Latest Updates
-
வாஸ்துப்படி, நைட் தூங்கும் முன் மறக்காம இந்த 3 விஷயங்களை செய்யுங்க.. செல்வம் பெருகும்! -
தமிழ் புத்தாண்டு நாளில் சுக்கிரனால் உருவாகும் ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பணம் பெருகும், தொழில் வளரும்! -
வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப நடிகை வைஷ்ணவியின் ஃபேஸ் பேக்கை போடுங்க! -
மணமணக்கும் கல்யாண வீட்டு ரசம் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.! -
பலரும் அறியாத இந்திய மசாலா பொருட்களும், அவற்றின் ஆரோக்கிய நன்மைகளும்.! -
அட்சய திருதியை நாளில் உருவாகும் அட்சய யோகம்: குபேரன் அருளால் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
கோடை வெயிலுக்கு ஏற்ற சுரைக்காய் சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 09 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றியாக மாறுமாம் -
சுக்கிரன்-சூரியன் உருவாக்கும் சுக்ராதித்ய யோகத்தால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
வெயிலை சமாளிக்க உதவும் சுவையான தர்பூசணி தோல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
உங்களுடைய பிறந்த தேதிக்கான அமெரிக்க ராசி என்ன தெரியுமா?
நாம் இதுவரை இந்திய ஜோதிடம் மற்றும் சீன ஜோதிடம் பற்றி கேட்டிருப்போம். ஆனால் அமெரிக்க ஜோதிடம் பற்றி கேள்விப்பட்டதுண்டா? இந்திய, சீன ஜாதகங்களைப் போன்றே, அமெரிக்க ஜாதகமும் ஒருவரைப் பற்றி சரியாக கணித்துக் கூற 5000 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று.
உங்க ராசியை சொல்லுங்க.. நீங்க எந்த பிரச்சனையால் அதிகம் கஷ்டப்படுவீங்கன்னு சொல்றோம்!
அமெரிக்க ஜோதிடம், மீசோ அமெரிக்கன் காலெண்டரைக் கொண்டு மனிதர்களை விலங்குகளுடன் ஆன்மீக ரீதியில் இணைத்துக் கூறுகிறது. சரி, இப்போது உங்களது அமெரிக்க ராசி என்னவென்றும், உங்களின் குணநலன்களைப் பற்றியும் காண்போம். தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் ராசியின் உண்மையான பலம் என்னவென்று தெரியுமா?

நீர்க்கீரி (Otter)
ஜனவரி 20 - பிப்ரவரி 18 தேதிகளுக்குள் பிறந்தவர்களது அமெரிக்க ராசிக்குரிய விலங்கு நீர்க்கீரி.
இவர்கள் பரலவான திறன்களையும், எந்த ஒரு விஷயத்தையும் வித்தியாசமான மற்றும் அசாதாரண வழிகளில் செய்து முடிக்கக்கூடியவர்கள்.

ஓநாய் (Wolf)
பிப்ரவரி 19 - மார்ச் 20 தேதிகளுக்குள் பிறந்தவர்களின் அமெரிக்க ராசிக்குரிய விலங்கு ஓநாய்.
இந்த மிருகம் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியது. அதே சமயம் இது சுதந்திரமாக இருக்க விரும்பும் ஓர் விலங்கும் கூட. எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்களும் ஓநாய் போன்ற குணங்களைத் தான் கொண்டிருப்பார்கள்.

ராஜாளிப்பறவை (Falcon)
மார்ச் 21 - ஏப்ரல் 19 வரையில் பிறந்தவர்கள் ராஜாளிப்பறவையின் குணத்தைக் கொண்டிருப்பார்கள்.
இந்த அமெரிக்க ராசியைக் கொண்டவர்கள் சிறந்த தலைமைத்துவ பண்பைக் கொண்டிருப்பார்கள். இருந்தாலும், இவர்களுக்கு அடிக்கடி ஆலோசனை தேவைப்படும்.
மேலும் இவர்களிடம் ஆணவம், திமிர், கர்வம் அதிகம் இருக்கும். இருப்பினும் இவர்களுக்கு சரியான ஆதரவாக ஒருவர் இருந்தால் பிழைத்துக் கொள்வார்கள்.

நீர்நாய் (Beaver)
ஏப்ரல் 20 - மே 20 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள் நீர்நாய் குணங்களைக் கொண்டவர்களாக இருப்பர்.
இவர்கள் வணிகம் புரிவதில் சிறந்தவர்கள் மற்றும் எந்த ஒரு வேலையையும் விரைவில் பெற்று சீக்கிரம் முடிக்கக்கூடியவர்கள். மேலும் இந்த ராசியை சேர்ந்தவர்கள் கடின உழைப்பாளிகள்.

மான் (Deer)
மே 21 - ஜூன் 20 வரையிலான தினங்களில் பிறந்தவர்கள் மான் குணத்தைக் கொண்டவர்கள்.
இவர்கள் எப்போதும் வெளியே சுற்றிக் கொண்டிருப்பார்கள் மற்றும் நன்கு உரையாடுவார்கள்.

மரங்கொத்தி (Woodpecker)
ஜூன் 21 - ஜூலை 21 வரையிலான தேதிகளில் பிறந்தவர்களது அமெரிக்க ராசி மரங்கொத்தியாகும்.
மரங்கொத்தி மற்ற ராசிகளை விட சாந்தகுணம் கொண்டது மற்றும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டது.
ஆனால் இதன் தாய்மை குணத்தால், ஆதிக்க மனோபாவம் மற்றும் பொறாமை குணம் சற்று அதிகம் இருக்கும். எனவே இத்த தேதிகளில் பிறந்தவர்களின் குணமும் மரங்கொத்தி போன்று தான் இருக்கும்.

சால்மன் (Salmon)
ஜூலை 22 - ஆகஸ்ட் 21 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள் சால்மன் மீனின் குணத்தைக் கொண்டவர்களாக இருப்பர்.
இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் நேர்மறை ஆற்றலை மற்றவர்களுக்கு உட்புகுத்துவார்கள். மேலும் இவர்கள் எந்த ஒரு வேலையையும் ஏற்றுக் கொண்டு முன்வந்து செய்வார்கள்.

கரடி (Bear)
ஆகஸ்ட் 22 - செப்டம்பர் 21 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள் கரடியின் குணத்தைக் கொண்டவர்கள்.
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எந்த ஒரு விஷயங்களையும் நடைமுறை அணுகுமுறையுடன் மேற்கொள்வார்கள்.
மேலும் இவர்கள் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட விஷயங்களில் அதிகமாக சந்தேகப்பட்டாலும், பொறுமைசாலிகள் மற்றும் சொன்னால் புரிந்து கொள்வார்கள்.

அண்டங்காக்கை (Raven)
செப்டம்பர் 22 - அக்டோபர் 22 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள் அண்டங்காக்கையின் குணத்தைக் கொண்டிருப்பதாக அமெரிக்கன் ஜாதகம் கூறுகிறது.
இத்தகையவர்கள் நல்ல ஆற்றல்மிக்கவர்கள் மற்றும் தொழில் முனைவோர். இவர்கள் நம்பிக்கையுள்ளவர்கள் மற்றும் தன்னுடன் இருப்பவர்கள் சந்தோஷமாக இருக்க எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.
இவர்கள் தாங்கள் செய்யும் செயலால் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

பாம்பு (Snake)
அக்டோபர் 23 - நவம்பர் 22 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள் பாம்பு குணத்தைக் கொண்டவர்கள்.
இவர்களின் அரச இயல்பு மற்றும் ஓங்கியிருக்கும் தன்மை சில நேரங்களில் மற்றவர்களை பயமுறுத்தவும் செய்யும். இந்த நாட்களில் பிறந்தவர்கள் நல்ல தலைமைப்பண்பு கொண்டவர்கள் மற்றும் நல்ல தோழர் அல்லது தோழிகளாக இருப்பர்.

ஆந்தை (Owl)
நவம்பர் 23 - டிசம்பர் 21 வரையிலான தினங்களில் பிறந்தவர்கள் ஆந்தை குணம் கொண்டவர்களாக இருப்பர்.
இவர்கள் வெளியே நன்கு சுற்ற விரும்புவார்கள் மற்றும் கூர்மையான கேட்கும் திறன் கொண்டவர்களாக இருப்பர். இந்த தினங்களில் பிறந்தவர்கள், தனது இனிமையான பேச்சால் பலரை கவர்வதோடு, பல நண்பர்களையும் தன்னுடன் சேர்த்துக் கொள்வார்கள்.

வாத்து
டிசம்பர் 22 - ஜனவரி 19 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள் வாத்து குணம் கொண்டவர்கள்.
இவர்கள் எதிலும் விடாமுயற்சி மற்றும் உறுதியுடன் இருப்பார்கள். இந்த தினங்களில் பிறந்தவர்கள் தனது நோக்கத்தில் குறியாக இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications











