For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரவல்லி, சூரவல்லி : ஆண்களை அடிமைப்படுத்தியிருந்த அல்லிராஜ்ஜியம் பற்றி உங்களுக்கு தெரியுமா!!

|

ஒரு காலத்தில் இன்றைய கொள்ளேகாலம் தாலுக்காவுக்கும், பவானி தாலுக்காவுக்கும் எல்லையில் உள்ள பாலாற்றங்கரையில் உள்ள நல்லூர் கோட்டை என்ற பகுதியை கொடிகட்டி ஆண்டனர் ஆரவல்லி, சூரவல்லி சகோதரியினர். இவர்கள் சாகா வரம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஞ்ஞானத்தோடு ஒத்துப்போகும் குலதெய்வ வழிபாடு!

இவர்களுக்கு பல்வரிசை என்றொரு மகள் இருந்தால். மிகவும் அழகானவள், அவளது நளினதிற்கும், கவர்ச்சிக்கும் மயங்காத ஆண்களே கிடையாது என்று கூறுவார்களாம். அப்பேர்ப்பட்ட அழகிக்கு திருமணம் செய்வதென்றால் லேசுப்பட்டக் காரியமா என்ன.

இந்தியா மற்றும் கிரேக்க நாடுகளுக்கு மத்தியில் இருக்கும் ஒரே மாதிரியானப் புராணக் கதைகள்!!!

பல்வரிசையை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்றால் ஆரவல்லி, சூரவல்லி வைக்கும் போட்டிகளில் வெற்றிப் பெற வேண்டும். இரும்பு குண்டை பொடியாக்க வேண்டும், இரும்பு கம்பியை ஒரே அடியில் மூன்றாக உடைக்க வேண்டும்,சேவல் கோழியோடு சண்டையிட்டு ஜெயிக்க வேண்டும் என்ற கடினமான போட்டிகளை வைத்து அதில் வெற்றி பெறுபவர் தான் பல்வரிசையின் கரம்பிடிக்க முடியும்.

ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் முடிந்தது பற்றி நீங்கள் கேட்டிராத கதை

இந்த போட்டியில் கலந்துக் கொண்டு பாதியிலேயே பின் வாங்கினாலோ அல்லது தோல்வியுற்றாலோ அடிமைகளாக சிறையில் அடைக்கப்படுவார்கள். இதன் காரணத்தினால் தான் இவர்களது இராஜ்ஜியம் அல்லி ராஜ்ஜியம் என்று கூறப்பட்டது. இவர்களுக்கு முடிவு கட்டவும் ஒரு நேரம் வந்தது, ஒரு வீரன் வந்தான்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

History About Aaravalli Sooravalli Sisters And Their Alli Raajiyam Rule

Do you know about the Aaravali Sooravalli Sisters and their alli raajjiyam rule? read here.
Desktop Bottom Promotion