Latest Updates
-
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!
மனித உடலுக்குள் இருக்கும் தனித்தன்மையுடைய அதிசயங்கள் - அட உங்ககிட்டையும் இருக்கு பாஸ்!!!
ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒரு தனித்தன்மை இருக்கும். அது, கலையாக இருக்கலாம், திறமையாக இருக்கலாம். ஏன் சிலர் ஏமாற்றுவதில் கூட தனித்தன்மையுடன் திகழ்வார்கள். ஆனால், உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் ஐந்து விஷயங்களில் தனித்து விளங்குகின்றனர் என்ற அதிசயம் உங்களுக்கு தெரியுமா?
பெரிதான மார்பகங்களைப் பெற செயற்கை மார்பகங்களை பொருத்திய நடிகைகள்!!!
மனிதானாக பிறந்த ஒவ்வொருத்தரும் ஏதேனும் ஒரு விஷயத்தில் தனித்து விளங்க ஆசைப்படுவது உண்டு. இது, மனித இயல்பு தான். உங்கள் உடலில் உள்ள ஐந்து விஷயங்கள் உங்களை இந்த உலகில் உள்ள 700 கோடி மக்களுள் ஒருவராக தனித்து விளங்க செய்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்தியாவில் பாலியலை முக்கிய தொழிலாக வைத்து இயங்கி வரும் இடங்கள்!!!
அப்படி என்ன அதிசயம் உங்கள் உடலில் இருக்கிறது, அது என்ன ஐந்து விஷயங்கள் என்று கேட்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள் உங்களுக்கே தெரியும். அதன் பின் நீங்களும், "ஹே.. நானும் ரவுடி தான்.. நானும் ரவுடி தான் என்று காலரை தூக்கிவிட்டப்படி சொல்லிக் கொள்ளலாம்...

கருவிழி படலம்
உங்கள் விழித்திரையில் இருக்கும் கருவிழிப் படலம். நாம் சாதாரணமாக பார்க்கும் போது வெறுமென கருப்பு, பழுப்பு நிறங்களில் தான் கருவிழிப் படலம் தெரியும். சிலருக்கு நீல நிறத்திலும் தெரிவதுண்டு. ஆனால், ஆழ்ந்து பார்த்தால் அதனுள் ஒரு படலம் இருப்பதை நன்கு பார்க்க இயலும். உங்கள் கருவிழிப் படலம் இந்த உலகில் உள்ள எந்த ஒரு நபருடனும் ஒத்துப்போகாது.

நாக்கு
உங்கள் வாயில் இருக்கும் பாகங்களில் மிகவும் தனித்தன்மை உடையது உங்கள் நாக்கு தான். உங்கள் நாக்கின் அளவு, உருவம் மற்றும் மேற்பரப்பு அமைப்பு போன்றது வேறு எந்த நபருடனும் ஒத்துப்போகாது.

காது
உங்கள் காதுகளின் உருவம், அதாவது உங்கள் காதுகளில் வளைவு, நெளிவு கொண்ட அந்த வடிவம் உலகில் வேறு எந்த நபருடனும் ஒத்துப்போகாது. ஏன் சிலர் மேலோட்டமாக பார்த்து, காது உங்கள் அம்மா போல அல்லது அப்பாவை போல உள்ளது என்று கூறுவார்கள். ஆனால், உங்கள் காதின் வடிவம் யாருடனும் ஒத்துப்போகாது என்பது தான் உண்மை.

கை ரேகை
பொதுவாக நாம் அனைவரும் அறிந்தது தான் இது. உங்கள் கை ரேகையானது தனித்தன்மையானது மற்றும் தனி அமைப்புக் கொண்டது.

நடக்கும் பாணி
இது சிலருக்கு விசித்திரமாக இருக்கலாம், ஆனால் இது தான் உண்மை. நடக்கும் பாணி மிகவும் உன்னிப்பாக பார்த்தால் காலை அழுத்தி எடுப்பது, உயரம் எழும்புவது என சிற்சில விஷயங்களில் மாற்றம் நன்றாகவே தெரியும். இந்த ஐந்து விஷயங்களில் உள்ள தனித்தன்மை உங்கள் டி.என். ஏ'வால் கூட ஒரே மாதிரி அமைக்க முடியாது.



Click it and Unblock the Notifications
