மொகெஞ்சதாரோ பற்றி பலரும் அறியாத மர்மங்களும், உண்மைகளும்!

மொகெஞ்சதாரோ என்ற பெயரை உச்சரிக்கும் போதே, மனதுக்குள் ஓர் வரலாற்று தடம் ஓட ஆரம்பிக்கும். ஏறத்தாழ 5000 ஆண்டுகள் பழமையான நகரம்.

ஆனால், அப்போதே அவர்கள் கழிவறை வசதியுடனான சுகாதாரமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றனர் என்பது வியக்க வைக்கும் உண்மை.

மேலும், போர், அடிதடி, பாகுபாடு போன்ற பிரிவுகள், பொறாமை அல்லாத ஓர் அமைதியான வாழ்கையை அவர்கள் வாழ்ந்திருக்கலாம் என்றும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: நாகரீக தோற்றத்தின் பிறப்பிடமாக திகழ்ந்த சிந்து சமவெளி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!!

இந்நகரின் உண்மை பெயர் இதுதான? எப்படி அழிந்தது என பல கேள்விகளுக்கு உண்மையான பதில் என்னவென்பது இன்றுவரை மர்மமாக தான் இருந்து வருகிறது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

5000 ஆண்டுகள் பழமையான நகரான மொகெஞ்சதாரோவிற்கு இந்த பெயர் எப்படி வந்தது என்ற ஊர்ஜிதம் செய்யப்பட்ட கூற்றுகள், தகவல்கள் ஏதும் இல்லை. மேலும், மொகெஞ்சதாரோ என்பது இந்த பழமைவாய்ந்த நகரின் உண்மையான பெயரே அல்ல.

உண்மை #2

உண்மை #2

சிந்து சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் திரைப்படங்களில் காண்பிக்கப்படுவது போல இறகுகளால் ஆன தலை அலங்கார பொருட்கள் மற்றும் வண்ணமையான ஆடைகள் உடுத்தி வாழ்ந்தவர்கள் அல்ல. வளையல்கள் போன்ற ஆபரணங்கள் அணிந்து வாழ்ந்தவர்கள். தங்கள் நிர்வாண உடல் பாகங்களை நகை அணிந்து மறைத்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

உண்மை #3

உண்மை #3

ஏலியன் வருகை, அணு கதிர்வீச்சு என பலரும் அழிவிற்கு பலவிதமான காரணங்கள் கூறினும். மொகெஞ்சதாரோ மற்றும் சிந்து சமவெளி நாகரீகம் காலநிலை மாற்றத்தால் அழிந்து போயிருக்கலாம் என கருதப்படுகிறது.

உண்மை #4

உண்மை #4

இந்த பகுதிகளை ராஜா, ராணி என்ற பெயரில் யாரும் ஆளவில்லை என்பது தான் உண்மை. அந்த காலத்தில் மன்னர் ஆட்சி முறை இருக்கவில்லை. மேலும், அந்த காலத்தில் போர் நடந்ததற்கான சுவடுகள் அல்லது ஆயுதங்கள் பயன்படுத்தியதற்கான தடயங்கள் ஏதும் இல்லை. அன்று வாழ்ந்தவர்கள் அமைதியான வாழ்க்கையை தான் வாழ்ந்திருக்க கூடும்.

உண்மை #5

உண்மை #5

5000 வருடங்களுக்கு முன்பே மொகெஞ்சதாரோவில் பொது குளியல் இடம், குளியல் அறை என மிகவும் சுகாதாரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர்.

உண்மை #6

உண்மை #6

சிந்து சமவெளி நாகரிகம் மற்றும் மெசபட்டோமியா நாகரீகமும் இடையே வணிக பரிமாற்றங்கள் நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

உண்மை #7

உண்மை #7

மேலும், மொகஞ்சதாரோவில் வாழ்ந்த மக்கள் போக்குவரத்துக்கு மாட்டு வண்டிகளை தான் பயன்படுத்தியுள்ளனர், குதிரை வண்டியல்ல எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

உண்மை #8

உண்மை #8

தற்போது மொகெஞ்சதாரோ பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மெல்ல, மெல்ல அழிந்து வரும் இந்த இடத்தை. தொழில்நுட்ப வசதிகளை கொண்டு பாதுகாக்க முனைந்து வருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion