Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
"13th FRIDAY" உலகை உலுக்கும் அமானுஷ்யம் - பின்னணி என்ன???
பயம் ஒருவருக்கு ஒருவர் வேறுப்பட்டு இருக்கும். சுடுகாட்டுக்கு நள்ளிரவில் சென்று வருபவர் கூட பல்லியை கண்டால் பயந்து நடுங்குவார்கள். கரப்பான்பூச்சியைக் கண்டு நடுங்குவோர் பேயே எதிரே வந்து நின்றால் கூட அலற மாட்டார்கள். காலையில் வீரனாக இருக்கும் சிலர், இரவு முனி லாரன்ஸ் போல பெட்டிப்பாம்பாக அடங்கிவிடுவார்கள்.
தூங்கும் போது ஆளை அமுக்கும் 'அமுக்குவான் பேய்' பற்றி தெரியுமா?
இதெல்லாம் ஒவ்வொருவருக்கு வேறுப்படும் பயம். இந்த வகையில் ஒன்று தான் உலகளவில் அனைவரும் அச்சம் கொள்ளும் "13th FRIDAY". ஏன்? எதனால்? எப்போதிருந்து இந்த பயம் நிலவுகிறது என்ற தெளிவான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. எனிலும், "13th FRIDAY" இந்த நாளை பெரும்பாலும் தீய சகுனமாக உலகளாவிய மக்கள் கருதுகிறார்கள்.
பேய் கனவுனா பயமா? கனவு பத்தி இந்த விஷயம் எல்லாம் உங்களுக்கு தெரியுமா!!
இதன் பின் அமானுஷ்யங்கள் இருக்கின்றனவா? அல்ல வரலாற்றில் நடந்த சம்பவங்களை கொண்டு இவ்வாறு கருதுகிறார்களா? அதிகபட்சம் வருடத்தில் மூன்று முறையும். குறைந்தபட்சம் 14 மாதங்களில் ஒருமுறையுமாவது இந்த "13th FRIDAY" வந்துவிடுகிறது.....

இந்த வருடம் மூன்று முறை
நடப்பு 2015ஆம் ஆண்டில் மட்டுமே 13ஆம் தேதி மூன்று முறை வெள்ளிக்கிழமைகளில் அமைந்துள்ளது. இம்மாதம் (நவம்பர்) கடந்த 13ஆம் தேதி அன்றும் மற்றும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தொடர்ந்து இரு முறையும் 13 தேதி வெள்ளிக்கிழமையில் வந்தது.

இது ஒருவிதமான அச்சம்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் பயம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் உலகளவில் இந்த "13 FRIDAY" வரும் நாட்களில் பயந்து நடுங்கும் ஆட்களும் பலர் இருக்கிறார்கள். ஏன் நீங்களே கூட அந்த பட்டியலில் ஒருவராக இருக்கலாம். இதற்கு "Paraskavedekatriaphobia" என்று பெயர், ஒருவகையான அச்ச உணர்வு. இந்த நாளின் போது மட்டும் அச்சம் கொள்வதை இவ்வாறு கூறுகிறார்கள்.

ஏன் இந்த அச்சம்
ராசிகள், கிறிஸ்தமஸ் கொண்டாட்டங்கள், மாதங்கள் என அனைத்தும் 12'டோடு முடிந்துவிடுவதால். நல்லது இதோடு முடிந்துவிட்டது. ஆகையால் 13 தீய சகுனமாக பார்க்கப்படுகிறதா என்ன? உலகளவில் பெரும்பாலானோர் 13-ஐ தீய சகுனமாக தான் பார்க்கிறர்கள்.

எங்கும் எதிலும்
13 எனும் தேதி மட்டுமின்றி, அரை எண், மாடி எண், ஏன் மருத்துவமனை அறை எண்ணாக இருந்தால் கூட சிலர் அச்சம் கொள்வதுண்டு,கெட்ட சகுனமாக கருதுவதுண்டு. வெளிநாடுகளில் விமான நிலையங்களில் 13வது வாயுள் வழியாக வரக் கூட சிலர் அச்சம் கொள்வது உண்டாம்.

மனோதத்துவ நிபுணர்
கார்நெல் பல்கலைகழக மனோதத்துவ நிபுணர் தாமஸ், "நமது மூளை முடிவுகள் எடுப்பதில் சிறந்து செயல்படுகிறது. ஏதனும் தருணம் அல்லது நாளில் நல்லது அல்லது கேட்டது நடந்தால் அதை அப்படியே பின்பற்றும் குணத்தைக் கொண்டுள்ளது. 13ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் அதே போல தான். பொதுவாகவே தீயது என்ற மனநிலை விளங்குவதால் தான், மக்கள் இந்த நாளை ஒதுக்குகிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.

பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்
அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் இந்த விஷயத்தில் மிகவும் கருத்தாக இருந்தவர். இவர் 13 தேதியில் எங்கும் பயணிக்க மாட்டார், 13 பேர் கொண்ட கூட்டத்தில் உணவருந்தமாட்டார். மேலும் நெப்போலியனுக்கு கூட 13ஆம் எண்ணில் பயம் இருந்ததாக கூறப்படுகிறது.

வட கரோலினா
அமெரிக்காவின் வட கரோலினா பகுதியில் இந்த 13 Friday அச்சத்தின் காரணமாக மட்டுமே அன்றைய நாளில் மட்டும் ஏறக்குறைய தொழில் ரீதியாக $900 மில்லியன் டாலர்கள் வர்த்தகத்தில் குறைவு ஏற்படுகிறதாம். இதற்கு காரணம் அன்றைய தினத்தில் தொழில் ரீதியான பரிவர்த்தனை செய்வதை தவிர்த்தல், பயணத்தை தவிர்த்தல், சாதாரண நாளில் செய்யும் வேலைகளை தவிர்த்தல் போன்றவை தான் என்று கூறப்படுகிறது.

அமானுஷ்யமா?
பெரும்பாலும் அமானுஷ்யம் என்று கூறும் வகையில் அப்படி ஏதும் இல்லை. ஆயினும் இந்த பெயரில் நிறைய திகில் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. சில வரலாற்று நிகழ்வுகள் இந்த நாளில் தோல்வியுற்று இருக்கின்றன. அதுவாக இருப்பினும், இதற்கெல்லாம் நமது மனநிலை மட்டுமே காரணம் என்பது தான் உண்மை!

அடுத்தது...
2016 மே மற்றும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதங்களில் அடுத்த "13th FRIDAY" வரவிருக்கின்றன. அன்று ஏதேனும் நடக்கவிருக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம். பொதுவாகவே மாதத்தின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமையில் வந்தால் அம்மாதத்தின் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் தான் வரும் என்பது குறிப்பிடத்தக்கது



Click it and Unblock the Notifications
