Latest Updates
-
கொளுத்தும் வெயிலால் உங்கள் முடி உடையாமல், கொட்டாமல் இருக்க இந்த எளிய உணவுகளை சாப்பிடுங்க -
வாஸ்து படி இந்த 5 இடங்களில் கடிகாரத்தை மாட்டுவது உங்களை துரதிர்ஷ்டசாலியாக மாற்றுமாம் -
புதன்-சூரியன் உருவாக்கும் புதாதித்ய யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பிரியாணியை விட சூப்பரா இருக்கும் தக்காளி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
150 ஆண்டுக்கு மேல் வாழும் பாகிஸ்தானின் ரகசிய இனக்குழு பெண்கள் - இவர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம் என்ன தெரியுமா? -
கோதுமை ரவா பொங்கலும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குதூகலமான நாளாக இருக்குமாம் -
30 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் சனி-செவ்வாய்: மே 10 வரை இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
குருபகவான் சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
கர்நாடகா பேமஸ் குடைமிளகாய் தக்காளி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
பிரபஞ்சத்தின் அழிவு எவ்வாறாக இருக்கும் - ஆராய்ச்சியாளர்களின் கூற்று!!!
இவ்வுலகில் மட்டுமல்ல, நமது பிரபஞ்சத்தில் தோன்றிய அனைத்து உயிர்களுக்கும், நட்சத்திரங்களுக்கும், கோள்களுக்கும் கூட ஓர் முடிவு அல்லது அழிவு என்பது அதன் தோற்றத்தின் போதே நிச்சயிக்கப்பட்டுவிட்டது.
ஆனால், பல வினோதங்களை கொண்டிருக்கும், நமது வாழ்வியலின் கருவாக இருக்கும் பிரபஞ்சத்திற்கும் அழிவு என்பது இருக்குமா? நமது சூரியக் குடும்பத்தைப் போலவே பல சூரிய குடும்பங்கள் நமது பால் வெளியில் இருக்கின்றன. அது போன்று பல கோடி பால் வெளிகளைக் கொண்டுள்ளது தான் நமது பிரபஞ்சம்.
பிரபஞ்சத்தின் தோன்றுதலை தான், நம்மையும் மிஞ்சிய சக்தி ஏதோ இருக்கிறது என கருதி வருகிறோம். அது தான் கடவுள் என்றும் சிலர் நம்புகின்றனர். ஆனால், அதற்கும் அழிவு இருக்குமா என்பது தான் கேள்வி. ஒருவேளை, நமது பிரபஞ்சத்தைப் போலவே பல பிரபஞ்சங்கள் இருந்தால்? அதை நாம் கண்டறியாமல் இருந்திருந்தால்?
இவ்வாறு பல கேள்விகள் மிக நீளமாக எழுந்துக் கொண்டே தான் இருக்கின்றது பிரபஞ்சத்தைப் பற்றி பேச்சை தொடங்கும் போதெல்லாம். இனி, நமது ஆராய்ச்சியாளர்கள், நமது பிரபஞ்சத்தின் அழிவு எவ்வாறு இருக்கும் என்று கூறுகிறார்கள் என்று பார்க்கலாம்...

பிரபஞ்ச அழிவுகளை குறித்த சில கூற்றுகள்
இதுவரை சில அறிவியல் அறிஞர்கள் பிரபஞ்சத்தின் அழிவு எவ்வாறு அமையலாம் என்று சில கூற்றுகளும், தியரியையும் கூறியுள்ளனர். அவை, பெரிய உறைவு (big freeze); பெரிய உடைவு (big crunch); பெரிய உதறல் (big rip); வெற்றிட அதீத ஸ்திரத்தன்மை (vacum metastability); வெப்ப இறப்பு (heat death)

ஐன்ஸ்டீன் போன்ற அறிஞர்களின் கருத்து
முதலில் ஐன்ஸ்டீன் போன்ற அறிஞர்கள், பிரபஞ்சத்தில் ஓர் பெரிய கடுமையான குளிர் நிலவும், அந்த குளிரினால் பிரபஞ்சம் மொத்தமும் உறைந்துபோய் ஓர் அழிவை சந்திக்கும் என்று கூறினார். பெரும்பாலானோர் இதை நம்பவும் செய்தனர். இதை தான் பெரிய உறைவு என்று கூறி வந்தனர்.

நீண்ட காலம் ஆகும்
ஆனால், அவர்கள் கூறிய அந்த பெரிய உறைவு என்பது நீண்ட காலம் கழித்தே நடக்க வாய்ப்புகள் இருப்பதாகக் கூறினார். அதாவது 6-10 பில்லியன் ஆண்டுகள் கழித்து அவ்வாறான ஓர் நிகழ்வு ஏற்படலாம் என்று அவர்கள் கருதினர்.

இருள் அழிவு
மற்றும் ஒரு சில அறிஞர்கள், கோள்களின் எரிபொருள் தீர்ந்து அவை வெறும் இருள் மண்டலங்களாய் மாறி ஓர் இருள் அழிவு ஏற்படலாம் என்றும் கூறப்பட்டது. ஹாவ்கிங் கதிர்வீச்சு விதப்படி, கருத் துளைகளும், கேலக்ஸியும் ஆவியாக தொடங்கும், இதன் விளைவாக, லெப்டோன் மற்றும் போட்டோன் ஆகிய நிறையற்ற துணிக்கைகள் மட்டுமே எஞ்சியுள்ள சடப் பொருளாக பிரபஞ்சம் காணப்படும் என்றும் கூறப்பட்டது.

நூறு பில்லியன் வருடங்களுக்கு பின்னர்
இன்றிலிருந்து 100 பில்லியன் வருடங்களுக்கு பின்னர் பெரிய உடைவு எனும் அழிவை பிரபஞ்சம் எதிர்கொள்ளும் எனக் கூறப்படுகின்றது. அதாவது வேகம் அதிகரித்து பிரபஞ்சம் விரிவடைய காரணமாக உள்ள டார்க் எனெர்ஜி எனும் கருஞ்சக்தி ஒரு கட்டத்தில் நின்று மறு பக்கம் திரும்பும் எனவும் இதனால் பிரபஞ்சம் சுருங்கி சடப்பொருள் உடைவு ஏற்படும் எனவும் இதன் அடர்த்தி அதிகமாகி வெப்பம் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகின்றது.

பிக் ரிப்
பிக் ரிப் எனப்படுவது, ஓர் நிலையில் நமது பிரபஞ்சம் மிக வேகமாக பெரிதாக விரிவடைந்து, ஈர்ப்பு சக்தி இழந்து ஒன்றுமில்லாததாக மாறிவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த கூற்றின் படி, பிரபஞ்சத்தில் எந்த நட்சத்திரமும், கோள்களும் எஞ்சாமல் அனைத்தும் அழிந்துவிடும் என்றும், இது நடக்க 16 பில்லியன் ஆண்டுகள் ஆகும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

முடிவிலி
இவ்வாறு உலகம் அழிய பல வழிகளை பலர் கூறி வந்தாலும். சிலர், பிரபஞ்சத்திற்கு அழிவே கிடையாது. எப்படி உலகில் பல உயிரினங்கள் தோன்றி மறையினும். உலகம் நிலையாக இருக்கிறதோ. அவ்வாறு, பிரபஞ்சத்தில் பல கோள்களும், நட்சத்திரங்களும் தோன்றி மறையினும் பிரபஞ்சம் அழியாது என்று கூறுகின்றனர்.

பல பிரபஞ்சங்கள் இருக்கிறதா?
பல கோள்களை கொண்ட நட்சத்திரம் (சூரியன் - சூரியக் குடும்பம்), பல சூரியக் குடும்பங்களை கொண்டுள்ள கேலக்ஸி, பல கேலக்ஸிகளை கொண்டுள்ள பால்வெளி மண்டலம், பல பால்வெளி மண்டலங்களை கொண்டுள்ள பிரபஞ்சம் என இருக்க. இதற்கு அடுத்து, பல பிராஞ்சம் இருக்குமாயின், நமது பிரபஞ்சத்திற்கும் அழிவு சாத்தியமாக இருக்கலாம்.

காலம் மிக தொலைவில் இருக்கிறது
நமது மனிதர்கள் நேற்று நடந்ததை மறந்துவிடுவார்கள், நாளை என்ன நடக்கும் என்பதை யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், இன்று என்ன செய்ய வேண்டும் என்பதை நினைக்கவே மாட்டார்கள். இன்னும் பல பில்லியன் ஆண்டுகள் கழித்து நடக்கலாம் என யூகிக்கப்படும் பிரபஞ்சத்தின் அழிவை பற்றி யோசிக்கும் நாம், அன்று நாம் இருக்க போவது இல்லை என்பதை மறந்துவிட்டோம். ஏனெனில், அதற்கு முன்பே நமது சூரியக் குடும்பம் அழிந்துவிடும் என்பதும் நமது ஆராய்ச்சியாளர்கள் அறிந்தது தான்.



Click it and Unblock the Notifications











