்றிய சில நம்ப முடியாத உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

நிலவிற்கு அம்புலி, திங்கள், மதி, சந்திரன் என பல பெயர்கள் உள்ளன. சூரியக் குடும்பத்தில் உள்ள பெரிய துணைக் கோள்களில் நிலாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. வியாழனின் துணைக்கோள் ஐ.ஓ-விற்கு அடுத்த இரண்டாவது பெரிய துணைக் கோள் பூமியின் நிலா தான்.

நிலாவில் கால் பதித்துவிட்டோம் என நாசா கூறுவதும், இல்லை, இல்லை அவர்கள் பொய் கூறுகிறார்கள், அது ஓர் அப்பட்டமாக பரப்பப்பட்ட பொய் நிகழ்வு என ஒரு கூட்டத்தினரும் கூறு வருகிறார்கள். அழகோடு ஒப்பிடப்படும் நிலவு உண்மையில் கருமை நிறம் கொண்டதாகும்.

நிலவின் அழகு மதிமயக்கும் என கவிஞர்கள் பாடுவதுண்டு, ஆனால், நிலவை பற்றிய இந்த தகவல்களும் கூட உங்கள் மதியை மயங்க வைக்கும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீலப் பச்சை

நீலப் பச்சை

நிலாவின் கருமையான பக்கமாக நாம் பார்ப்பது, உண்மையில் நீலப் பச்சை நிறம் ஆகும்.

இண்டர்நெட்

இண்டர்நெட்

நிலாவில் அதிவேகமான இன்டர்நெட்டும் இருக்கிறது. அதன் வேகம் 19 Mbps.

ஆய்வு

ஆய்வு

கடந்த 2013-ம் ஆண்டு அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஆய்வில், அந்நாட்டு மக்களே 7% பேர் நிலாவிற்கு சென்று வந்தது பொய்புரட்டு, நம்ப முயடியாதது என கருத்து தெரிவித்துள்ளனர்.

நீல நிலவு

நீல நிலவு

ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமி நாட்கள் வந்தால், இரண்டாவது பௌர்ணமி, நீல நிலவு (Blue Moon) என்று அழைக்கப்படுகிறது.

நிலவில் கொடிகள்

நிலவில் கொடிகள்

நிலவில் ஏற்றப்பட்ட ஆறு கொடிகளில், ஐந்து கொடிகள் இன்றளவும் நின்றுக் கொண்டிருக்கிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ப்ளுடோ

ப்ளுடோ

நமது நிலவு ப்ளுடோவை விட பெரியதாகும். இது பூமியின் விட்டத்தோடு ஒப்பிடுகையில் கால் மடங்கு அளவுக் கொண்டுள்ளது.

முட்டை

முட்டை

உண்மையில் நிலா வட்டம் அல்ல, முட்டை போன்ற வடிவம் கொண்டுள்ளதாகும்.

ஆறு மாதங்கள்

ஆறு மாதங்கள்

95 கிலோமீட்டர் வேகத்தில் ஓர் காரில் பயணித்தால், நிலவை ஆறு மாதத்திற்குள் சுற்றி வந்துவிடலாம்.

மொபைல்

மொபைல்

நிலவில் முதன் முறை தரையிறங்கிய அப்போலோ 11-னை விட அதிக திறன் கொண்ட மொபைல்களை தான் இப்போது பயன்படுத்தி வருகிறோம்.

அழிக்கப்பட்டன

அழிக்கப்பட்டன

நிலவில் இறங்கிய அப்போலோ 11 படம்பிடித்த காணொளிப்பதிவை தவறுதலாக அழித்து, மறு உபயோகம் செய்துவிட்டனர் என கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Interesting Facts About The Moon

There are lot of lesser known Interesting Facts About The Moon,
Subscribe Newsletter