கடற்பயணி கொலம்பஸ் பற்றி யாவரும் அறிந்திராத அரிய விஷயங்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

இத்தாலிய நாட்டின் கடற்பயணியும், பல நாடுகளை கண்டுபிடித்தவருமான கொலம்பஸ் ஓர் வணிகரும் காலனித்துவவாதியும் ஆவார். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை (எசுப்பானியா நாட்டுக் கொடியுடன்) வந்தடைந்த முதல் ஐரோப்பியர் என்ற பெருமையை பெற்றார். இவர் இத்தாலியின் செனோவா என்ற குடியரசைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.

எசுப்பானியப் பேரரசின் கத்தோலிக்க பேரரசர்களின் ஆட்சியின் போது கொலம்பஸ் நான்கு முறைகள் கடற்பயணங்களை அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து மேற்கொண்டார். இந்தக் கடற்பயணங்களும் லா எசுப்பானியோலா தீவில் இவர் நிரந்தரக் குடியேற்றம் அமைக்க மேற்கொண்ட முயற்சிகளும் புதிய உலகம் என அழைக்கப்பட்ட அமெரிக்காவில் எசுப்பானிய குடியேற்றத்தைத் துவக்க உதவின என கூறப்படுகிறது.

புதிய வணிக வழிகளைக் கண்டறிந்து குடியேற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற மேற்கத்திய பேரரசின் போக்கிற்கும் மற்றும் ஐரோப்பிய இராச்சியங்களுக்கிடையேயான பொருளாதார நிலை போட்டியில் கிழக்கத்திய இந்தியாவை எட்ட கொலம்பஸ் மேற்கில் பயணித்து உலகைச் சுற்றி வந்து, இந்தியாவை அடைய முன்மொழிந்தார். இதற்கு எசுப்பானிய அரசரின் ஆதரவைப் பெற்ற கொலம்பஸ் 1492ஆம் ஆண்டு மேற்கில் பயணித்து புதிய உலகத்தை கண்டறிந்தார் என்பது உலக வரலாறு.....

இனி, கிறிஸ்டோபர் கொலம்பஸ் கண்டறிந்து கூறிய அரிய விஷயங்கள் குறித்து காணலாம்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உலகம் உருண்டை என கண்டுபிடித்தவர் கொலம்பஸ் இல்லை

உலகம் உருண்டை என கண்டுபிடித்தவர் கொலம்பஸ் இல்லை

உலகம் உருண்டை என கொலம்பஸ் கண்டறியும் முன்னரே ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்து கிரேக்க கணித மேதை பிதாகரஸ் கூறிவிட்டார்.

பெயரிலேயே குழப்பம்

பெயரிலேயே குழப்பம்

கொலம்பஸின் உண்மையான பெயர் இதுவல்ல. ஆங்கிலத்தில் தான் இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டு கூறப்பட்டு வருகிறது உண்மையில் இவரது பெயர் கோலோன் (Cristóbal Colón) என்று கூறப்படுகிறது.

பைத்தியக்காரன் என்று கூறப்பட கொலம்பஸ்

பைத்தியக்காரன் என்று கூறப்பட கொலம்பஸ்

உலகம் தட்டையானது என்று நம்பப்பட்டு வந்த 15நூற்றாண்டில் கொலம்பஸ் உலகம் உருண்டையானது என்று கூறிய போது, இவரை மக்கள் பைத்தியம் என்று கூறி ஏளனம் செய்துள்ளனர்.

கடுமையான கேப்டன்

கடுமையான கேப்டன்

கொலம்பஸ் மிகவும் கடுமையான கேப்டன், தனக்கு கீழ் பணிபுரியும் குழுக்களையும், பணியாட்களையும் மிகவும் கடுமையான முறையில் நடத்தினாராம்.

ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்

ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்

கிறிஸ்துவத்தில் நிறைய ஈடுபாடும் ஆன்மீக நம்பிக்கையும் கொண்டிருந்தவர் கொலம்பஸ். இவர் கண்டறிந்த புதிய நாடுகளில் அறியாமையில் இருந்த மக்களுக்கு கிறிஸ்துவ ஆன்மீகத்தை பற்றி பரப்பினார்.

நிறைய சர்ச் கட்டியுள்ளார்

நிறைய சர்ச் கட்டியுள்ளார்

கிறிஸ்துவ ஆன்மிகம் பற்றி நிறைய பரப்பிய கொலம்பஸ். நிறைய சர்ச்சுகளும் கட்டியுள்ளார். மற்றும் குடியேற்றம் ஆன மக்களுக்கிடையே ஆன்மீகத்தை பற்றி கூறி, நிறைய நன்மைகளும் செய்துள்ளார் கொலம்பஸ்.

கொடூரமான மிருகம்

கொடூரமான மிருகம்

புதிய உலகம் என இவர் கண்டறிந்த அமெரிக்க பகுதியில் இவரது ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. அங்கே வாழ்ந்து வந்த குடிமக்களை இவர் நிறைய துன்புறுத்தியதாகவும். அவர்கள் முன் ஓர் கொடூருமான மிருகம் போன்று நடந்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

கொடுமைகள்

கொடுமைகள்

சித்திரவதை, கொடுமைகள், கொலை, அடிமைத்தனம் என பல கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டதாக வரலாற்று கூற்றுகள் கூறுகின்றன.

செல்வந்தராக இறந்த கொலம்பஸ்

செல்வந்தராக இறந்த கொலம்பஸ்

சிறைக்கு போய் திரும்பிய போதிலும் கூட, தனது நாடான ஸ்பெயினில் இறந்த போது பெரும் செல்வந்தராக தான் இருந்தாராம் கொலம்பஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Interesting Things About Christopher Columbus

Do you know about the interesting things about the christober columbus? read here.
Story first published: Friday, July 24, 2015, 17:15 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter