Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
ருத்ராட்சையின் வகைகளும்... அதன் சிறப்புக்களும்...
ருத்ராட்சை மணிகள் மிகவும் தெய்வீக சக்தியைக் கொண்டது. சிவபெருமானின் கண்ணீரில் இருந்து உருவானது தான் ருத்ராட்சை மரம் என்று நம்பப்படுகிறது. இதனை அணிவதாக இருந்தால் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். அது மனதளவிலும் சரி, உடலளவிலும் சரி. பலருக்கும் ருத்ராட்சையைப் பற்றி முழுமையாகத் தெரியாது.
சிவபெருமானின் நெற்றிக்கண் உருவானது பற்றிய சில கதைகள்!!!
உண்மையான ருத்ராட்சையை அணிந்தால் தான், அதன் முழு பலனையும் பெற முடியும். ஆனால் தற்போது போலி ருத்ராட்சைகள் விற்கப்படுகிறது. எனவே நீங்கள் வாங்கிய ருத்ராட்சை உண்மையானதா என்பதைக் கண்டறிய சில ஆய்வுகள் உள்ளது. அவை நீரில் போட்டால் மூழ்கும், கல்லில் உரசினால் தங்க நிற கோடுகள் தெரியும், செம்பு நாணயங்களுக்கு நடுவே வைத்தால், மின் சுழற்சியின் காரணமாக ருத்ராட்சை சுழலும்.
பலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்!!!
ஒருவர் ருத்ராட்சையை அணிந்தால், அவரைச் சுற்றி ஓர் காந்த மண்டலம் உருவாக்கப்பட்டு, அவரின் மனதில் நேர்மறை எண்ணங்களை அதிகரித்து, உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, உடல் நலத்தையே மேம்படுத்தும். இத்தகைய ருத்ராட்சையில் 21 முகங்கள் வரை உள்ளது. ஆனால் நடைமுறையில் 12 அல்லது 14 முகங்கள் வரை தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது ருத்ராட்சையின் வகைகளும், அதன் சிறப்புக்களையும் காண்போம்.

ஒரு முக ருத்ராட்சை
ஒரு முகம் கொண்ட ருத்ராட்சை மிகவும் சக்தி வாய்ந்தது. இதனை அணிந்தால் மனநிலையை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும். முக்கியமாக இதனை அணிபவரின் மன ஆற்றல் மேம்படும். அதுமட்டுமல்லாமல், இது தலைவலியைக் போக்கி, இதயம் மற்றம் வலது கண் போன்றவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இரண்டு முக ருத்ராட்சை
இந்த வகை ருத்ராட்சை அணிந்தால், அனைவருடனும் ஒற்றுமை உணர்வுடன் இருக்க வேண்டுமென்ற எண்ணம் மேம்படும். மேலும் இது இடது கண், மூளை, சிறுநீரகம் மற்றும் பெருங்குடல் போன்றவற்றிற்கு நல்லது.

மூன்று முக ருத்ராட்சை
இந்த வகை ருத்ராட்சை, சுத்தத்தின் அடையாளம் மற்றும் இது ஒருவரின் மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மை, பயம் மற்றும் மன இறுக்கம் போன்றவற்றில் இருந்து வெளிவர உதவும்.

நான்கு முக ருத்ராட்சை
நான்கு முக ருத்ராட்சை படைப்புத்திறனை அதிகரிக்கும். எனவே இந்த வகை ருத்ராட்சை மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்றோர் அணிவது நல்லது. இதனால் அவர்களின் ஞாபக சக்தி மற்றும் புலனாய்வுத் திறன் அதிகரிக்கும்.

ஐந்து முக ருத்ராட்சை
இந்த வகை ருத்ராட்சை மங்களம் மற்றும் அமைதியின் சின்னமாக உள்ளது. மேலும் ஒருவர் உடல்நலத்துடன் இருக்க வேண்டுமெனில், இந்த வகை ருத்ராட்சை அணிவது நல்லது.

ஆறு முக ருத்ராட்சை
இந்த வகை ருத்ராட்சை கற்றல், ஞானம் மற்றும் அறிவு அதிகரிக்க உதவும்.

ஏழு முக ருத்ராட்சை
நுரையீரல் சம்பந்தமான பல கோளாறுகள் குணமாகவும், வறுமைத்துயர் நீங்கி வளமான வாழ்வை ஒருவர் பெறவும் இந்த ருத்ராட்சை உதவும்.

எட்டு முக ருத்ராட்சை
எட்டு முகம் கொண்ட ருத்ராட்சை வெற்றியின் அடையாளம். எனவே எதிலும் வெற்றி அடைய நினைப்பவர்கள், எட்டு முக ருத்ராட்சையை அணியலாம்.

ஒன்பது முக ருத்ராட்சை
இந்த வகை ருத்ராட்சை ஒருவரின் தைரியம் மற்றும் ஆற்றலை அதிகரிக்கும்.

பத்து முக ருத்ராட்சை
பத்து முக ருத்ராட்சையை அணிந்தால், எதிர்மறை ஆற்றல் நெருங்குவதைத் தடுக்கலாம்.

பதினொன்று முக ருத்ராட்சை
இது ஒருவரின் ஞானம் மற்றும் வெற்றியை அதிகரிப்பதோடு, விபத்து நேராமல் பாதுகாக்கும்.

பன்னிரெண்டு முக ருத்ராட்சை
இந்த வகை ருத்ராட்சையை அரசு வேலைவாய்ப்பை எதிர்நோக்குபவர்கள், பணியில் உயர்வு பெற விரும்புவோர், ஆன்மீக பலம் வேண்டுவோர் அணிவது நல்லது.



Click it and Unblock the Notifications
