சொட்டை விழுந்த பின் தலையில் முடி நட்டு வந்த இந்திய பிரபலங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

"நிலம் காஞ்சுருச்சுன்னு விவசாயம் பண்ணாம அப்படியே விட்டுட்டா, எப்படிய்யா முப்போகம் பாக்க முடியும்!!!" ஆண்கள் தங்களது உயிருக்கு இணையாக பேணிக்கும் பொருள், மயிர்!! (ஒரு சின்ன குறிப்பு: மயிர் என்பது தான் தூயத் தமிழ் வார்த்தை). சொட்டை விழுந்ததால், தன்னம்பிக்கை இழந்த நபர்கள் எவ்வளவோ பேர் நம் நாட்டில் இருக்கின்றனர்.

அழகை அதிகரிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொண்ட நடிகர் நடிகைகள்!!!

சாதாரண ஒரு நபருக்கே இப்படி என்றால் பிரபலங்களுக்கு எப்படி இருக்கும் என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள். வெளியில் தலைக் காட்டவே முடியாது. அனைவரும் நமது தலைவர் "சூப்பர் ஸ்டார்" போல சிம்ப்ளிஸிட்டியாக இருப்பார்களா என்ன. இப்படி முடி நாட்டவர்கள் பட்டியலில் பாலிவுட் தா(த்)தா சல்மான் காணும் அடக்கம் என்பது கொசுறு தகவல்.

எப்படி இருந்த இவங்க இப்படி ஆயிட்டாங்க!!

சரி, இனி சைடு கேப்பில் சொட்டையில் முடி நட்டு வந்த பிரபலங்களை பற்றி பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கங்குலி

கங்குலி

நமது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு மேல் மண்டையில் முடி 2000 ஆண்டு முதலே விழ தொடங்கிவிட்டதாம். மொத்தமும் உதிர்வதர்க்குள் உஷாரான கங்குலி, சடாரென்று மருத்துவமனைக்கு விரைந்து தனது கபாலத்தில் முடியை நட்டுக்கொண்டு வந்துவிட்டார்.

சல்மான் கான்

சல்மான் கான்

இவர் தனது தொப்பையை மறைத்து கணினி வரைப்பட தொழிநுட்பத்தைக் கொண்டு சிக்ஸ் பேக் காட்டிய போதே பல சந்தேகங்கள் எழ தொடங்கின. அதில் ஒன்றான சொட்டை பிரச்சனைக்கு முடிவு கண்டுவிட்டார்கள். உதிர்ந்த முடியை எல்லாம் சரியான எண்ணிக்கையில் தனது தலையில் மீண்டும் நட்டு வைத்திருக்கிறார் சல்மான் கான்!!

கோவிந்தா

கோவிந்தா

நம்ம ஊரு நவரச நாயகன் போலவே முக தோற்றம் உடைய கோவிந்தாவிற்கு, அவரை போலவே, தலையில் மைதானம் ஏற்பட்டுவிட்டதாம். தலையும், தலையும் வைத்தார் போல, தனது தலையில் முடிகளை நட்டுக்கொண்டாராம் கோவிந்தா! (கோவிந்தாவிற்கே, கோவிந்தா!! கோவிந்தா'வா!!!)

சஞ்சய் தத்

சஞ்சய் தத்

ஜெயிலுக்கு போய் வந்தால், "என்னடா கோபாலு, மாமியார் வீட்டுக்கு போயிட்டு வந்துட்டியா?" என்பது நம்ம ஊர் கேலி வழக்கம்! ஆனால், உண்மையிலேயே மாமியார் வீட்டுக்கு போய் வருவதை போல ஜெயிலுக்கு போய் வருபவர், இவர் தான். யார் வைத்த சூனியமோ என்னவோ, ஜெயில் தண்ணி சேராமல் முடி மொத்தமும் கொட்டிவிட்டன. பின் என்ன செய்வது, அனைவரையும் போல இவரும், முடியை நட்டுக் கொண்டார்.

ஹர்ஷா போக்லே

ஹர்ஷா போக்லே

கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லேவின் தலையும் கூட ஒரு காலக்கட்டத்தில் கிரிக்கெட் மைதானத்தை போல தான் இருந்தது. ஆனால், இப்போது முப்போகம் விளைந்த விளைநிலம் போல காட்சியளிக்கிறது. அனைத்திற்கும் காரணம், முடி நட்டு வந்த சிகிச்சை தான்.

வீரேந்தர சேவாக்

வீரேந்தர சேவாக்

இவருக்கும் மேல்மாடி முற்றிலுமாக காலியானது குறிப்பிடத்தக்க விஷயம் தான். மற்றவர்களை போல இவரும் முடிகளை நட்டு வந்தார். யார் செய்த சதியோ, இவருக்கு மட்டும் நட்ட முடிகளும் நிலைக்கவில்லை. மீண்டும், மீண்டும், உச்சியில் முடி உதிர்ந்துக் கொண்டே இருக்கின்றது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Indian Celebrities Who Have Had Hair Transplants

Do you know about Indian celebrities who have had their hair transplants? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter