Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
உங்களால் நம்பமுடியாத உடல் இணைப்புக்கள் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்கள்!
மனித உடல் மிகவும் விசித்திரமான ஓர் இயந்திரம். ஏனெனில் நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத அளவில், உடலின் ஒவ்வொரு பாகமும் மற்ற பாகத்துடன் தொடர்பு கொண்டிருக்கும். நம் அனைவருக்கும் அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் அருந்தினால் கல்லீரல் பாதிக்கப்படும் என்பதும், அதிகமாக புகைப்பிடித்தால் நுரையீரல் பாதிக்கப்படும் என்பது தெரியும். மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!
ஆனால் ஆணின் ஆள்காட்டி விரலைக் கொண்டு, ஆண்குறியின் அளவைச் சொல்ல முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? பைத்தியக்காரத்தனமாக உள்ளது தானே! ஆனால் அது உண்மையே. இதுப்போன்று இங்கு உங்களால் நம்பமுடியாத உடல் தொடர்புகள் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

கண்களும்.. மூளையும்..
கண்களுக்கு பின்னால் இருக்கும் இரத்த நாளங்களைக் கொண்டு, மூளையின் ஆரோக்கியத்தைச் சொல்ல முடியுமாம். அதிலும் கண்களில் உள்ள நரம்புகள் பரந்த அளவில் இருந்தால், அது ஒருவரின் IQ குறைவாக இருப்பதை காட்டுகிறது.

சருமமும்... இரத்த அழுத்தமும்...
ஒருவரின் சருமம் சுருக்கமின்றி இருந்தால், அவரது உடலில் இரத்த அழுத்தமானது கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு, இதய செயல்பாடும் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம். வயதானவர்களுக்கு வரும் நோய்கள் பற்றி ஆயும் துறை நடத்திய ஆய்வில் சருமத்தின் இளமைத்தன்மைக்கும், இதய நோய்க்கும் சம்பந்தமுள்ளது தெரிய வந்துள்ளது. அதனால் தான் வயதாகி சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும் போது, இரத்த அழுத்த பிரச்சனையும், இதய நோயும் அதிகம் வருகிறது.

குரலும்.. உயரமும்...
ஒருவரின் குரலைக் கொண்டே அவரது உயரத்தைக் கணிக்கலாம். மேலும் ஆய்வு ஒன்றில் ஒருவரின் உயரத்தை, அவரது குரலைக் கொண்டே கணிக்க முடியும் என்று சொல்கிறது. அதிலும் உரத்த குரல் உள்ளவர்கள் உயரமாகவும், மென்மையான மற்றும் தாழ்ந்த குரலைக் கொண்டவர்கள் சற்று உயரம் குறைவாகவும் இருப்பார்களாம்.

கைகளும்.. ஆண்குறியின் அளவும்...
2011 ஆம் ஆண்டு மேற்கொண்ட கொரியன் ஆராய்ச்சியில், மோதிர விரலை விட, ஆள்காட்டி விரல் சிறியதாக இருக்கும் ஆண்களின் ஆண்குறி பெரிதாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. நம்ப முடியவில்லை தானே!

பற்களும்... மனநிலையும்...
ஒருவரது பற்கள் அவர்களின் நினைவுத்திறன் மற்றும் மனநிலையை வெளிக்காட்டுமாம். இது எந்த ஒரு ஆய்விலும் நிரூபிக்கப்படாவிட்டாலும், மன வீழ்ச்சியின் போது வாய் ஆரோக்கியம் மோசமாகலாம் அல்லது மெல்லுவதற்கு சிரமமாக இருக்கும் போது மூளை பாதிப்பு ஏற்படலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கால்களும்... விறைப்புத்தன்மையும்...
பெண்களை விட ஆண்கள் தான் அதிக கால் சம்பந்தப்பட்ட பிரச்சனையால் அவஸ்தைப்படுவார்கள். இதற்கு அவர்கள் அதிகம் நடப்பதையும், கால்களுக்கு போதிய ஓய்வு அளிக்காமல் இருப்பதையும் காரணம் சொல்லலாம். ஆண்களுக்கு கால் பிரச்சனைகள் இருக்கும் போது, அதனை ஆரம்பத்திலேயே சரிசெய்யாவிட்டால், அதனால் விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படும் வாய்ப்புள்ளது. ஏனெனில் போதிய ஓய்வு கிடைக்காததால், நல்ல மனநிலையை உணர வைக்கும் டோபமைன் என்னும் கெமிக்கல் குறைவாக இருக்கும்.

தூக்கமும்... கண்களும்...
உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை மற்றும் இதர காரணங்களால் தூக்கமின்மையால் ஏராளமான மக்கள் அவஸ்தைப்படுகிறார்கள். தூக்கத்தின் போது மூச்சுத்திணறல் உள்ள மக்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாக கண் நோய்கள் உருவாவதோடு, அதன் காரணமாக கண் பார்வையை இழப்பது, குளுக்கோமா போன்றவை வரும் வாய்ப்புள்ளது.

உதடுகளும்... ஞாபக சக்தியும்...
உங்கள் உதடுகளில் புண்களும், வெடிப்புக்களும் அதிக அளவில் ஏற்படுமாயின், உங்களுக்கு அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோய் வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று அர்த்தம். மேலும் ஆய்வு ஒன்றிலும், யாருக்கு அதிகமாக வைரஸ் தொற்றுகள் ஏற்படுகிறதோ, அவர்களின் அறிவாற்றன் திறன் மோசமாக இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.



Click it and Unblock the Notifications
