Latest Updates
-
Tamil Nadu Elections 2026: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 தொகுதிகள் என்னென்ன தெரியுமா? -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகத்தால் இந்த 3 ராசிகளுக்கு புது சொத்துக்கள் குவியப்போகுதாம்...! -
வீட்ல காய்கறி எதுவும் இல்லையா? டக்குனு இந்த பூண்டு மிளகு சாதத்தை செய்யுங்க... ஆரோக்கியமா, சுவையா இருக்கும்...! -
30 ஆண்டுக்கு பின் நிகழும் சனி-சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளை பணமும், புகழும் தேடிவரப்போகுதாம்...! -
கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி... இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க... சாதத்துக்கு பெஸ்ட் சைடிஷ் இதுதான்...! -
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க...
அடித்து ஆடுபவர்களை துரத்தி விரும்பிய நடிகைகள்!
என்னதான் நிறைய நடிகைகள் கிரிக்கெட் வீரர்களை விரும்பியிருந்தாலும், அதில் திருமணம் செய்துக் கொண்டவர்கள் எவ்வளவு பேர் என தேடினால், அமாவாசை இரவில் நிலவை தேடுவதை போல தான் இருக்கிறது.
பொதுவாகவே பெண்களுக்கு ஆக்ட்டிவாக இருக்கும் ஆண்களை பிடிக்கும். அதிலும் உலக புகழுடன், ஆடுகளத்தில் அடித்து ஆடும் ஆண்களை பிடிக்காமலா இருக்கும்.
சாதாரண பெண்களுக்கே இப்படி என்றால். நடிகைகள் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன? மட்டைப்பந்தாட்டக்காரர்கள் என்றால் நம் நாட்டு நடிகைகளுக்கு கொஞ்சம் அதிக விருப்பம்.
என்னதான் நிறைய நடிகைகள் கிரிக்கெட் வீரர்களை விரும்பியிருந்தாலும், அதில் திருமணம் செய்துக் கொண்டவர்கள் எவ்வளவு பேர் என தேடினால், அமாவாசை இரவில் நிலவை தேடுவதை போல தான் இருக்கிறது.
இன்னும் சிலரை நீங்கள் கண்டால், இந்த பூனை எல்லாமா பால் பாத்திரத்தை தேடியிருக்கிறது என்பது போல இருக்கும். சரி வாருங்கள் இனி கிரிக்கெட் வீரர்களை விரும்பி இந்திய நடிகைகளைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்...

விராத் கோலி - அனுஷ்கா ஷர்மா
தற்போதைய உலக கிரிக்கெட் பார்வையாளர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது இவர்களின் திருமணத்தைப் பற்றி தான். கடந்த சில வருடங்களாக லவ்வி வரும் இவர்கள், தற்போது உலகக்கோப்பை போட்டி நடந்து வருவதால் கொஞ்சம் வருத்தத்துடன் பிரிந்திருகின்றனர்.

யுவராஜ் சிங் - தீபிகா படுகோனே
தீபிகா படுகோனேவிற்கு ஒரு நல்ல ராசி இருக்கிறது, யாருடன் எல்லாம் இவர் கைகோர்த்து சுற்றுகிறாரோ அவர்களுக்கு எல்லாம் ஏழரை பிடித்துக் கொள்ளும். சில வருடங்களுக்கு முன்பு, யுவராஜ் சிங்கும், தீபிகா படுகோனேவும் காதலித்ததாக கூறப்படுகிறது. நமக்கு தெரிந்து சில வருடங்களாக தான் யுவராஜ்சிங்கும் படாத பாடுபட்டு இப்போது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறார். நாம் கூறுவது அவரது உடல்நிலைப் பற்றி மட்டுமே.

கங்குலி - நக்மா
தொலைக்காட்சி காரர்களுக்கு நன்கு விருந்தளித்த இரகசிய காதல் ஜோடி. இவர்கள் காதலித்தனரா இல்லையா என்பதே இன்றளவிலும் கேள்விக்குறியாக இருக்கிறது. இருவரும் நல்ல நண்பர்களாக பழகினார்கலாம். "நல்லா தெரிஞ்சுக்கோங்க அவங்க வெறும் நட்பா மட்டும் தான் பழகியிருக்காங்க..."

வாசிம் அகரம் - சுஷ்மிதாசென்
வாசிம் அக்ரம் வீழ்த்தியதிலேயே பெரிய விக்கெட் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென் தான். திருமணமே வேண்டாம் என்றிருந்தவரை காதலித்துவிட்டு கடைசியில் ஏனோ திருமணம் செய்துக் கொள்ளாமலேயே பிரிந்து விட்டது இந்த வயதான ஜோடி.

ஹர்பஜன் சிங் - கீதா பஸ்ரா
இவர்களை பற்றி பாலிவுட் முழுக்க பலவாறான கிசுகிசுக்கள் பரவினாலும். நாங்க வெறும் நண்பர்கள் தான் என அறிக்கை விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் ஹர்பஜன்சிங்.

ஜாகிர்கான் - இஷா ஷர்வாணி
இந்திய அணியின் முன்னாள் முன்னனி பந்துவீச்சாளரான ஜாகீர்கானும் இஷா ஷர்வாணியும் காதலித்ததாக பல விஷயங்கள் இருகின்றனர். அதற்கெல்லாம் முன், உங்களுக்கு இந்த இஷா ஷர்வாணி யார் என்று தெரியுமா? தமிழ் டேவிட் படத்தில் நடித்த க்யூட் பொண்ணுதான் இந்த இஷா ஷர்வாணி. ஆனால், இப்போது ஜாகிர்கான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார் என்பது முக்கிய செய்தி!

சுரேஷ் ரெய்னா - ஸ்ருதி ஹாசன்
உலக நாயகனின் மகளான ஸ்ருதியும் சுரேஷ் ரெய்னாவும் ஆந்திர மாநிலத்தில் புயல் கரை ஒதுங்கிய நேரம் பார்த்து காதல் வயப்பட்டனரோ என்னவோ வெகு சில நாட்களிலேயே பிரிந்துவிட்டது இந்த ஜோடி.

ஸ்ரீசாந்த் - ரியா சென்
ஸ்ரீநாத், ரியா சென் காதலும் கூட அவ்வளவு வலுவானதாக இல்லை. இவருக்கு சிரியாக பந்து போட தெரியாத காரணத்தினால். ஜோடி பாதியிலேயே பிரிந்து போய்விட்டது.



Click it and Unblock the Notifications











