Latest Updates
-
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்!
முதலாம் உலகப் போரோடு புதைந்த போன தகவல்கள்!
முதல் உலகப்போர், உலகம் தழுவிய அளவில் இடம்பெற்றது. எனினும் இப்போர் பெரும்பாலும் ஐரோப்பாவில் தான் நடைபெற்றது. இப்போரில் நட்பு நாடுகள் என்று போற்றப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன.
உலகப் போரின் போது வழங்கப்பட்ட சில கோரமான தண்டனைகள் - திடுக் நடுக் தகவல்கள்!!!
முன்னெப்பொழுதும் இல்லாத அளவு பெரிய போராக முதலாம் உலகப்போர் இருந்தது. பெருமளவில் சண்டையில் ஈடுபட்டிருந்ததோடு மட்டுமில்லாமல் பெரும் எண்ணிக்கையில் உயிர் இழப்புகளும் ஏற்பட்டன. 60 மில்லியன் ஐரோப்பியர்களை உள்ளடக்கிய சுமார் 70 மில்லியன் போர்வீரர்கள் இப்போரில் சண்டையில் ஈடுபட்டிருந்தனர்.

இறப்பு
முதலாம் உலகப் போரில் போராளிகளுக்கு இணையாக, சாமானிய மக்களும் இலட்சக்கணக்கில் உயிரிழந்தனர். ஏறத்தாழ 90 லட்சம் போராளிகளும்,
70 லட்சம் சாமானிய மக்களும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பானிஷ் ஃப்ளு
முதலாம் உலகப் போரில் இறந்த போராளிகளில் மூன்றில் ஒரு பங்கு வீரர்கள் ஸ்பெயின்-ல் பரவிய மர்ம ஃப்ளு காரணமாக உயிரிழந்தனர் என்றும் கூறப்படுகிறது.

கொடுமையான சம்பவம்
உலகில் நடந்த மிகப்பெரிய அளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில். முதலாம் உலகப் போர் ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளது.

முடிவு
முதலாம் உலகப்போர் 1918-ம் ஆண்டு 11 மாதத்தின் 11வது நாளின் 11 மணிக்கு முடிவுப் பெற்றது.

அமெரிக்கா
முதலாம் உலகப் போர் தான் அமெரிக்காவின் இராணுவ வலிமை உலகிலேயே பெரியது என நிலைநாட்டியது.

வீரரின் அறை
முதலாம் உலகப் போரில் சண்டையிட்ட பிரெஞ்சு வீரரின் அறை ஒன்று 1918-ம் ஆண்டில் இருந்து இன்று வரை யாராலும் தீண்டப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

வீட்டு புறா
முதலாம் உலகப்போரின் போது ஓர் வீட்டுப் புறா செய்தி ஒன்றை கொண்டு சேர்த்து, 194 பேரின் உயிரை காத்தது. செய்தியை கொண்டுவரும் வழியில், அது அதன் ஒரு காலை இழந்தும் கூட சரியான நேரத்தில் செய்தியை கொண்டு சேர்த்து அவர்களின் உயிரை காத்தது.

உறக்கமற்ற நபர்
முதலாம் உலகப் போரின் போது ஹங்கேரியன் நபர் ஒருவர் காதில் அடிப்பட்டு, வாழ்நாள் முழுக்க உறங்க முடியாத நிலைக்கு சென்றார். இறக்கும் வரை இவர் நிலையான உறக்கமற்று தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் பற்றாக்குறை
முதலாம் உலகப்போருக்கு பிறகு ஜெர்மனியில் ஆண்களுக்கு பற்றாக்குறை உண்டானது. அதாவது, ஜெர்மனியில் மூன்றில் ஒரு பெண்ணுக்கு தான் கணவன் கிடைக்கும் என்ற அளவில் ஆண்கள் பற்றாக்குறை உண்டானது.

குடியுரிமை
அமெரிக்காவின் குடியுரிமை இல்லாத 13000 பேர் அமெரிக்காவிற்காக முதலாம் உலகப்போரில் சண்டையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர நாடுகள்
முதலாம் உலகப்போருக்கு பிறகு, பின்லாந்து, எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா, மற்றும் போலந்து போன்ற நாடுகள் சுதந்திர நாடுகளாக மலர்ந்தன.

குழந்தையும்
முதலாம் உலகப்போரில் எட்டு வயது சிறுவன் போருக்கு சென்று சண்டையிட்டான் என்பது வியக்கவைக்கும் உண்மை.

தூதுவன்
முதலாம் உலகப்போரில் நாய்கள் செய்தி கொண்டு செல்லும் தூதுவனாக பயன்படுத்தப்பட்டது.



Click it and Unblock the Notifications
