தமிழ் சினிமாவில் திடீரென்று தற்கொலை செய்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நடிகர், நடிகைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

கொலை செய்து இறப்பவர்களை விட, தற்கொலை செய்து கொண்டு இறப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் உள்ளது. ஒருவரை தற்கொலைக்குத் தூண்டுவது முதலில் மன அழுத்தம் தான். அதுமட்டுமின்றி, வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தெரியாமலும் பலர் தற்கொலைக்கு முடிவு எடுக்கின்றனர்.

இதுவரை தற்கொலைக்கு முயற்சி செய்த பிரபலங்கள்!!!

இப்படி தற்கொலை செய்து கொண்ட நடிகர் நடிகைகள் தமிழில் சிலர் உள்ளனர். அவர்களுள் பலர் மன அழுத்தம் மற்றும் கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் அவர்களுள் சிலரது மரணம் காரணங்கள் தெரியாமல் மர்மமாகவே உள்ளது.

பிரபலங்களின் திகைப்பூட்டும் மரணங்கள்!!!

இங்கு தமிழ் சினிமாவில் தற்கொலை செய்து கொண்ட நடிகர், நடிகைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

தற்கொலை எண்ணங்களை கையாள்வதற்கான சில நடைமுறை வழிகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோபனா

சோபனா

பிரபல நகைச்சுவை நடிகையான சோபனா, தன் உறவில் தோல்வியடைந்ததோடு மற்றும் சிக்கன்குனியா மற்றும் ஆஸ்துமாவால் கஷ்டப்பட்டதால், அவரால் திரைப்படங்களில் தொடந்து நடிக்க முடியாமல் இருந்ததால், மன இறுக்கத்திற்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டார்.

படாபட் ஜெயலட்சுமி

படாபட் ஜெயலட்சுமி

நடிகை படாபட் ஜெயலட்சுமி காதல் தோல்வியால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

திவ்ய பாரதி

திவ்ய பாரதி

நடிகை திவ்ய பாரதி தனது 19 வயதில், கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் மர்மமாகவே உள்ளது.

மோனல்

மோனல்

பிரபல நடிகை சிம்ரனின் சகோதரியான நடிகை மோனல் காதல் தோல்வியால் மனமுடைந்து, வீட்டில் உள்ள சீலிங் பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

பிரதியுஷா

பிரதியுஷா

நடிகை பிரதியுஷா மற்றும் அவரது காதலரான சித்தார்த் ரெட்டி, பொது இடத்தில் காரில் அமர்ந்து கொண்டு ஜூஸில் விஷத்தைக் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அப்படி குடித்ததில் பிரதியுஷா மரணம் அடைந்தால், ஆனால் சித்தார்த் உயிர் பிழைத்தார்.

நடிகர் குணால்

நடிகர் குணால்

நடிகர் குணால் தன் சொந்த வீட்டில் சொத்த பிரச்சனையின் காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகி, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

மயூரி

மயூரி

மலையாள நடிகையான மயூரி தமிழிலும் நடித்துள்ளார். இவர் தன் வாழ்க்கையில் நம்பிக்கையை இழந்துவிட்டதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, தூக்கு மாட்டிக் கொண்டு இறந்தார்.

சில்க் சுமிதா

சில்க் சுமிதா

பிரபல நடிகை சில்க் சுமிதா தன் சொந்த வாழ்க்கை மற்றும் தொழிலில் உள்ள பிரச்சனைகளால், மன இறுக்கத்திற்கு உள்ளாகி, தற்கொலை செய்து கொண்டார்.

குறிப்பு

குறிப்பு

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து நடிகர், நடிகைகளும், மன அழுத்தம், பிரச்சனைகளை சமாளிக்கத் தெரியாமல் இருப்பது மற்றும் காதல் தோல்வி போன்றவற்றால் தான் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இப்படி தற்கொலை செய்து கொண்டதால் இவர்களுக்கு என்ன லாபம் கிட்டியது என்று சொல்லுங்கள் பார்ப்போம். அவர்களின் கோழைத்தனம் தான் தெரிகிறது. எப்போதுமே எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை செய்து கொள்வதன் மூலம் தீர்வு கிடைக்காது. மன தைரியத்துடன் நம் பிரச்சனைகளை எதிர்த்து நின்று பாருங்கள், நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிட்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shocking : Celebrity Suicides in Kollywood: Tamil Nadu

Here we listed some celebrity suicides in kollywood. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter