Latest Updates
-
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட 2000 வருடத்திற்கு முந்தைய ஏலியனின் மண்டை ஓடு!!!
ஏலியன், ஆங்கில திரைப்படங்களின் மூலம் நாம் அறிந்த ஓர் வினோத ஜந்து. மனிதர்களாகிய நாம் புவியில் வாழ்வது போல, இந்த பிரபஞ்சத்தில் வேற்று கிரகங்களில் வசிக்கும் வேற்றுக்கிரக வாசிகள், நாம் வாழ்வியலுக்காக வேறு இருப்பிடத்தை தேடுவதை போல அவர்களும் நமது பூமியை போன்ற ஓர் இடத்தை தேடி அலையலாம் என்ற கருத்து நிலவுகிறது.
ஏலியன்கள் வாழும் கிரகங்கள் என்று ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்ட கோள்கள்!!!
கடந்த ஒரு சில நூற்றாண்டுகளாக ஏலியன்கள் நமது பூமிக்கு அவ்வப்போது வருவதாக நாம் சில செய்திகளை கண்டறிந்து வருகிறோம். இதற்கு சான்றென பல புகைப்படங்கள், காணொளிகள் சிலர் காண்பிப்பதும் உண்டு. ஆனால், முதன் முறையாக ரஷ்யாவில் ஓர் அகழ்வாராய்ச்சியின் போது ஏலியன் தோற்றம் உள்ள ஓர் மண்டை ஓட்டை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மற்றும் இது 2000 வருடம் பழமையானது என்றும் கூறப்படுகிறது...
பண்டையக் காலத்தில் கருத்தரிப்பதை தவிர்க்க கடைப்பிடிக்கப்பட்ட சில வினோத முறைகள்!!!

அர்கைம், சென்ட்ரல் ரஷ்யா (Arkaim, central Russia)
சென்ட்ரல் ரஷ்யாவில் உள்ள அர்கைம் என்னும் இடத்தில் தான் ஏலியனின் தோற்றமளிக்கும் நீளமான மண்டை ஓட்டை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த இடத்தை ரஷ்யாவின் ஸ்டோன்ஹெஞ் (Russia's Stonehenge) என்றும் குறிப்பிடுகிறார்கள்.

யூ.எப்.ஓ ஆர்வலர்கள் ஏலியன் என்று கூறினார்
இந்த புகைப்படங்களை முதலில் கண்ட யூ.எப்.ஓ ஆர்வலர்கள், இது முன்னர் பூமிக்கு ஏலியன்கள் வந்து சென்றதற்கான ஓர் சான்று என கூறினர்.

இந்த மண்டை ஓடு ஓர் பெண்ணுடையது
ஆனால், அர்கைம் பகுதிக்கு சென்ற அகழ்வாராய்ச்சியாளர்கள், ஏலியன் தோற்றமளிக்கும் இந்த மண்டை ஓடு 2000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஓர் பெண்ணுடையதாக இருக்க கூடும் என்று கூறுயிருக்கிறார்கள்.

நீளமான மண்டை ஓடு எவ்வாறு சாத்தியம்
முன்னர் இருந்த மலைவாழ் மக்களின் பாரம்பரியத்தின் காரணமாக இவ்வாறான நீளமான மண்டை ஓடு இருந்திருக்கலாம் என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

எஞ்சியுள்ள மண்டை ஓடு
எஞ்சியுள்ள சில மண்டை ஓடு மற்றும் எலும்பு கூடுகளை ஆராய்ச்சி செய்த அகழ்வாராய்ச்சியாளர்கள், இவை 4000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பழங்குடியினரின் மண்டை ஓடு மற்றும் எலும்பு கூடுகளாக இருக்க கூடும் என்று கூறுகிறார்கள்.

உக்ரைன் நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
இந்த மண்டை ஓடுகளை ஆராய்ச்சி செய்த அகழ்வாராய்ச்சியாளர்கள், இவை தற்போதைய உக்ரைன் நாட்டு பகுதியில் வசித்த பழங்குடியினராக இருக்க கூடும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

சர்மதி பழங்குடி (Sarmati Tribe)
ஆராய்ச்சியாளர் மரியா மகுரோவா என்பவர், "இந்த மண்டை ஓடுகள் உக்ரைன், கஜகஸ்தான் மற்றும் தெற்கு ரஷ்யாவில் வாழ்ந்த சர்மதி பழங்குடியை சார்ந்ததாக தான் இருக்கக்கூடும்" என்று கூறுகிறார். மற்றும் அந்த பழங்குடியில் சிறுவயது முதலே தலையை சுற்றி இறுக்கமான கயிறு கட்டும் வழக்கம் இருந்தமையால் தான் இவ்வாறான நீளமான மண்டை ஓடு உருவாகியிருக்கிறது என்றும் அவர் தெளிவான கருத்தினை பகிர்ந்துள்ளார்.

அர்கைம் வரலாறு
அர்கைம் எனும் இந்த இடத்தின் சதுர அடி ஏறத்தாழ 2,20,000 என்று கூறுகிறார்கள். இந்த பகுதி இரண்டு வட்டமான சுவர்களால் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், ஓர் எதிர்பாராத சீரழிவால் முற்றிலும் எரிந்து அழிந்து போன இவ்விடம் இப்போது யாருமில்லாத வெற்றிடமாக தான் இருக்கிறது. இப்பகுதியில் வீதிகளும், வீடுகளும் இருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன.

நட்சத்திரங்களை பயின்றவர்கள்
இவ்விடத்தில் வாழ்ந்த பழங்குடியினர் பண்டைய காலத்தில் நட்சத்திரங்களை இங்கிருந்து பயின்றிருக்கலாம் என்று கூறுகிறார்கள். வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் இதை ஒருமனதாக நம்புகிறார்கள்.
Image Courtesy



Click it and Unblock the Notifications