Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
மனிதர்களை மாயமாக மறையச் செய்யும் பயங்கரத் தீவு பற்றி தெரியுமா?
பார்ப்பதற்கு மிகவும் அழகாக கண்களைக் கவரும் வண்ணம் கென்யாவில் ஓர் அற்புதமான ஏரி உள்ளது. அது தான் ருடால்ப் ஏரி. இந்த ஏரியைச் சுற்றி சிறு சிறு தீவுகள் மற்றும் பழமை மாறாத பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.
உலகின் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகள்....
இந்த தீவுகளில் ஒன்று தான் என்வைட்டினெட் தீவு. இதன் உண்மையான அர்த்தம் 'திரும்ப வராது' என்பதாகும். இந்த தீவு மிகவும் மர்மம் நிறைந்த ஒன்று. அது என்னவெனில், இந்த தீவுக்கு சென்ற யாரும் திரும்பி வந்ததில்லை என்பது தான்.
இந்தியாவில் அவிழ்க்க முடியாத 7 மர்ம முடிச்சுகள்!!!
இந்த என்வைட்டினெட் தீவு அறிவியல் ஆராய்ச்சிகளுக்கே சவால் விடும் வகையில் உள்ளது. இப்போது இந்த மர்மத் தீவு குறித்து காண்போம்.

என்வைட்டினெட் தீவு
1900-களில் என்வைட்டினெட் தீவில் மக்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தார்களாம். அங்குள்ள மக்கள் மீன் பிடிப்பது, வேட்டையாடுவதை தங்கள் தொழிலாக கொண்டதாக அருகில் இருக்கும் தீவைச் சேர்ந்த மக்கள் கூறுகின்றனர்.

என்வைட்டினெட் தீவு
மேலும் என்வைட்டினெட் தீவு மக்கள் வியாபாரத்திற்காக அடிக்கடி அருகில் உள்ள தீவுகளுக்கு வருவார்களாம். ஒரு கட்டத்தில் அங்கிருந்து வருவோரின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்ததாம். பின் அந்த தீவைச் சேர்ந்தவர்கள் எவருமே வரவில்லையாம்.

ஏன்?
திடீரென்று என்வைட்டினெட் தீவைச் சேர்ந்த மக்கள் ஏன் வரவில்லை என்று சந்தேகம் கொண்டு, அத்தீவிற்கு ஒருசிலரை அனுப்பி என்னவென்று பார்க்க அனுப்பினராம். ஆனால் அப்படி சென்ற யாரும் திரும்ப வரவில்லையாம்.

நில ஆய்வாளர் விவியன் ஃபுக்ஸ்
1935 ஆம் ஆண்டு ஆங்கிலேயே நில ஆய்வாளர் விவியன் ஃபுக்ஸ், ருடால்ப் ஏரியை ஆராய்ந்து கொண்டிருந்த போது, இந்த தீவு குறித்து கேள்விப்பட்டார். பின் இந்த தீவு குறித்து ஆய்வை மேற்கொண்டார். அப்போது அவருடன் இரண்டு இளம் ஆய்வாளர்களான மார்டின் ஷெப்லின் மற்றும் பில் டேசன் ஆகியோரும் வந்திருந்தனர்.

மர்மமான இளம் ஆய்வாளர்கள்
இந்த தீவுக்குள் அந்த இரண்டு இளம் ஆய்வாளர்களும் சென்றனர். 15 நாட்கள் ஆகிய நிலையிலும், சென்றவர்கள் திரும்பிய பாடில்லை. மேலும் எந்த ஒரு தகவலும் தெரிந்தபாடில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஆய்வாளர் விவியன் தொலைவில் இருந்தே ஆய்வு மேற்கொண்டார்.

ஹெலிகாப்டர் உதவி
விவியன் என்வைட்டினெட் தீவை ஹெலிகாப்டரில் ஏறி சுற்றிப் பார்த்தார். அப்போது அத்தீவில் ஆள் நடமாட்டமே இல்லை. எரிந்து போன குடிசைகளும், அழுகிய மீன்களும் தான் சிதறிக் கிடந்தன.

அருகில் உள்ள தீவில் விசாரணை
அருகில் உள்ள தீவில் என்வைட்டினெட் தீவைப் பற்றி கேட்கும் போது, அந்த தீவில் பிரமாண்ட ஒளி ஒன்று வரும் என்றும், அந்த ஒளி யார் மீது பட்டாலும், அவர்கள் மாயமாகிவிடுவதாக கூறினர். இந்த ஒளி எப்படி வருகிறது? அப்படி வந்தால் அது மனிதர்களை எரித்துவிடுகிறதா? அப்படி எரித்தாலும் எலும்புகள் மிஞ்சியிருக்க வேண்டுமே என்று தன் கேள்விக்கு விடை தெரியாமல் உள்ளார் விவியன்.

வேற்றுகிரக வாசிகளின் வேலையோ?
இந்த தீவிற்கு வேற்று கிரக வாசிகளுடன் தொடர்ப்பிருக்குமோ என்ற கோணத்திலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் இன்னும் இந்த தீவு மர்ம முடிச்சுக்கள் நிறைந்த தீவாகவே உள்ளது.



Click it and Unblock the Notifications
