Just In
- 8 hrs ago
இந்த ஈஸியான ரொமான்டிக் விஷயங்கள் உங்கள் காதல் வாழ்க்கையை சூப்பராக மாற்றுமாம்... என்ஜாய் பண்ணுங்க...!
- 9 hrs ago
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர்
- 10 hrs ago
நீங்க பிறந்த கிழமையை சொல்லுங்க... உங்க குணம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- 11 hrs ago
திரவ டயட் உண்மையில் எடையை குறைக்க உதவுமா? அதை எப்படி செய்யணும் தெரியுமா?
Don't Miss
- News
இரவில் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை... வாகனங்களும் பறிமுதல்... மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை
- Sports
இன்னா அடி அடிக்கறாருய்யா... இந்த சீசன்ல முதல் வீரரா ஷிகர் செஞ்ச சாதனையை பாருங்க...
- Automobiles
வேகமெடுக்கும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை!! தினமும் சுமார் 6,000 ஸ்டீல்பேர்டு முக கவசங்கள் விற்பனை!
- Finance
இந்தியாவில் கச்சா எண்ணெய், எரிவாயு உற்பத்தி சரிவு.. லாக்டவுன் மூலம் கடும் பாதிப்பு..!
- Movies
விவேக் நினைவாக மரங்கள் நட்ட ஆத்மிகா...வைரலாகும் ஃபோட்டோஸ்
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிற்றின்ப கலையை சித்தரித்துக் காட்டும் இந்திய கோயில்கள்!!!
இந்தியாவில் எண்ணற்ற கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு தனித்தன்மையுடன் சிறந்து காணப்பட்டாலும், ஒருசில கோயில்கள் மிகவும் அருமையான சிற்ப கலையின் மூலம் மக்களை கவர்ந்துள்ளது. அதிலும் சிற்றின்ப கலையை சித்தரித்துக் காட்டும் கோயில்கள் இந்தியாவில் நிறைய உள்ளன. இதனால் இக்கோயில்கள் இந்திய மக்களை மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள மக்கள் வந்து காணும் வகையில் அட்டகாசமான சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.
அதிலும் இக்கோயில்களில் உள்ள சிலைகள் அனைத்தும் பாலியல் கலைகளாக சித்தரிக்கப்பட்டிருப்பதோடு, அருமையான வண்ணங்கள் தீட்டப்பட்டு அட்டகாசமாக காணப்படுகிறது. இங்கு அப்படி இந்தியாவில் சிற்றின்ப கலையை சித்தரித்துக் காட்டும் சில இந்திய கோவில்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. முடிந்தால் அந்த கோவில்களுக்கு ஒருமுறை சென்று அதன் அழகை ரசித்து வாருங்கள்.

கஜுராஹோ
மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ கோவிலில் சிற்றின்ப கலையை சித்தரித்துக் காட்டும் பல சிலைகள் உள்ளன. மேலும் இந்த சிற்றின்ப சிற்ப வேலைப்பாடுகள் கோவிலின் உள்ளே இல்லாவிட்டாலும், கோவிலுக்கு வெளியே உள்ளது. இதனைப் பார்க்கும் போது ஒருவர் தன்னுடைய பாலியல் விருப்பங்களைக் கோவிலுக்கு வெளியே விட்டு வர வேண்டும் என உருவப்படுத்திக் காட்டுகிறது. முடிந்தால் இந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள்.

மார்கண்டேஷ்வர் கோயில், மகாராஷ்டிரா
மார்கண்டேஷ்வர் கோயில் மிகவும் பழமையான சிவன் கோயில். இந்த கோயிலில் கடவுளை தொழும் இடத்தைத் தவிர, மற்ற இடங்களில் சிற்றின்ப கலையை சித்தரித்துக் காட்டும் சிலைகள் உள்ளன.

படவலி கோயில், மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசத்தில் உள்ள படவலி கோயிலிலும் அற்புதமான சிற்றின்ப கலைகளை சித்தரித்துக் காட்டும் சிற்பங்கள் உள்ளன. இதனை 'மினி கஜுராஹோ' என்றும் அழைப்பார்கள்.

ரனக்பூர் ஜெயின் கோயில், ராஜஸ்தான்
மார்பிளால் கட்டப்பட்ட ரனக்பூர் ஜெயில் கோயிலில், நிறைய பாலியல் தொடர்பான சிற்பங்கள் வித்தியாசமான முறையில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு சென்று நேரில் பார்த்தால் நீங்களே அசந்து போய்விடுவீர்கள்.
Image Courtesy: flickr

சூரிய கோயில், ஒரிஸா
இந்த கோயிலில் பகவான் சூரியன் ஏழு குதிரைகளுடன் ரதத்தில் செல்வது போன்று இருக்கும். மேலும் இந்த கோயிலைப் பார்த்தால் கஜுராஹோ கோயிலுடன் போட்டிப் போடுமாறு, மிகவும் வித்தியாசமான சிற்ப கலைகளைக் கொண்ட சிற்பங்கள் இருக்கும்.
Image Courtesy: flickr

சூரிய கோயில், குஜராத்
புஷ்பாவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த கோவிலில் கடவுள் சூரியனுக்கானது ஆகும். இந்த கோயிலும் மிகவும் சிறப்பான சுற்றுலாத்தளம். இங்கும் பல்வேறு சிற்றின்ப கலைகளை சித்தரித்துக் காட்டும் சிலைகள் உள்ளன.
Image Courtesy: esamskriti

ஓசியன் கோயில், ராஜஸ்தான்
இது ஒரு தொண்மையான கோயிலாகும். இந்த கோயிலில் சிற்றின்பத்தை வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு சிற்பங்கள் மிகவும் அழகான செதுக்கப்பட்டுள்ளது. மேலும் வித்தியாசமான இடத்தை காண விரும்புபவர்களுக்கு இது மிகவும் சிறப்பான சுற்றுலாத் தளம்.
Image Courtesy: shoesonloose