நடிகர் இளையதளபதி விஜய் பற்றி யாரும் அறிந்திராத சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

By: John
Subscribe to Boldsky

"இளையதளபதி" விஜய், ரஜினிக்கு அடுத்து மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் கொண்டுள்ள தமிழ் திரையுலக நடிகர். பெரியவர்களை விட, குழந்தைகள், மற்றும் இளம் பெண்கள் இடையே "அண்ணா" என்று செல்லமாக தங்கள் வீட்டு பிள்ளை போல அழைக்கப்படும் ஒரே நடிகர்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

சமீப காலமாக இவரது திரைப்படங்கள் அனைத்திலும் அரசியலும், நாட்டு நடப்புகளும் கொண்டவையாக வெளியாகி வருகின்றனர். அதில் "துப்பாக்கி", "கத்தி" போன்றவை வெற்றி படங்களாக அமைந்தன. "சூப்பர்ஸ்டார்" ரஜினிக்கு பிறகு, நடிகர் விஜயின் நசிகர்கள் இவர் அரசியலுக்கு வருவாரா என்று ஆவாலாக எதிர்பார்க்கின்றானர்.

"தல" அஜீத்தை பற்றிய சில வியப்பூட்டும் தகவல்கள்!!!

இவரது அப்பாவின் உதவியினோடு திரையுலகில் நுழைந்தாலும், நிறைய தடைகளும், தோல்விகளையும் தாண்டி தான் விஜய் வெற்றிப்பெற்றார் என்பது மிகையாகாது. இனி, நடிகர் "இளையதளபதி" விஜய் பற்றி யாரும் அறிந்திராத சில சுவாரஸ்ய தகவல்கள் பற்றிக் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்களில் அறுவை சிகிச்சை

கண்களில் அறுவை சிகிச்சை

"போக்கிரி" படத்தின் படப்பிடிப்பின் போது திடீரென ஓர் நாள் விஜய்க்கு கண்களில் அலர்ஜி ஏற்பட்டது. அது, வீக்கம் அடைந்ததனால், உடனடியாக மருத்துவமைனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ரஜினியின் தீவிர ரசிகன்

ரஜினியின் தீவிர ரசிகன்

சிறு வயதில் இருந்தே ரஜினியின் தீவிர ரசிகன் விஜய். சூப்பர்ஸ்டார் என்னும் அவரது இடத்தை தமிழகத்தில் யாராலும் ஈடு செய்ய முடியாது என்று கூறுவார்.

ரசிகர்கள் தற்கொலை

ரசிகர்கள் தற்கொலை

ஓர் நடிகரின் ரசிகர்கள் முதல் நாள், முதல ஷோ அவர் நடித்த படத்தைப் பார்க்க முடியவில்லை என்று தற்கொலை செய்துக் கொண்டாதாக ஓர் பட்டியலை எடுத்து பார்த்தல், அதில் நடிகர் விஜயின் ரசிகர்கள் தான் இருப்பார்கள். "திருப்பாச்சி" முதல் கடைசியாக வெளிவந்த படம் வரை இந்த பட்டியல் நீள்கிறது. இவரது மேல் தீராத காதல் கொண்டிருக்கின்றனர் இவரது ரசிகர்கள்.

பிறந்தநாள் ஸ்பெஷல்

பிறந்தநாள் ஸ்பெஷல்

இவரது பிறந்தநாளன்று, நடிகர் விஜய் அவர் பிறந்த மருத்துவமனைக்கு சென்று அன்று பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். மற்றும் இப்போதெல்லாம், இவரது ரசிகர்களோடு இணைந்து, தனது மக்கள் இயக்கத்தின் சார்பாக நற்பணிகள் செய்து வருகின்றனர்.

முதல் படம் படுதோல்வி

முதல் படம் படுதோல்வி

இவர் நடித்த முதல் படமான "நாளைய தீர்ப்பு" படு தோல்வி அடைந்தது.

பூவே உனக்காக

பூவே உனக்காக

பல தோல்விகளுக்கு பிறகு, "பூவே உனக்காக" படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கான தனி இடத்தை பிடித்தார் நடிகர் விஜய்.

தங்கையின் மீது பாசம்

தங்கையின் மீது பாசம்

நடிகர் விஜய்க்கு ஓர் தங்கை இருந்தார். அவரது பெயர் "வித்யா". இவர் சிறு வயதிலேயே நோய் காரணமாக இறந்துவிட்டார். அவர் மீது மிகவும் பாசமாக இருந்தார் விஜய். இன்று, தமிழகத்தில் இவருக்கு லட்சக்கணக்கான தங்கைகள் இருக்கின்றனர்.

கலைமாமணி

கலைமாமணி

கடந்த 1998ஆம் ஆண்டு, தமிழக அரசு இவருக்கு "கலைமாமணி" விருது வழங்கி கவுரவித்தது.

டாக்டர் பட்டம்

டாக்டர் பட்டம்

டாக்டர்.எம்ஜி,ஆர். பல்கலைகழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளித்தது. திரைத்துறையில் இவரது பங்களிப்பிற்காக இந்த பட்டம் கொடுக்கப்பட்டதாக பல்கலைகழகத்தை சேர்ந்தவர்கள் கூறியிருந்தனர்.

கலைக் குடும்பம்

கலைக் குடும்பம்

இவரது தந்தை இயக்குனர், தாய், கர்நாடகா சங்கீத பாடகி, இவர் நடிகர் என அனைவரும் கலைத் துறையை சேர்ந்தவர்கள்.

ரகசிய போட்டோசூட்

ரகசிய போட்டோசூட்

இவர் கெட்டப்பை மாற்றுவதே இல்லை என்று பலரும் கூறுவார்கள். ஆனால், தனக்கு ஏற்ற பல கெட்டப்புகளில், ரகசியமாக போட்டோசூட் எடுத்து வைத்திருக்கிறாராம் நடிகர் விஜய்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Unknown Facts About Actor Vijay

Do you know about unknown facts about actor vijay? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter