மகாபாரத போருக்கு காரணமானவர்கள் யார்யார் என்று தெரியுமா?

By Ashok CR

மகாபாரதம் என்ற காவியத்தை பலரும் ஒரு கட்டுக்கதையாகவோ அல்லது வியாச முனிவரின் கற்பனையின் விளைவாகவோ யாரும் பார்ப்பதில்லை. மாறாக, அதனை ஒரு வரலாறாகவும், அதிலுள்ள கதாப்பாத்திரங்கள் மற்றும் மனிதர்கள் ஒரு காலத்தில் இந்த பூமியில் நடமாடியவர்களாகவும் நம்புகிறார்கள்.

இறப்பில்லாத புராண கதாநாயகன்: மகாபாரதத்தை சேர்ந்த அஸ்வத்தாமா

வரலாறோ இல்லையோ, ஆனால் மிக கொடுமையான போர்களில் ஒன்றாக கருதப்படுவது அதிலுள்ள குருக்ஷேத்ர போராகும். அதற்கு காரணம் அது நீடித்த காலம் மற்றும் அதில் கலந்து கொண்ட வீரர்களின் எண்ணிக்கைகளுக்காக மட்டுமல்ல; அதில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள பல்வேறு நோக்கங்களுமே.

பாண்டவர்கள் மற்றும் திரௌபதி பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்!

குருஷேத்ர போர் மூண்டதற்கான காரணத்திற்கு விடை யாரிடமும் இல்லை. இதில் உள்ளவர்களின் பழி, பேராசை, பொறாமை, இலட்சியம் மற்றும் காம உணர்ச்சிகளின் கலவையே அதற்கு காரணமாக கருதப்படுகிறது. துரியோதனன் போன்ற ஒழுக்கமற்றவர்களின் நடவடிக்கைகளை விட படித்த, மதிப்புமிக்க மனிதர்களான பீஷ்மர் போன்றவர்கள் செயலாற்றாமல் போனதே போருக்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

மகாபாரதம் சொல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பாடங்கள்!!!

இப்போது குருஷேத்ர போர் மூண்டதற்கு காரணமாக இருந்த பல்வேறு காரணங்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாந்தனு மற்றும் சத்யவதி

சாந்தனு மற்றும் சத்யவதி

பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் பிறப்பதற்கு முன்பாகவே போருக்கான விதைகள் தூவப்பட்டு விட்டது. சாந்தனுவின் காமமும், சத்யவதியின் பேராசையும் லட்சியமும் பீஷ்மரை அரியணை ஏற விடாமல் தடுத்தது. சாந்தனுவுக்கு பின் பீஷ்மர் அரியணையில் ஏறியிருந்தால், இந்த போரே நடந்திருக்காது.

பீஷ்மர்

பீஷ்மர்

தான் எடுத்த உறுதிமொழியால் ஹஸ்தினாபுரத்தின் அரியணைக்கு அடிமையானார். அவரின் கடமை உணர்வு மற்றும், அவரின் சகோதரர்கள் மற்றும் குழந்தைகளின் மீதான அன்பாலும், உண்மைக்கும் பொய்க்குமான வித்தியாசத்தை அவர் பல முறை மறந்தார். பார்வை தெரியாத திருதிராஷ்டரை மணந்து கொள்ள காந்தாரியை வற்புறுத்தியதன் மூலம் சகுனியின் வன்மத்தை சம்பாதித்தார். கௌரவர்களை சகுனி வழி தவறி நடத்திய போதும், பகடை சூதாட்டத்தின் போதும், திரௌபதியை அவமானப்படுத்திய போதும் இவர் மௌனமாகவே இருந்தார்.

பீஷ்மர் தன்னுடன் இருந்தால் போரில் வெற்றி நிச்சயம் என்பதில் துரியோதனன் நம்பிக்கையாக இருந்தான். அதனால் போரின் மீது அவனுடைய ஆவலும் அதிகரித்தது. முடிவில், தன் சொந்த உறுதிமொழியை உடைத்து விடுமாறு அவரை மிரட்டியதன் மூலம், ஸ்ரீ கிருஷ்ணர் பீஷ்மரை மயக்கத்தில் இருந்து கலைத்தார். அமைதி என்பது எப்போதுமே நல்லதல்ல என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

திருதிராஷ்டர் மற்றும் காந்தாரி

திருதிராஷ்டர் மற்றும் காந்தாரி

இலட்சியமிக்க கண் பார்வையற்ற அரசன், தன் குழந்தைகள் மீதுள்ள அன்பால் முழுமையாக குருடாக இருந்தார். தன் குழந்தைகள் செய்த அராஜகங்களை அவரால் காண முடியாவிட்டாலும், மோசமான தவறுகளை அவர்கள் செய்து கொண்டிருந்த போது, அவர்களுக்கு துணை நின்றார். காந்தாரியும் கூட எதையும் காணாதவாறு, தன் கண்களைச் சுற்றி துணியை கட்டிக் கொண்டார். தன் அண்ணனான சகுனி தன் பிள்ளைகளை தவறாக வழிநடத்துகிறார் என்பதை அறிந்தும்,அதை தடுக்க அவர் முன் வரவில்லை.

யுதிஷ்டிரர்

யுதிஷ்டிரர்

தர்மராஜனாகவும், நீதிமானாகவும் இவர் கருதப்பட்டாலும் கூட அவரிடம் இருந்த பலவீனம் போருக்கான ஒரு காரணமாக அமைந்தது. பகடை சூதாட்டத்திற்கு அவரால் மறுப்பு தெரிவிக்க முடியவில்லை. தன் சகோதரர்களையும், திரௌபதியையும் அடமானம் வைக்காமலும் கூட அவர் இருந்திருக்கலாம். காலத்தின் தர்மத்திற்கு இணங்க இவை நடந்திருந்தாலும் கூட, இது ஏற்க முடியாத விஷயமாகும். சூதாட்டத்தில் பங்கு பெற அவர் மறுத்திருந்தால் போரை தடுத்திருக்கலாம்.

 திரௌபதி

திரௌபதி

மகாபாரத போர் மூண்டதற்கு முக்கிய நபராக பலராலும் கருதப்படுவது திரௌபதி. இந்திரபிரஸ்தாவில் தன் தந்தையின் கண் தெரியாமையைப் பற்றி திரௌபதி கருத்து தெரிவித்ததால் மிகவும் அவமானமடைந்தான் துரியோதனன். அதனால் திரௌபதியை தண்டிக்க அவன் விரும்பினான். அதன் விளைவாக பல பேர் மத்தியில் அவள் துயில் உரிக்கப்பட்டாள். அவளின் மானத்தை காக்க பாண்டவர்கள் போருக்கு செல்ல வேண்டியதாயிற்று.

சகுனி

சகுனி

மகாபாரதத்தில் நிலைமைகளை மிக சாமர்த்தியமாக கையாளுவதில் மிகப்பெரிய ஆளாக கருதப்படுபவர் இவர். ஆனாலும் கூட கிருஷ்ணருக்கு அடுத்த இடமே இவருக்கு. தன் தங்கையை திருதிராஷ்டருக்கு மிரட்டி வலுகட்டாயமாக கட்டி வைத்ததால், பீஷ்மரின் மீது இவருக்கு கோபம் உண்டு. அதனால் பழி வாங்கவும், ஹஸ்தினாபுரத்தை மொத்தமாக அழித்திடவும் நினைத்தார். தன் லட்சியத்தை நிறைவேற்ற தன் சொந்த தங்கை மகன்களையே பயன்படுத்தினார். போருக்கு பின்னணியாக கருதப்பட்டவர்களில் சாதுர்யமான நுணுக்கவாதியான இவரும் ஒருவர்.

கர்ணன்

கர்ணன்

மகாபாரதத்தில் மற்றொரு மிகப்பெரிய நீதிமானாக விளங்கியவர் கர்ணன். பிறந்த போது தன் தாயால் கை விடப்பட்டு, ஒரு தேரோட்டியின் மகனாக வளர்ந்தவர். எப்போதுமே சமத்துவம், நீதி மற்றும் புகழுக்காக ஏங்கினார். தனக்கு எந்த ஒரு நியாயமும், நீதியும் கிடைக்காமல் இருந்த போது, அவர் பக்கம் நின்றவர் துரியோதனன். அதனால் துரியோதனனுக்கு கடமைப்பட்டவராக விளங்கினார் கர்ணன். துரியோதனனின் நண்பனாக இருந்த போதிலும், துரியோதனன் தீய செயல்களைப் புரிவதை அவர் தடுக்கவில்லை.

அர்ஜுனனை விட தான் சிறந்தவன் என்பதை இவ்வுலகத்திற்கு நிரூபிக்க விரும்பினார் கர்ணன். தன் வாழ்க்கையில் அவருக்கு கிடைக்காத புகழை அடைய துடிதுடித்தார். போரின் மூலமாக தான் அது அவருக்கு கிட்டும். தன் நண்பனுக்கு உதவ மட்டும் அவர் போருக்கு செல்லவில்லை. மாறாக தன் சொந்த நோக்கங்களுக்காகவும் தான்! கர்ணனின் விசுவாசமே போரில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை துரியோதனனுக்கு அளித்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion