யாருக்கும் தெரியாத இந்திய நடிகர், நடிகையரின் இரகசிய திறமைகள்!

Posted By:
Subscribe to Boldsky

கமல், விக்ரம், தனுஷ் போன்ற சில நடிகர்கள் பொதுவாகவே, நடிப்பு என்பதை தாண்டி, கவிதை, பாடல் எழுதுதல், பாடுதல், இயக்கம், போன்ற பல திறமை கொண்டுள்ளவர்களாக இருப்பார்கள். இதை தாண்டி, திரை துறை சார்பின்றி வேறு சில திறமைகள் கொண்ட இந்திய நடிகர்களும் பலர் இருக்கிறார்கள்.

இந்திய நடிகர், நடிகைகளின் முக்கோண காதல் கதைகள்!

இந்தியில் தொடங்கி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி நடிகர்கள் மத்தியில் தனி திறமை இருக்க தான் செய்கிறது. அதில் குறிப்பிட்டு கூறும் வண்ணம் சில பிரபலங்கள் மற்றும் அவர்களது திறமைகள் பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கங்கனா

கங்கனா

செஃப் - தேசிய விருது வென்ற கங்கனா நடிப்பில் மட்டுமின்றி, பாஸ்தா, பிட்சா, சைனீஸ் உணவுகள் சமைப்பதிலும் வல்லமை உடையவர்.

சல்மான்கான்

சல்மான்கான்

ஓவியம் - தான் தனிமையில் இருக்கும் போதெல்லாம், ஓவியராக மாறிவிடுகிறார் சல்மான் கான். இவருக்கு இது மன அமைதியை தருகிறதாம். மேலும், தனது ஓவியங்களை விற்று ஃபண்ட்ஸ் சேகரித்து, இயலாதவர்களுக்கு உதவியும் வருகிறார் சல்மான்கான்.

அமீர் கான்

அமீர் கான்

செஸ் - நடிப்பில் துளி அளவு கூட விட்டுக் கொடுக்காமல், மனம் முழுவதுமாக நிறைவடையும் வரை மீண்டும் மீண்டும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற முனைப்பு கொண்டுள்ள அமீர் கான், ஓர் சிறந்த செஸ் விளையாட்டு வீரரும் கூட. இவர் ஒருமுறை விஸ்வநாதன் ஆனந்துடனும் செஸ் விளையாடியுள்ளார்.

ஆக்ஷன் கிங்

ஆக்ஷன் கிங்

கராத்தே - ஆக்ஷன் கிங் அர்ஜுன், ப்ரூஸ்லீ மீது கொண்ட பேரார்வம் காரணத்தினால், சிறுவயதில் இருந்தே கராத்தே கற்றுக் கொண்டார். இவர், ப்ளேக் பெல்ட் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விவேக் ஓபராய்

விவேக் ஓபராய்

கவிதை - ஐஸ்வர்யா ராயை காதலித்து தோல்வியடைந்த விவேக் ஓபராய், நன்றாக கவியெழுதும் திறமை கொண்டவர். ஆனால், இந்த திறமையை இவர் வெளியுலகிற்கு காட்ட மறுக்கிறார். கவிதை எழுதுவது என்பது தனிப்பட்ட வாழ்க்கை என கூறுகிறார் விவேக் ஓபராய்.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

சமையல் - 2.O- வில் ரஜினுக்கு வில்லனாக நடித்து வரும் அக்ஷய் குமார் குமார் சாகசங்கள் செய்வதில் மட்டுமல்ல, ருசியாக சமைப்பதிலும் வல்லவர். மேலும், இவர் நன்கு புகைப்படங்களும் எடுக்க தெரிந்தவர் ஆவார்.

தல அஜித்

தல அஜித்

பற்பல - நடிப்பை தவிர, சமையல், புகைப்படம், ஏரோ மாடலிங் போன்றவற்றிலும் திறமை வாய்ந்தவர் தல அஜித்.

ஃபர்ஹான் அக்தர்

ஃபர்ஹான் அக்தர்

கவிதை - பெரும் திறமை கொண்டுள்ள இந்தி இயக்குனர், நடிகர் , தயாரிப்பாளர் ஃபர்ஹான் அக்தர், நன்கு கவிதை எழுத தெரிந்தவரும் கூட. இவர் பாடல் எழுதி, பாடும் திறமையும் பெற்றுள்ளார்.

ரித்தேஷ் தேஷ்முக்

ரித்தேஷ் தேஷ்முக்

ஆர்கிடெக்ட் - ஜெனிலியாவின் காதல் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் ஆர்கிடெக்ட் படித்தவர். இவர், ஆர்கிடெக்ட் டிஸைன்கள் செய்வதில் திறன் வாய்ந்தவர்.

நடனம்

நடனம்

இது போக ரித்திக், அல்லு அர்ஜுன், சிம்பு, பிரசாந்த் போன்ற பல இந்திய நடிகர்கள் நடனத்தில் சிறப்பு திறமை கொண்டுள்ளவர்கள் ஆவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Hidden Talents Of Indian Celebrities

Hidden Talents Of Indian Celebrities, take a look on here.
Subscribe Newsletter