தூங்கும் நிலையை வைத்தே சந்தோஷமான தம்பதிகளாக என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

By: Boopathi Lakshmanan
Subscribe to Boldsky

விழித்திருக்கும் போதே விடை தெரியாத கேள்விக்கு தூங்கும் போது விடை கிடைத்து விடுமா என்று யோசிக்கிறீர்களா? நமது தூக்கத்திற்கு, நாம் கொண்டுள்ள உறவின் ஆழத்தைக் காட்டும் தன்மை உள்ளதா? சமீபத்தில் உளவியலாளர்கள் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு முடிவின் படி, இது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அது உங்களுடைய ரொமான்டிக் பார்ட்னருடன் நீங்கள் கொண்டுள்ள உறவின் தன்மையை நீங்கள் தூங்கும் முறையை வைத்துக் கண்டிறிய முடியும் என்பது தான். உண்மையில், நாம் தூங்கும் போது இருக்கும் ஒவ்வொரு நிலையுமே (Position) ஒவ்வொரு அர்த்தத்தைக் கொடுக்கிறது. இந்த உடல் ரீதியான அறிகுறிகளை வைத்து நம்மால் சில குறிப்பிடத்தக்க முடிவுகளைச் சொல்ல முடியும்.

அடிமனதில் உள்ள ஆழத்தை அறிவதற்கான முயற்சிகள் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வந்திருக்கின்றன. நவீன உளவியலும் கூட நமது உடல்மொழியின் மேல் மிகப்பெரிய அளவில் கவனத்தைத் திருப்பியுள்ளது, இதில் பல்வேறு விஷயங்கள் நாம் முழுமையான கவனத்துடன் செய்யப்படாமல், தானாகவே நடப்பது உண்மை. பேசும் வார்த்தைகள் ஏமாற்றத் துடித்தாலும், நாம் உண்மையிலேயே என்ன நினைக்கிறோம், உணர்கிறோம் மற்றும் நம்புகிறோம் என்பதை உள்மனம் பிரதிபலிக்கும். இதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டாக, ஆய்வாளர்கள் நம்முடைய முக வெளிப்பாடுகளை கவனிக்கத் துவங்கியுள்ளார்கள்; முகம் தான் எதற்கும் இணையில்லாத நம்பிக்கையை கொடுக்கும் பட்டியலாக உள்ளது.

அறிவியலின் கண் கொண்டு பார்க்கும் போது நம்முடைய ஒவ்வொரு அசைவும், குணமும் மற்றும் நிலைகளும் நாம் என்ன நினைக்கிறோம் என்பதை மிகத் துல்லியமாக தெரியப்படுத்தும். அதாவது, மனதின் அடி ஆழத்தில் இருந்து வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத பல்வேறு விஷயங்களையும் கூட, குறிப்பிடக் கூடிய அறிகுறிகளாக இவை உள்ளன. இந்த கட்டுரையில் நாம் தூங்கும் போது இருக்கக் கூடிய சில நிலைகளைப் பற்றியும், அதில் உளவியலாளர்கள் எப்படிப்பட்ட ஆச்சரியமான உண்மைகளைக் கண்டறிந்துள்ளார்கள் என்பதையும் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரிவும் தொடர்பும்

பிரிவும் தொடர்பும்

தம்பதிகள் ஒருவருக்கொருவர் எதிராக திரும்பிய நிலையில் படுத்திருக்கும் போதும், அவர்களுடைய பாதமோ அல்லது கைகளோ தொட்டுக் கொண்டிருந்தால், அவர்களிருவரும் நல்ல உறவில் இருந்தாலும், தனியாகவும் செயல்பட விரும்புகிறார்கள் எனலாம். இணைந்திருத்தல் மற்றும் உடலுக்கான இரக்கம் என்பது தான் பரஸ்பர தொடுதலின் அறிகுறியாகும், எனினும் தங்களுடைய சுதந்திரத்தையும், வாழும் விதத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பதையே இதில் இடைவெளி குறிக்கிறது. எனவே, இந்த நிலையை சுதந்திரமான சூழலில், தம்பதிகள் தங்களுடன் ஒற்றுமையாக இருக்க விரும்பகிறார்கள் என்று சொல்லலாம்.

பரஸ்பர அணைப்பு

பரஸ்பர அணைப்பு

திரைப்படங்களிலும், நாடகங்களிலும் காட்டப்படக் கூடிய கிளாசிக் நிலை தான் இதுவாகும். பெண் தன்னுடைய தலையை ஆண்மகனின் தோளின் மீது வைத்திருப்பாள், ஆண் தன்னுடைய கைகளால் அவளைச் சுற்றி அணைத்திருப்பான். இந்த நிலையின் அர்த்தத்தைச் சொல்வதற்கு உளவியலாளரின் திறமை இருக்க வேண்டுமென்பதில்லை. உண்மையில், இந்த பரஸ்பர கிளாசிக் அணைப்பை ஒரு வித மயக்கம் என்று கருதுவார்கள். ஆண் பாதுகாப்பை வழங்கும் இடத்தில் இருந்து கொண்டு, மென்மையையும், வசதியையும் மற்றும் அன்பையும் கொடுப்பான். பதிலாக பெண் தன்னுடைய வரவேற்கும் நிலையில் ஆணிடம் தஞ்சமடைந்திடுவாள். அவளுக்கு அரவணைப்பும், மனரீதியான ஈர்ப்பும் தேவைப்படுவதால் தான் இதைச் செய்கிறாள். இந்த உணர்வு ரீதியான மற்றும் மென்மையான நிலை உறுதியான உறவையும், பரஸ்பர ஈர்ப்பு மற்றும் இரக்கத்தையும் ஒருவரையொருவர் பராமரித்து வருவதை தெரியப்படுத்துகிறது.

ஸ்பூன்

ஸ்பூன்

ஒரு டேபிள் டிராயருக்குள் இரண்டு ஸ்பூன்களை வைத்திருப்பது போன்ற நிலையில் தம்பதிகள் இருப்பது தான் இந்த நிலையாகும். இது மிகவும் சாதாரணமாக இருக்கும் சூழலாகும். ஒருவருடைய முதுகுப் பக்கம், மற்றொருவர் நெஞ்சை அணைத்து படுத்திருக்கும், இந்த நிலையின் முடிவும் தெரிந்தது தான். வெளியில் இருந்து அணைத்துக் கொண்டிருப்பவர் பாதுகாப்பை வழங்குகிறார். உள்ளே அணைப்பிற்குள் இருப்பவர் எளிதில் மனமுடைந்து போகக் கூடியவராகவும் மற்றும் கவனம் செலுத்தப்பட வேண்டியவராகவும் இருப்பார். இந்த நிலையில் இருவருமே கருவில் உள்ள சிசுவின் நிலையில் இருப்பதால், ஒருவரையொருவர் வசதியாக வைத்திருக்க முயலுவார்கள்.

இன்னும் உலகத்தைக் கண்டறிய வாழ்க்கையை முழுமையாக வாழ வாழ்க்கை இருக்கும் இளம் தம்பதிகளிடம் இந்த நிலையைக் காண முடியும். எதிர்காலத்தைப் பற்றி சற்றே பயம் இருந்தாலும், இருவருமே நிறைய நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் வைத்திருப்பார்கள்.

ஒற்றை இடத் தொடர்பு நிலை

ஒற்றை இடத் தொடர்பு நிலை

துணைவருடைய கால் பாதம் அல்லது கை மட்டுமே தொட்டுக் கொண்டிருக்கும் வகையில் ஒற்றை இடத் தொடர்புடன் தூங்கும் நேரங்களும் தம்பதிகளுக்கிடையில் உண்டு. இந்த உறவுமுறையானது சுதந்திரமாக இருக்கும் எண்ணத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக இருக்கும். கருத்துக்கள், வாழ்க்கை பற்றிய பார்வை மற்றும் முன்னுரிமைகள் ஆகியவை எல்லா நேரங்களிலும் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்காது. எனவே, ஒற்றுமையுடன் இருப்பதல்லாமல், தனித்து செயல்படுவதும் முன்னுரிமை பெற்றிருக்கும்.

உண்மையில், இது தொடர்பு கொள்ளும் இடத்தை மையமாகக் கொண்டே உறுதி செய்யப்டுகிறது. இன்னமும், சரி செய்யப்படாத சச்சரவுகள் எதுவும் இந்த பரஸ்பர புரிதலில் வரவில்லை.

தொடர்பு இல்லாமல் - ஒருவரையொருவர் பின்பக்கமாக படுத்திருத்ததல்

தொடர்பு இல்லாமல் - ஒருவரையொருவர் பின்பக்கமாக படுத்திருத்ததல்

முதல் முறை பார்க்கும் போது, தம்பதிகளிடையேயான மிகவும் மோசமான தூங்கும் நிலையாக இது கருதப்படுகிறது. ஏனெனில், எந்தவிதமாக உடல் தொடர்போ, கண் பார்வை தொடர்போ இல்லை. இப்படிப்பட்ட நிலையை தம்பதிகளிடம் எதிர்பார்ப்பது மிகவும் அபூர்வமே. எனினும், இந்த கருத்தும் தவறானதே. இந்த நிலை துணைவர்களுக்கிடையேயான உணர்வுகளை தடுக்கவில்லை. மாறாக, இருவரும் தங்களுடைய சொந்த உணர்வுகளுக்கான இடத்தை கேட்கிறார்கள் என்பதையே இது குறிப்பிடுகிறது. இது தான் தனித்து செயல்படுவதன் மிகவும் சக்தி வாய்ந்த பிரதிபலிப்பு செய்தியாகும். அவர்களுடைய ஆர்வங்கள், வாழ்க்கையின் அர்த்தம் பற்றிய கருத்துகள் மற்றும் அதுப்போன்ற பிற நிகழ்வுகளில் போன்றவற்றில் ஒன்று போல் இருப்பதில்லை. எனினும், இந்த நிலையிலும் கூட துணைவர்கள் இருவரும் மற்றவரின் தனித்தன்மையை கண்டறிந்திருக்கிறார்கள் என்பதை காட்டும்.

இந்த கண்காணிப்பு விபரங்களைப் படித்த பின்னர், நம்முடைய படுக்கையறையில் ஒரு கேமராவை வைத்து, நாம் எப்படி தூங்குகிறோம் என்று பார்க்கலாமோ என்ற எண்ணம் நம்மில் சிலருக்குத் தோன்றலாம். நாம் தனியாக இருக்கிறோமா அல்லது தம்பதியாக இருக்கிறோமா அல்லது நமக்கு அரவணைப்பும், வசதியும் மற்றும் அன்பும் நம்முடைய துணைவரிடமிருந்து தேவைப்படுகிறதா? இந்த உளவியல் ஆய்வுகள் ஆர்வமூட்டுவதாக இருந்தால், நம்முடைய மனதிலிருந்து கிடைக்கும் அட்வைஸ் தான் நமக்கு கிடைக்கும் முதல் எக்ஸ்பர்ட் அட்வைஸாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Way You Sleep Reveals How Happy You Are as a Couple

Let's take a quick look at some sleeping positions which psychologists observed with some equally surprising results.
Story first published: Saturday, March 7, 2015, 17:39 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter