Latest Updates
-
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!
தூக்கத்தில் விந்து வெளியேறுவது குறித்து உங்களுக்குத் தெரியாத சில உண்மைகள்!
ஆண்களுக்கு தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென்று அவர்களை அறியாமலேயே விந்து வெளியேறும். இப்படி விந்து வெளியேறுவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று கேட்டால், எப்போதும் உடலுறவு குறித்த எண்ணத்துடன் இருப்பது என்று சொல்வார்கள்.
ஆண்களே! அடிக்கடி தூக்கத்தில் தானாக விந்து வெளியேறுகிறதா? அதை சரிசெய்ய இதோ சில வழிகள்!
ஆனால் உண்மையில் அதற்கும் உடலுறவு பற்றி எண்ணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது ஒரு அசாதாரண நிகழ்வா? ஆரோக்கியமற்றதா? என்று பலருக்கும் ஓர் சந்தேகம் இருக்கும். ஆனால் இது சாதாரணம் தான். பெண்களுக்கும் இந்நிகழ்வு ஏற்படுமா என்ற கேள்வி சில ஆண்களுக்கு எழும். ஆம், ஆனால் அது அரிதாகவே.
சுய இன்பம்.. வெறும் சொர்க்கம் மட்டுமல்ல. ஆரோக்கியமும் கூட..
சரி, இப்போது தூக்கத்தில் விந்து வெளியேறுவது குறித்த சில உண்மைகளைப் பற்றி பார்ப்போம் வாருங்கள்.

உண்மை #1
தூக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது அனைவருக்குமே நிகழும் என்று கூற முடியாது. சிலர் இந்நிகழ்வை சந்தித்திருக்காமல் கூட இருக்கலாம். மேலும் உடல்நல நிபுணர்கள், இந்நிகழ்வு ஓர் சாதாரணமான ஒன்று எனவும், இது நிகழ்ந்தால் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறுகின்றனர்.

உண்மை #2
ஆண்கள் பருவமடையும் போது தான் இனப்பெருக்க மண்டலத்தில் விந்தணு உற்பத்தி செய்யப்படும். எனவே ஆண்கள் பருமடைந்த ஆரம்ப காலத்தில் இந்நிகழ்வை அடிக்கடி சந்திக்கக்கூடும்.

உண்மை #3
தூக்கத்தில் விந்து வெளியேறுவதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. எனவே இதனைத் தடுப்பதற்கான வழிகளைத் தேடி முயற்சிக்க வேண்டாம். சொல்லப்போனால் இதுவும் ஓர் ஆரோக்கியமான நிகழ்வு தான்.

உண்மை #4
தூங்கும் நிலையும் தூக்கத்தில் விந்து வெளியேறுவதற்கு காரணமாகும். அதுவும் குப்புறப் படுக்கும் போது, ஆண்குறி படுக்கையுடன் உராய்ந்து விந்துவை வெளியேறச் செய்கிறது.

உண்மை #5
சுயஇன்பம் காண்பது இதற்கு ஓர் நிவாரணியாக இருக்குமென சில ஆதாரங்கள் கூறுகின்றன. விந்துப்பை நிரம்பி இருப்பதால் தான் தூக்கத்தில் விந்தது வெளியேற்றப்படுகிறது. ஆனால் சுயஇன்பம் அனுபவிப்பதால் இப்பிரச்சனை இருக்காது.

உண்மை #6
சர்வே ஒன்றில் 39 சதவீத பெண்கள் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்நிலையை சந்தித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

உண்மை #7
உடலில் வெப்பம் அதிகரித்தாலோ அல்லது தூக்கமின்மையால் அவஸ்தைப்பட்டாலோ, அவர்களுக்கு தூக்கத்தில் விந்து தானாக வெளியேறும். வேண்டுமானால் கவனித்துப் பாருங்கள்.

உண்மை #8
80 சதவீத ஆண்கள் தங்களின் வாழ்நாளில் குறைந்தது ஒருமுறையாவது தூக்கத்தில் விந்து வெளியேறும் நிகழ்வை சந்தித்திருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.



Click it and Unblock the Notifications
